மார்பகங்கள் தொங்காமல் சிக்கென வைத்துக்கொள்வது எப்படி?... அதுவும் செலவே இல்லாமல்...
அழகான கவர்ச்சி நிறைந்த பெண்கள் என்று கணிக்கச் செய்யும் போது முன்னழகும், பின்னழகும் நிச்சயம் இடம்பெறும் உரிய பராமரிப்பு இருந்தால் நீங்களும் சிறந்த அழகியாக வலம் வரலாம்.
எப்போதும் தங்களை அழகுப்படுத்திக் கொள்வதிலும் அழகாய்க் காட்டுவதிலும் விருப்பமிக்கவர்கள் பெண் கள். உச்சி முதல் பாதம் வரை ஒவ்வொரு உறுப்பையும் தனித்தனியாக பராமரிக்கும் அளவுக்கு பொறுமை சாலிகள்.
கனக்கச்சிதமாக உடல் உறுப்புகள் வெளியில் தெரியவேண்டும் என்று நினைக்கும் பெண்கள் அனைவருக் குமே மார்பகங்கள் எடுப்பாக அமைய வேண்டும் என்ற எண்ணம் இருக்கும்.
பெண்களின் முன்னழகும், பின்னழகும் எதிர்ப்பாலினரை மட்டும் அல்ல சமயங்களில் பெண்களையும் பொறாமைக்குள்ளாக்கும். அதனால் தான் மார்பகங்கள் தளர்ந்துவிடாமல் எப்போதும் சிக்கென்று எடுப்பாக இருக்க வேண்டும் என்று பெரும்பாலான பெண்கள் குறிப்பிட்டு தனிக்கவனம் செலுத்துவார்கள்.
ஆனால் சில பெண்கள் மார்பை எடுப்பாக காட்டும் உள்ளாடைகளைத் தேர்வு செய்வதில் போதிய விழிப் புணர்வு இன்றி இருப்பதால் அவர்களால் முழுமையான அதன் அழகை வெளிப்படுத்த முடிவதில்லை.உணவு மற்றும் உரிய பயிற்சிகள் மூலம் மார்பகங்களை எடுப்பாக செய்து பேரழகியாக வலம் வரலாம்.
ஒவ்வொரு பெண்ணும் தங்கள் முகழகுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை தங்கள் மார்பகழகுக்கு கொடுப்பதில்லை. நீங்கள் தொய்வான மார்பகத்தை பெற்று இருந்தாலும் அதுவும் உங்களை வயதானவர்களாக மட்டுமே காட்டும். அதுமட்டுமா எல்லா விதமான ஆடைகளையும் உங்களால் வெளியில் அணிந்து செல்ல முடியாது.
இது மற்றவர்கள் முன்னிலையில் கூச்சத்தையும் சங்கடத்தையும் வரவழைத்து விடும். நீங்கள் என்ன தான் இதற்காகவென்றே வடிவமைக்கப்பட்ட உள்ளாடைகளை அணிந்தாலும் இயற்கையான பலன் கிடைத்த மாதிரி இருக்காது. உங்கள் மார்புப் பகுதி தசைகள் தொய்ந்து அதன் நீட்சித்தன்மை இழந்து காணப்படும். சரி இதற்கு என்ன தான் செய்வது என்று யோசிக்கிறீர்களா. கவலையை விடுங்க. நாங்கள் கூறும் சில இயற்கை முறைகளை மட்டும் பயன்படுத்தினாலே போதும் கச்சிதமான மார்பகழகை பெற இயலும்.
எந்த வித கெமிக்கல் முறையும் இல்லாமலும் பக்க விளைவுகள் இல்லாமல் மார்பகழகை மீட்க கீழ்கண்ட குறிப்புகளை பின்பற்றலாம்.
1.ஐஸ் மசாஜ்
ஐஸ் மசாஜ் செய்வதன் மூலம் சரும திசுக்கள் சுருங்கி தசைகள் இறுக்கமாகிறது என்று ஆராய்ச்சி தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் மார்பக சருமத்தை இறுக்கமாக்குவதோடு மார்பகத்தில் ஏற்படும் வலிகளையும் குறைக்கிறது.
வட்ட இயக்கத்தில் மார்பக பகுதிகளை மசாஜ் செய்ய வேண்டும். பிறகு துண்டை கொண்டு துடைத்து உடனே இறுக்கமான பிராவை அணிந்து கொள்ள வேண்டும். ஏனெனில் தசைகள் ரிலாக்ஸாக 30 நிமிடங்கள் எடுத்து கொள்ளும். இதை ஒரு நாளைக்கு பல முறை செய்து வந்தால் நல்ல மாற்றத்தை காணலாம்.
2.ஆலிவ் ஆயில்
ஆலிவ் ஆயிலில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் மற்றும் கொழுப்பு அமிலங்கள் மார்பக சருமத்திற்கு பெரிதும் உதவுகிறது. சருமத்திற்கு ஈரப்பதத்தை கொடுத்து அதன் வடிவத்தை இயல்பாக்குகிறது. இதனுடன் ரோஸ்மேரி எண்ணெய் சேர்த்து தேய்க்கும் போது தசைகள் இறுக்கமடைந்து இன்னும் கூடுதலான பலன் கிடைக்கும்.
கொஞ்சம் ஆலிவ் ஆயிலை கைகளில் எடுத்து மார்பகத்தில் மேல் நோக்கி மசாஜ் செய்ய வேண்டும். 15 நிமிடங்கள் மசாஜ் செய்யும் போது புதிய செல்கள் உருவாக்கம், இரத்த ஓட்டம் அதிகரித்து மார்பக அமைப்பை சரி செய்கிறது. ஒரு நாளைக்கு 4-5 தடவை இதை செய்யலாம். பாதாம், அவகேடா, ஜோஜோப எண்ணெய் போன்றவை சருமத்திற்கு தேவையான ஊட்டச்சத்துக்களை வழங்குகிறது.
3.முட்டை மற்றும் வெள்ளரிக்காய்
வெள்ளரிக்காயில் உள்ள பீட்டா கரோட்டீன் சீக்கிரம் வயதாகுவதை தடுக்கிறது. முட்டையின் கருவில் உள்ள புரோட்டீன் மற்றும் விட்டமின்கள் மார்பக சருமத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை குணப்படுத்துகிறது. மேலும் இதில் விட்டமின் ஏ, டி, பி6 மற்றும் பி12 போன்ற ஏராளமான ஊட்டச்சத்துக்கள் உள்ளன. முட்டை பேஸ்ட் தயாரித்து மார்பகத்தில் 15 நிமிடங்கள் தடவி பிறகு குளிர்ந்த நீரில் கழுவவும்.
4.முட்டை வெள்ளை கரு
முட்டையில் உள்ள ஹைட்ரோ லிப்பிட்ஸ் பொருள் தொய்வடைந்த சருமத்தை இறுஎக்கமாக்குகிறது. மேலும் சருமத்திற்கு தேவையான ஈரப்பதத்தை கொடுக்கிறது. முதலில் வெள்ளை கருவை நன்றாக நுரை வரும் வரை அடித்து கொள்ளவும். இது மார்பகத்தில் தடவி 30 நிமிடங்கள் அப்படியே வைத்து இருக்க வேண்டும். வெங்காயம் அல்லது வெள்ளரிக்காய் ஜூஸ் கொண்டு கழுவி பிறகு தண்ணீரை கொண்டு கழுவவும். 1 டீ ஸ்பூன் தயிர், தேன், அடித்த முட்டையின் வெள்ளை கரு போன்றவற்றை கலந்து முகத்தில் மாஸ்க் போட்டு கொள்ளவும். இந்த மாஸ்க்கை அப்ளே செய்து 20 நிமிடங்கள் அப்படியே வைத்து இருக்க வேண்டும். பிறகு குளிர்ந்த நீரில் கழுவவும்.
5.வெந்தயம்
இதிலுள்ள விட்டமின்கள் மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் சரும பாதிப்புகளை போக்கி தொய்வடைந்த மார்பகத்தை இறுஎக்கமாக்குகிறது. இது ஒரு ஆயுர்வேத முறையாகும். 1/4 கப் வெந்தயத்தை பொடியாக்கி பேஸ்ட்டாக்கி 15 நிமிடங்கள் மார்பக பகுதியில் வட்ட இயக்கத்தில் மசாஜ் செய்யவும். 5-10 நிமிடங்கள் அப்படியே வைத்து இருக்க வேண்டும். பிறகு வெதுவெதுப்பான நீரில் கழுவவும். இதை வாரத்திற்கு இரண்டு முறை செய்து வந்தால் நல்ல மாற்றத்தை காணலாம். 10 சொட்டுகள் விட்டமின் ஈ ஆயில், வெந்தய எண்ணெய் சேர்த்து பேஸ்ட்டாக்கி மார்பக பகுதியில் அப்ளே செய்து 30 நிமிடங்கள் வைத்து இருக்கவும். பிறகு குளிர்ந்த நீரில் கழுவவும். இதை வாரத்திற்கு ஒரு முறை என செய்ய வேண்டும். யோகார்ட் மற்றும் வெந்தய பொடி சேர்த்து மார்பகத்தில் அப்ளே செய்யவும். யோகார்ட்டில் லாக்டிக் அமிலம், கால்சியம், ஜிங்க் மற்றும் விட்டமின்கள் பி உள்ளன. இவை சருமத்திற்கு ஈரப்பதத்தை கொடுத்து சரும செல்களை புதுப்பிக்கிறது. ஜிங்க்கில் உள்ள அஸ்ட்ரிஜெண்ட் பொருள் தொய்வடைந்த சருமத்தை இறுக்கமாக்குகிறது.
6.மாதுளை
இதில் ஆன்டி ஏஜிங் பொருட்கள் உள்ளன. மாதுளை பழத்தை உறுத்து அரைத்து கொண்டு அதனுடன் கடுகு எண்ணெய் சேர்த்து பேஸ்ட்டாக்கி கொள்ளவும். 5-10 நிமிடங்கள் படுக்கைக்கு போவதற்கு முன் மசாஜ் செய்ய வேண்டும். மாதுளை பழ விதை எண்ணெய்யில் பைட்டோநியூட்ரியன்ஸ் உள்ளது. இது மார்பகத்தை வலிமை மற்றும் இறுஎக்கமாக்குகிறது. இந்த எண்ணெய்யை 2-3 நிமிடங்கள் தினமும் மார்பக பகுதியில் தேய்த்து வர நல்ல பலன் கிடைக்கும்.
7.பாதாம் எண்ணெய்
பாதாம் எண்ணெய்யின் எலாஸ்ட்டிக் தன்மை சருமத்தை பழைய நிலைக்கு கொண்டு வருகிறது. இந்த ஆயில் சருமத்திற்கு தேவையான ஊட்டச்சத்துக்களையும் ஈரப்பதத்தையும் கொடுக்கிறது. மில்க் க்ரீம் இயற்கை மாய்ஸ்சரைசர் மாதிரி செயல்பட்டு சருமத்தை மிருதுவாக்குகிறது. 4-5 டேபிள் ஸ்பூன் மில்க் க்ரீம், 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் சேர்த்து மசாஜ் செய்ய வேண்டும். வாரத்திற்கு 3-4 தடவை இதை செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும். தேங்காய் எண்ணெய் மசாஜ் கூட செய்து மார்பகத்தை இறுக்கமாக்கலாம்.
8.இஞ்சி
இஞ்சி நமது உடலின் மெட்டா பாலிசத்தை வேகப்படுத்தி அதிக அளவில் கொழுப்பு மற்றும் கலோரிகளை எரிக்கிறது. 1 டீ ஸ்பூன் துருவிய இஞ்சியை 1 கப் தண்ணீரில் 10 நிமிடங்கள் கொதிக்க விட வேண்டும். நன்றாக வடிகட்டி 1 டீ ஸ்பூன் தேன் சேர்த்து கொள்ளவும். இந்த இஞ்சி டீயை 2-3 கப் தினமும் குடித்து வந்தால் நல்ல பலன் தரும்..
மேலும் சில:
# நேராக நிமிர்ந்து உட்காருதல், நடத்தல், படுத்தல் போன்றவை மூலம் தொங்கும் மார்பகத்தை தவிர்க்கலாம்.
# யோகா பயிற்சிகளும் மார்பக தசைகளை காக்க பயன்படும்
# ஒமேகா 6 மற்றும் 3 கொழுப்பு அமிலங்கள் உள்ள உணவுகளை எடுத்து கொள்ளவும்
# புஷ் அப் பிராக்களை பயன்படுத்தவும்
# குப்புற படுக்காமல் மல்லாக்க படுத்து உறங்குவது நல்லது.
# விட்டமின் சி அடங்கிய பழங்களை சாப்பிடுவதன் மூலம் கொலஜனனை உற்பத்தி செய்து மார்பக சதைகளை இறுக்கமடையச் செய்கிறது.
Comments
Post a Comment