ஷிவானி.. இன்னும் சிலிர்க்க வைக்கலையே.. ஆனால் நல்லா சிணுங்குகிறார்!


சென்னை: இன்ஸ்டாகிராம் மூலமாக ரசிகர்களின் மனதில் பசைபோல ஒட்டிக் கொண்டிருந்த ஷிவானி தற்போது இன்ஸ்டாகிராமில் இல்லாவிட்டாலும் பிக்பாஸ் வீட்டில் நல்ல ஆட்டம் போட்டுக் கொண்டு இருக்கிறார். ஆனால் பாப்பா இன்னும் பார்முக்கு வராமலேயே இருப்பதுதான் ரசிகர்களை சோகமாக்கியுள்ளது.

ஏன் இந்த பொண்ணு இப்படி இருக்கு... இந்நேரத்துக்கு நல்லா பொங்கியிருக்கணுமே என்று சொல்லும் அளவிற்கு அமைதியின் சொரூபம் ஆக எந்த பிரச்சனைகளிலும் என்ட்ரி ஆகாமல் ஒதுங்கியே இருந்து கொண்டிருக்கிறார்.

அதுவும் இந்த வாரம் இவர் எலிமினேஷன் லிஸ்டில் இருப்பதால் இவருடைய ரசிகர்கள் கொஞ்சம் அதிர்ச்சி அடைந்து இருக்கிறார்களாம். இன்ஸ்டாகிராமில் நாலு மணிக்கு போஸ்ட் போட்டு நாலு மணி ஷிவானி ஜாலியாக இருந்தார்.


நம்ம ஷிவானியா இது

ஆனால் இந்த வீட்டிற்குள் ஷிவானி இருக்கிற இருப்பைப் பார்த்த ரசிகர்கள்.. அவரா இவர் என்று யோசித்து வருகிறார்களாம். இவர் இந்த வீட்டிற்குள் செல்வதற்கு முன்பு கூட ஷிவானியின் ரொட்டீன் ஒர்க் என்று ஒரு வீடியோவை வெளியிட்டிருந்தார் . அதுகூட வைரலாகி வந்தது. ஆனால் அதில் அவருடைய ஆட்டத்தையும் ஜாலியான போட்டோக்களையும் பார்த்ததும் ரசிகர்கள் இவரை ரொம்ப ஜாலி டைப் என்று நினைத்திருக்கிறார்கள். ஆனால் எல்லாமே புஸ் ஆகி விட்டது.

வாயை திறக்க மாட்டேங்குதே

இந்த வீட்டிற்குள் இவர் வாயை திறந்து பேசினாலே அபூர்வம் என்று சொல்லுமளவிற்கு இருப்பதை பார்த்து அங்கு இருக்கும் போட்டியாளர்கள் முதல் ரசிகர்கள் வரை என்னடா இந்த பொண்ணு இப்படி இருக்கு என்று தான் கூறி வருகிறார்கள் . அதுவும் போட்டியாளர்கள் இவருக்கு இரண்டு முறை ஹாட் பிரேக் சிம்பிளை குத்தும் போதும் அதற்கு எல்லோரும் சொல்லும் ரீசன் இவர் எல்லாரிடமும் மிங்கிள் ஆகாமல் இருக்கிறார் என்றுதான். ஆனாலும் இவர் அவருடைய ஆக்டிவை மாற்றுவது போல் இல்லை போல.


இழுத்து வைத்து பேசிய ஆரி

பிக் பாஸ் வீட்டில், ஆட்டம் பாட்டத்திற்கும் சண்டை சச்சரவுக்கும் எந்த சீசனிலும் குறை ஏதும் கிடையாது .அந்த மாதிரிதான் எந்த சீசனிலும் காலை ஆரம்பித்ததும் ஆட்டத்தோடு ஆரம்பிக்கிறார்கள் .அதற்கு பிறகு சமையல்கட்டு தொடங்கி ஆங்காங்கு இருந்து கொண்டு சண்டை பஞ்சமில்லாமல் தான் போய்க் கொண்டிருக்கிறது. இவர் இப்படி அமைதியாக இருப்பதை பார்த்து அந்த வீட்டிற்குள் இருக்கும் ஆரி இவருக்கு இரவு நேரத்தில் அட்வைஸ் கொடுத்துக் கொண்டிருக்கிறார் .

ஷிவானி வாயில் சப்பாத்தி

இந்த வீடியோக்கள் வைரலாக பரவி வருகிறது . பிக்பாஸ் ப்ரமோவில் கூட கமலஹாசன் கூறியிருப்பார் . நீங்கள் பார்ப்பது வேறு ஆனால் இவர்கள் இந்த வீட்டிற்குள் இருப்பது வேறு என்று அந்த மாதிரிதான் தெரிகிறது. ஷிவானியை பார்க்கும் போதும் இந்த வீட்டிற்குள் இரவு நேரத்தில் இவர் சப்பாத்தி சாப்பிட்டுக்கொண்டு ஆரியுடன் பேசிக் கொண்டிருக்கிறார் அவர் ஷிவானிக்கு அட்வைஸ் பண்ணி கொண்டிருக்கிறார் . அதுவும் ஒரு சின்ன குழந்தைக்கு சொல்வது போல அட்வைஸ் பண்ணி கொண்டு இருக்கிறார்.


இப்படி கலாய்க்கிறியேம்மா

அவர் கஷ்டப்பட்டு பீல் பண்ணி இவருக்கு அட்வைஸ் பண்ணி கொண்டு இருக்கும்போது அவர் கூலாக அவரிடம் கிண்டலும் பண்ணியிருக்கிறார். அதை பார்த்து ரசிகர்கள் என்னம்மா இந்த மனுஷன் உனக்காக ராத்திரி 12 மணி கூட பாக்காம பேசிகிட்டு இருக்காரு நீங்க நல்ல சாப்பிட்டு கிட்டு அவரை கலாய்ச்சு இருக்கீங்களா அப்படின்னு கமெண்டுகளை போட்டிருக்கிறார்கள் . ஆரி ஷிவானியிடம் சாப்பிடாமல் இருக்கக் கூடாது . நம்ம வீட்டுல நம்ம கூட அம்மா இருப்பாங்க சொந்தக்காரங்க இருப்பாங்க அவங்க நம்மளை பார்த்துபாங்க.


உடம்பு முக்கியம் பாப்பா

இப்படி தனியா இருக்கும்போது நம்மள நாம்தான் கவனிச்சாகனும். அதனால நேரத்துக்கு சாப்பிடணும் நேரத்திற்குச் சாப்பிட்டால்தான் உடம்பில் புத்துணர்ச்சி இருக்கும். அப்பதான் மைண்ட் ப்ரீயா இருக்கும் எல்லாரிடமும் பேசி பழக முடியும். நீ இந்த மாதிரி தனியாவே இருக்காத என்று கூறிக் கொண்டிருக்கிறார். எதனால் அடிக்கடி இப்படி மூட் அப்செட் ஆக இருக்கிறார் என்று கேள்வி கேட்டு இருக்கிறார். இந்த வீட்டில் இருப்பவர்கள் திடீரென்று ஏதாவது பேசுவது எனக்கு மனசுக்கு கஷ்டமாக இருக்கிறது அதனால் நான் யாரிடமும் பேசாமல் இருக்கிறேன் என்று கூறுகிறார்.

ஜாலியா சகஜமா

அதற்கு அவரும் இந்த மாதிரி எல்லாம் இருக்க கூடாது நீ இன்னும் நிறையா வளரணும் சினிமாவில் சாதிக்க நினைக்கிறது தானே உன்னோட ஆசை அதற்காகத்தான நீ சினிமாவுக்கு வந்த. அதனால சினிமால இந்த பீல்டுல வந்தால் அங்கே இருக்குறவங்க கூட சகஜமாக பேசி பழக வேணும். அப்பதான் உனக்கு ஒரு நல்ல எதிர்காலம் கிடைக்கும். நம்முடைய வாழ்க்கையில் நம்ம ஓடிக்கொண்டே இருந்தால்தான் ஜெயிக்க முடியும் என்று அறிவுரை கூறிக் கொண்டிருக்கிறார்.

வாயைப் பாரு வாயை

அதற்கு கூலாக வாய் நிறைய சப்பாத்தியை வைத்துக்கொண்டு நமக்குதான் பிக்பாஸில் இன்னும் டாஸ்க் கொடுக்கலையே அப்புறம் எப்படி நம்ம ஓடுகிறது என்று கலாய்க்கிறார் . அதை சற்றும் எதிர் பாராத ஆரி நான் உன்கிட்ட இவ்ளோ கஷ்டப்பட்டு பேசிகிட்டு இருக்கேன் நீ என்ன இந்த நேரத்துல கலாய்க்கிறீயா சிரித்துக் கொண்டிருக்கிறார். இந்த வார எலிமினேஷன் ரவுண்டில் இவரது பெயர் இருக்கும் நிலையில் இவர் இன்னும் எந்த ஒரு சேஞ்ச்சும் பண்ணாமல் அப்படியே தான் இருந்து கொண்டிருக்கிறார்.

கலாய்க்கிறாங்களே

இது சக போட்டியாளர்கள் மட்டுமல்ல இவருடைய ரசிகர்களையும் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது. அதுமட்டுமல்லாமல் இவர் கண்மணி அன்போடு காதலன் பாடிய பாடலும் அதற்கு மொட்டை சுரேஷும் இவரும் சேர்ந்து காட்டிய எக்ஸ்பிரஸ்னையும் பார்த்து பல மீன்ஸ் கிரியேட்டர்கள் கலாய்ச்சு தள்ளி வருகிறார்கள் .அது மட்டுமல்லாமல் பல வீடியோக்களும் இவரைப் பற்றி மீண்டும் விஸ்வரூபமாக வைரலாகி கொண்டிருக்கிறது.

Comments

Popular posts from this blog

பெண்ணுறுப்பு பகுதியில் தோல் உரிவது ஏன் தெரியுமா...?

சிறந்த உடலுறவுக்கான குறிப்புகள்!

ஆடை இல்லாமல் தூங்குவதால் ஏற்படும் மாற்றங்கள்!