தலைச் சுற்றல், மயக்கம், மன நோய், நெஞ்சு எரிச்சல், மார்பு வலி, வாயுத் தொல்லை, பித்தம், வயிற்றுப் பொருமல், கல்லீரல் கோளாறு, நரம்புத் தளர்ச்சி என்பன குணமாக சீரகத்தை இப்படி பயன்படுத்துங்க!!


* சீரகத்தை வாயில் போட்டு, குளிர்ந்த தண்ணீரை குடித்தால், தலைச் சுற்றல், மயக்கம் நீங்கி விடும்.

* திராட்சை ஜூஸுடன், சீரகம் கலந்து பருகி வர, ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தலாம்.

* அகத்திக்கீரையுடன், சீரகம், சின்ன வெங்காயம் சேர்த்து கஷாயம் செய்து சாப்பிட்டு வந்தால், மன நோய் குணமாகும்.

* சீரகத்துடன் கொஞ்சம் வெல்லம் சேர்த்து, கொட்டைப்பாக்கு அளவு சாப்பிட்டு வந்தால், நெஞ்சு எரிச்சல் குணமாகும்.

* சீரகத்துடன் எலுமிச்சை சாறு கலந்து உலர்த்தி, துாளாக இடித்து, ஒரு டப்பாவில் வைத்துக் கொள்ள வேண்டும். இதை, தினமும் ஒரு டீஸ்பூன் வீதம் சாப்பிட்டு, மோர் குடித்து வந்தால், மார்பு வலி நீங்கும்.

* மோருடன் சீரகம், இஞ்சி, சிறிது உப்பு சேர்த்து பருகினால், வாயுத் தொல்லை நீங்கும்.

* சீரகத்தை இஞ்சி மற்றும் எலுமிச்சம் பழ சாற்றில் கலந்து, ஒருநாள் ஊற வைத்துக் கொள்ளவும். இதை, தினம் இருவேளை வீதம், மூன்று நாட்கள் சாப்பிட்டு வர, பித்தம் குறையும்.

* சுக்கு, சீரகம், மிளகு, திப்பிலி ஆகியவற்றை பொடித்து, தேனில் கலந்து சாப்பிட்டால், எல்லா உடல் உள் உறுப்புகளையும் சீராக இயங்கச் செய்யும். உடலுக்கு குளிர்ச்சியும், தேகத்தை பளபளப்பாக வைக்கும் ஆற்றலும் சீரகத்திற்கு உண்டு.

* சிறிது சீரகத்துடன், இரண்டு வெற்றிலை, நான்கு மிளகு சேர்த்து மென்று தின்று, ஒரு டம்ளர் குளிர்ந்த நீர் பருகினால், வயிற்றுப் பொருமல் போய்விடும்.

* சிறிது சீரகத்துடன், கீழாநெல்லி வைத்து அரைத்து, எலுமிச்சை சாறுடன் சேர்த்து பருகி வர, கல்லீரல் கோளாறு குணமாகும்.

* சீரகத்தை லேசாக வறுத்து, அத்துடன், கருப்பட்டி சேர்த்து சாப்பிட்டு வர, நரம்புகள் வலுப்பெற்று, நரம்புத் தளர்ச்சி குணமாகும்.

*சீரகத்தை துாள் செய்து, தேனுடன் கலந்து லேகியமாக தர, ஒல்லியாக இருப்பவர்கள், குண்டாவர்.

Comments

Popular posts from this blog

இரவு நல்ல தூக்கம் வேண்டுமா? சாப்பிட வேண்டிய மற்றும் தவிர்க்க வேண்டிய உணவுகளை அறிந்துகொள்ளுங்கள்..!

பெண்ணுறுப்பு பகுதியில் தோல் உரிவது ஏன் தெரியுமா...?

சிறந்த உடலுறவுக்கான குறிப்புகள்!