தீவிரமாக கனவு காணுங்கள்.. அது தீரும் வரை உறுதியோடு இருங்கள்! | Tamil Motivational Stories

 தீவிரமாக கனவு காணுங்கள்.. அது தீரும் வரை உறுதியோடு இருங்கள்!



மரணமே இல்லாத ஒரு நிலையில் இருப்பது போல நினைத்துக் கொண்டு தீவிரமாக கனவு காண வேண்டும். 


அப்படிக் காணும் கனவு நனவாக, நாளையே இந்த உலகம் முடியப் போவதாக நினைத்துக் கொண்டு உழைக்க வேண்டும். 


கடும் உழைப்பே கனவுகள் நனவாக கை கொடுக்கும்.


கனவு காணுங்கள். கனவுகளை நனவாக்கவும் அயராது பாடுபடுங்கள். 


நினைவுகளை நிஜங்களாக மாற்றுங்கள். 


உங்கள் கனவுகளுக்கு உயிர் கொடுங்கள். 


வீடு வாங்க விரும்புகிறீரா கார் வாங்க விரும்புகிறீரா இல்லை வெளிநாடு செல்ல விரும்புகிறீரா எந்த கனவாக இருந்தாலும் அந்த கனவை அடைவதற்கான முயற்சியில் நாம் ஈடுபட வேண்டும். 


இலக்குகளை அடைய சரியான திட்டமிடல் அவசியம். இலக்குகளை நோக்கி உங்கள் கவனத்தைச் செலுத்துங்கள்.


கல்லும் முள்ளும் நிறைந்த பாதையாக இருந்தாலும் அதற்கெல்லாம் அஞ்சாமல் உங்கள் கனவுகளை எதிர்நோக்கி நடை போடுங்கள். 


கனவு நனவாகவில்லையே என்று வருந்தாமல் அக்கனவை நனவாக்க நீங்கள் என்ன முயற்சி செய்தீர்கள் என்று சிந்தித்துப் பார்க்க வேண்டும். நான் அம்பானி ஆகப் போகிறேன் என்று கனவு காண்பதில் தவறில்லை. 


ஆனால் அந்த நிலையை அடைய அதீத முயற்சி தேவை. நான் நிச்சயம் என் கனவை அடைந்தே தீருவேன் என்ற நம்பிக்கை உங்களுக்கு இருந்தால் மட்டுமே அதில் நீங்கள் வெற்றி பெற இயலும். 


கனவுகள் நம்முடைய எதிர்காலத்தை நிர்ணயிக்கக் கூடியவை. கனவுகளுக்கும் சக்தி உண்டு என்பதை நாம் உணர வேண்டும். 


முயன்றால் மனிதனால் முடியாது என்று எதுவுமில்லை. 


எண்ணங்கள் வளரட்டும். கனவுகள் விரியட்டும். 


கனவுகள் அனைத்தும் நனவாகும் நாள் வெகு தொலைவில் இல்லை. 


கனவுகளை நோக்கி வெற்றி நடை போடுங்கள்.


Comments

Popular posts from this blog

பெண்ணுறுப்பு பகுதியில் தோல் உரிவது ஏன் தெரியுமா...?

சிறந்த உடலுறவுக்கான குறிப்புகள்!

ஆடை இல்லாமல் தூங்குவதால் ஏற்படும் மாற்றங்கள்!