சிந்தாமணி சிக்கன்
சிந்தாமணி சிக்கன்
சிந்தாமணி சிக்கன் செய்ய தேவையான பொருட்கள்:
நாட்டு கோழி - ஒரு கிலோ
சின்ன வெங்காயம் - முக்கால் கிலோ
பூண்டு - 8 பல்
காய்ந்த மிளகாய் - 15
இஞ்சி பூண்டு விழுது - ஒரு டேபிள் ஸ்பூன்
மஞ்சள் துாள் - ஒரு டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவைக்கேற்ப
கடுகு - ஒரு டீ ஸ்பூன்
நல்லெண்ணெய் - 300 மில்லி
செய்முறை
சிக்கனை சுத்தம் செய்து, துண்டுகளாக்கி, மஞ்சள் துாள் கலந்து ஊற வைக்கவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு சேர்த்து, வெடித்ததும், நருக்கிய பூண்டு, வெங்காயம் சேர்த்து, கல் உப்பு போட்டு பொன்னிறமாக வதக்கி பின், காம்பு, விதை நீக்கிய காய்ந்த மிளகாயை சேர்த்து வதக்க வேண்டும்.
அதன் பின், கோழி துண்டுகளை சேர்த்து பாதி அளவு வதங்கியதும் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து, மூடி போட்டு வேக விட வேண்டும்.
தண்ணீர் ஊற்ற வேண்டாம். சிக்கன், வெங்காயத்தில் இருந்து பிரியும் நீர் போதும்.
அடி பிடிக்காமல் இருக்க அவ்வப்போது கிளறவும்.
சிக்கன் வேக அதிக நேரம் ஆகும்.
எண்ணெய் பிரியும் பதத்தில், உப்பு சரி பார்த்து பரிமாறவும்.
அதிக மசாலா சேர்க்காத சிந்தாமணி சிக்கன் குழம்பு அருமையாக இருக்கும்.
Comments
Post a Comment