நாட்டுக்கோழி குழம்பு
நாட்டுக்கோழி குழம்பு செய்ய தேவையான பொருட்கள்
நாட்டுக்கோழி - ஒரு கிலோ
எண்ணெய் - 100 கிராம்
சின்ன வெங்காயம் - 300 கிராம்
தக்காளி - 100 கிராம்
இஞ்சி பூண்டு - 20 கிராம்
தேங்காய் - அரை மூடி
சக்தி சிக்கன் மசாலா 40 கிராம்
கடுகு - ஒரு டீஸ்பூன்
கருவேப்பிலை - கால் கைப்பிடி
செய்முறை
முதலில் குக்கரில் எண்ணெய் ஊற்றி சுடான பின் கடகு கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும்.
பின்னர் தீயை குறைத்து சின்ன வெங்காயத்தை ஐந்து நிமிடம் பொன்னிறமாக வதக்கவும்.
பிறகு தேவையான அளவுக்கு உப்பு சேர்க்கவும்.
பின்பு இஞ்சி பூண்டு விழுதை சேர்த்து 2 நிமிடம் வதக்கவும்.
அடுத்து தக்காளி சேர்த்து மசியும் அளவுக்கு வதக்கவும்.
பின்னர் நாட்டுக்கோழி மற்றும் மசாலா சேர்த்து இரண்டு நிமிடம் வதக்கி விட்டு அரை லிட்டர் தண்ணீர் ஊற்றி ஐந்து விசில் விடவும்.
கடைசியாக அரை மூடி தேங்காய் பால் சேர்த்து மூன்று வீசில் விட்டு, உப்பு சரி பார்த்து மல்லி சேர்த்து பரிமாறவும்
Comments
Post a Comment