கொண்டாட்ட புகைப்படங்களை வெளியிட்ட பிரசன்னா..! குவியும் ரசிகர்கள் வாழ்த்து..!
2000ம் ஆண்டு மலையாளத்தில் அனில்-பாபு இயக்கிய இங்கனே ஒரு நீலபக்ஷி படத்திற்கான ஹீரோயின் தேர்வு நடைபெற்ற போது சினேகாவின் பெயரை பாசில் நஜீம் பரிந்துரை செய்துள்ளார்.
இந்த படத்தில் டான்சராக வந்து சினிமா உலகிற்கு அறிமுகமான சினேகா.
முதல் படத்திலேயே 7 கர்நாடக பாடல்களுக்கு நடனமாடினார்.
அதே ஆண்டு தமிழில் சுசி கணேசன் இயக்கிய விரும்புகிறேன் படத்தில் நடிக்க ஒப்பந்தமான சினேகா, தொடர்ந்து என்னவளே, ஆனந்தம், பார்த்தாலே பசிதீரும் உள்ளிட்ட பல படங்களில் நடித்தார்.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என தென்னிந்திய மொழிகளில் சுமார் 30க்கும் மேற்பட்ட நடித்துள்ள சினேகா, அச்சமுண்டு அச்சமுண்டு என்ற படத்தின் ஆங்கில பதிப்பிலும் நடித்துள்ளார்.

இந்த படத்திற்காக சிறந்த நடிகைக்கான பிலிம்பேர், எடிசன் மற்றும் குளோபல் விருதுகளையும் பெற்றார். சிறந்த நடிகைக்கான பிலிம்பேர், நந்தி, தமிழக அரசு விருது உள்ளிட்ட பல விருதுகளை சினேகா பெற்றுள்ளார்.
பல விளம்பர படங்களிலும் நடித்துள்ள சினேகா, 2012ம் ஆண்டு நடிகர் பிரசன்னாவை திருமணம் செய்து கொண்டார்.

தற்போது இந்த தம்பதிகளுக்கு, ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர்.
இந்நிலையில் தற்போது நடிகர் பிரசன்னா, சினேகா பிறந்தநாள் கொண்டாடிய புகைப்படங்களை வெளியிட, ரசிகர்கள் பலர் தொடர்ந்து அவருக்கு வாழ்ந்து தெரிவித்து வருகிறார்கள்.
Comments
Post a Comment