தாய்ப்பால் கட்டிக் கொண்டால் பின்பற்ற வேண்டிய 7 வழிகள்!


குழந்தையை சுகமான சுமையாக கருவில் சுமந்து பத்து மாதங்களுக்கு பிறகு, பிரசவ வலியை தாங்கி குழந்தையை பெற்றால் இதுவரை ஏற்பட்ட மாற்றங்கள் சரியாகி விடும், ஆனால் புதிய மாற்றங்களை பெறுவீர்கள். குழந்தைக்கு முதன் முதலில் சுரக்கும் தாய்ப்பாலை கொடுக்க வேண்டியது அவசியம். இதில் குழந்தைக்கு தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களும் நிறைந்திருக்கும். குழந்தை சரியாக பால் குடிக்கவில்லை என்றால், தாய்மார்களுக்கு பால் கட்டிக்கொள்ளுதல் பிரச்சனை ஏற்படும். இது அவர்களுக்கு அதிக வலியை ஏற்படுத்தும். இங்கு தாய்ப்பால் கட்டிக் கொண்டால் செய்ய வேண்டியவற்றை பார்க்கலாம்.

1.வெந்நீர்


வெந்நீர் வைத்து மார்பக திசுக்களை மென்மையாக மசாஜ் செய்து தாய்ப்பாலை வெளியேற்ற முயற்சிக்கலாம். இது மார்பில் ஏற்படும் வலியை குறைக்கவும் உதவுகிறது.

2.கற்றாழை


இரண்டு கப் தண்ணீரை கொதிக்க வைத்து, அதனுடன் கற்றாழை சேர்த்து 10 முதல் 15 நிமிடங்கள் விடவும். பின் சுத்தமான துணியை நீரில் நனைத்து மார்பகத்தில் தடவி 15 நிமிடங்கள் விடவும். இது கட்டிக் கொண்டிருக்கும் தாய்ப்பாலை வெளியேற்ற உதவும்.

3.தேங்காய் எண்ணெய்

இதை தாய்ப்பால் கட்டிக் கொண்டிருக்கும் மார்பகம், அக்குள் பகுதியில் தேய்த்து மசாஜ் செய்யவும். மார்பக காம்புகளில் இருக்கும் காயங்களிலும் தேங்காய் எண்ணெய் நல்ல பலன் தரும்.

4.உருளைகிழங்கு

தேங்காய் எண்ணெய் மார்பகங்களால் உறிஞ்சப்பட்டவுடன், மெல்லியதாக நறுக்கிய உருளைக்கிழங்கை தாய்ப்பால் கட்டிக் கொண்டிருக்கும் மார்பகத்தின் மீது வைக்கவும். அதன் மீது உள்ளாடை அல்லது துணியை அணிந்து அப்படியே 1 மணிநேரம் வைக்கவும். வேண்டுமானால் உருளைக்கிழங்கை மாற்றி கொள்ளலாம்.

5.பால் கொடுத்தல்

குழந்தையை படுக்கையில் படுக்க வைத்து, விலங்குகள் பாலூட்டுவதை போல் குனிந்து கொள்ள வேண்டும். உங்கள் மார்பக காம்புகள் குழந்தையின் வாயில் இருக்கும் படி பால் கொடுக்கவும். இது ஈர்ப்பு விசையின் காரணமாக உங்கள் வலியை குறைக்க உதவும்.

6.அன்னாசிப்பழம்

தினமும் 1 கப் அன்னாசி பழச்சாறு குடிக்கவும். அன்னாசியில் உள்ள ப்ரோமெலைன் வீக்கத்தை குறைக்கவும் மற்றும் அடைத்து இருக்கும் மார்பக குழாய்களை இயல்பு நிலைக்கு கொண்டு வரவும் உதவுகிறது.

7.பூண்டு

மசிக்கப்பட்ட பூண்டு பற்களை ஒவ்வொரு இரண்டு மணி நேரத்திற்கு ஒரு முறையும் வலி போகும் வரை சாப்பிடுங்கள். உங்களால் பூண்டை நேரடியாக சாப்பிட முடியவில்லை எனில், அதனுடன் சிறிதளவு தேன் மற்றும் தண்ணீர் சேர்த்து ஊறவைத்து சாப்பிடலாம்.

Comments

Popular posts from this blog

பெண்ணுறுப்பு பகுதியில் தோல் உரிவது ஏன் தெரியுமா...?

சிறந்த உடலுறவுக்கான குறிப்புகள்!

ஆடை இல்லாமல் தூங்குவதால் ஏற்படும் மாற்றங்கள்!