உலக மக்கள் இந்தியாவை கண்டு வியக்கும் 25 சுவாரஸ்யமான உண்மைகள்!
உலக மக்கள் இந்தியாவை கண்டு வியக்கும் 25 சுவாரஸ்யமான உண்மைகள்! இந்தியா மனித இனத்தின் தொட்டில், மனித பேச்சுக்களின் பிறப்பிடம், வரலாற்றின் தாய், புராணக்கதைகளின் பாட்டி. மனித வரலாற்றில் நமது மிக மதிப்புமிக்க பொக்கிஷமாக இந்தியா உள்ளது. உலக மக்கள் இந்தியாவை கண்டு வியக்கும் 25 சுவாரஸ்யமான உண்மைகள்! இந்த வார்த்தைகள் எல்லாம் மார்க் ட்வைன் என்பவர் கூறிய வார்த்தைகள் ஆகும். அப்படியாக உலக நாடுகள் இந்தியாவை மிகவும் தொன்மை வாய்ந்த தேசமாக பார்க்கின்றன. இந்தியா குறித்த கதைகளே ஐரோப்பியர்களுக்கு இந்தியா மீது அதிக மோகத்தை ஏற்படுத்தியது. அப்படி பட்ட நம் தேசத்தில் சுவாரஸ்யமான சில உண்மைகளை இப்போது பார்ப்போம். 01.மிதக்கும் தபால் நிலையம் 1,55,015 க்கும் அதிகமான தபால் நிலையங்களை கொண்ட உலகின் மிகப்பெரிய தபால் வலையமைப்பை கொண்ட தேசமாக இந்தியா உள்ளது. அதன்படி பார்த்தால் சராசரியாக ஒரு தபால் நிலையம் 7,175 மக்களுக்கு சேவை செய்கிறது. 2011 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஸ்ரீ நகரில் உள்ள தால் ஏரியில் ஒரு மிதக்கும் தபால் அலுவலகம் திறக்கப்பட்டது. 02.கும்ப மேளா கூட்டத்தை விண்வெளியில் இருந்து பார்க்கலாம். கும்ப மேளா என்பது இந்...