சின்ன பொண்ணு சார்
தெரு ஓரமாக என் வாகனத்தை நிறுத்தி விட்டு, பொருட்கள் வாங்கிக் கொண்டு காரை நோக்கி நடந்து வந்து கொண்டிருந்தேன். அப்போது ஒரு பெரியவரும் ரோடை கிராஸ் செய்து கொண்டிருந்தார். அவரை பார்த்திருக்கிறேன். தர்பூசணியை வண்டியில் வைத்து கூறுபோட்டு விற்பவர். சில சமயம் பலாப்பழமும் விற்பார். வண்டி அருகில் அவர் மனைவி அமர்ந்திருந்தார். மனைவிக்கும் தனக்கும் காலை டிபன் எதிரிலிருக்கும் சிறு ஹோட்டலில் வாங்கிக் கொண்டு வந்து கொண்டிருந்தார். அவர் நடுரோட்டில் வந்து கொண்டிருந்த போது, ஒரு ஸ்கூட்டர் வேகமாக வந்து அவரருகில் சடாரென்று பிரேக் போட்டு நின்றது. ஸ்கூட்டரை ஓட்டிக் கொண்டு வந்தது இளம்பெண். கோபத்தோடு முகம் சிவக்க, அந்த பெரியவரை கடுமையான சொற்களால் திட்டிவிட்டு, வேகமாக சென்று விட்டார். என்ன தான் தவறு அந்தப் பெரியவர் மீது இருந்தாலும், அவ்வளவு மரியாதை குறைவாக அந்த பெண் திட்டி இருக்க வேண்டியதில்லை. ஸ்கூட்டர், அருகில் வந்து சட்டென்று நின்ற அதிர்ச்சியில், அவர் வாங்கி வந்த உணவுப் பொட்டலமும் கீழே விழுந்துவிட்டது. முகத்தில் வருத்தத்துடன், உணவு பொட்டலங்களை குனிந்து எடுத்துக் கொண்டு தன் கடையை நோக்கி செ...