மனசை லேசா வச்சுக்கங்க! | Tamil Motivational Stories

 மனசை லேசா வச்சுக்கங்க!


சில பேர் சொல்வாங்க.. மனசுக்கு கஷ்டமா இருக்குங்கன்னு.. அது தேவையே இல்லைங்க. மனசை எப்பவுமே லேசா வச்சுக்கங்க.. வருவதுதான் வரும், நடப்பதுதான் நடக்கும். இந்த வாழ்க்கையில் எதையுமே நாம தடுக்க முடியாது. வருவதை எதிர்கொண்டு சிறந்த முறையில் வாழ்வதே புத்திசாலித்தனம். எனவே எதற்காகவும் மனசை கஷ்டமா வச்சுக்காதீங்க. மாறாக லேசா வச்சுக்கங்க.


எது நடந்தாலும் நன்மைக்கே என்று நினைத்துக் கொள்ளுங்கள். காரண காரியம் இல்லாமல் எந்த செயலும் நடப்பதில்லை. நம்முடைய சந்தோசம் நம் கையில் உள்ளது. எது நடந்தாலும் நீங்கள் அதற்காக கவலைப்படாதீர்கள். நீங்கள் மனம் வருந்தினால் உங்கள் துணை மற்றும் உங்கள் குடும்பத்தாரும் கவலைப்படுவர். வாழ்க்கையில் ஆயிரம் பிரச்சினைகள் வந்தாலும் மனம் தளராது அதில் வெற்றிப் பெறுபவனே சிறந்த மனிதன்.


மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ். பிரச்சினைகளை நினைத்து எப்பொழுதும் வருந்தாமல் சிறிது நேரம் உங்களுக்குப் பிடித்த இசையைக் கேளுங்கள். மனம் லேசாகும். தியானம் யோகா போன்றவைகளைச் செய்யுங்கள். இது உங்கள் மனதிற்கு அமைதி தரும். பிரச்சினையில்லாத மனிதன் ஏது இவ்வுலகில். உங்களுக்குக் கீழிருக்கும் மனிதரை நினைத்துப் பாருங்கள். அவர்களை நினைத்துப் பார்க்கும் போது பரவாயில்லை நான் சிறப்பாகத் தான் இருக்கிறேன் என்று நினைப்பீர்கள். 


பிரச்சினை என்னும் குப்பைகளைத் தூக்கி எறிந்து விட்டு மனம் என்னும் பூங்காவனத்தில் அழகிய மலர்களை உருவாக்குங்கள். மனம் மகிழ்ச்சியாக இருந்தால் எல்லா செயல்களையும் எளிதில் செய்து முடிக்கலாம். மனசை லேசா வச்சுக்கங்க மகிழ்ச்சியாக இருங்கள்.

Comments

Popular posts from this blog

பெண்ணுறுப்பு பகுதியில் தோல் உரிவது ஏன் தெரியுமா...?

சிறந்த உடலுறவுக்கான குறிப்புகள்!

ஆடை இல்லாமல் தூங்குவதால் ஏற்படும் மாற்றங்கள்!