எந்த எண்ணெய் பயன்படுத்தினால் உடல் நலம் பாதிக்காது?

எந்த எண்ணெய் பயன்படுத்தினால் உடல் நலம் பாதிக்காது?



தப்பித்தவறி கூட சமையலுக்கு இந்த எண்ணெய்களில் ஒன்றை கூட அதிகம் பயன்படுத்த கூடாது!

நாம் சாதாரணமாக நினைத்து கொண்டு பயன்படுத்தும் பல எண்ணெய்களில் பயங்கரமான ஆபத்துகள் உள்ளது என மருத்துவர் சொல்கிறார்கள்.

எந்தெந்த எண்ணெய்களை சமையலுக்கு பயன்படுத்த கூடாது என்பதைப் பற்றி இப்போது பார்ப்போம்.

1.தேங்காய் எண்ணெய்


தேங்காய் எண்ணெய்யில் அதிக ஆரோக்கியங்கள் இருந்தாலும் இதில் நிறையுற்ற கொழுப்புகள் நிறையவே காணப்படுகின்றன.

ஆதலால், இவை இதய பாதிப்பை உண்டாக்க கூடும் என சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன. எனவே, கொலஸ்ட்ரால் அதிகமாக உடலில் இருப்போர் இந்த எண்ணெய்யை தவிர்ப்பது சிறந்தது.

2.தாவர எண்ணெய்

நேரடியாக தாவரங்களில் இருந்து பெறப்படும் இந்த வகை எண்ணெய்கள் சமையலுக்கு உகந்தது அல்ல. இத தெரியாமல் நம்மில் பலர் சமையலுக்கு இதை பயன்படுத்தி வருகின்றோம். இது உணவை சுவை மிக்கதாக தருகின்றது என்பதற்காக நாம் இவ்வாறு செய்யவே கூடாது.

3.பனைமர எண்ணெய்

மலிவான விலையில் கிடைக்கிறது என்பதற்காக இந்த எண்ணெய்யை ஒரு போதும் பயன்படுத்தக் கூடாது.

இது நேரடியாக இதயத்தை பாதித்து மாரடைப்பு, இதய நோய்கள் போன்றவற்றை பரிசாக வழங்கும் என அமெரிக்கன் ஹார்ட் அஸோஸியேஷன் கூறியுள்ளது. எனவே, பனைமர எண்ணெய்யை தவிர்ப்பது சிறந்தது.

4.நெய்
சிலர் வீடுகளில் எதற்கெடுத்தாலும் நெய் சமையலுக்கு பயன்படுத்தி கொள்வதுண்டு. இவ்வாறு செய்வது பக்க விளைவுகளை ஏற்படுத்த வாய்ப்புகள் அதிகமாக உள்ளது.

அத்துடன் கொலஸ்ட்ராலை அதிகரித்து, இதய நோய்களை உண்டாக்கும் எனவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றது.

சரியானது எது?

மேற்சொன்ன எண்ணெய் வகைகளை தவிர்த்து விட்டு ஆலிவ் எண்ணெய், அவகேடோ எண்ணெய், நல்லெண்ணெய், கடலை எண்ணெய் போன்றவற்றை சமையலுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம். இது உடல் ஆரோக்கியத்தை அதிகரிப்பதோடு, இதய நோய்களையும் தடுத்து நிறுத்தும்.

Comments

Popular posts from this blog

இரவு நல்ல தூக்கம் வேண்டுமா? சாப்பிட வேண்டிய மற்றும் தவிர்க்க வேண்டிய உணவுகளை அறிந்துகொள்ளுங்கள்..!

பெண்ணுறுப்பு பகுதியில் தோல் உரிவது ஏன் தெரியுமா...?

சிறந்த உடலுறவுக்கான குறிப்புகள்!