சும்மா...இழுத்துக்கிட்டே இருக்காதீங்க.. வந்தா வரட்டும்!' - தே.மு.தி.க. பேரத்தால் கடுப்பான தி.மு.க.
`சும்மா...இழுத்துக்கிட்டே இருக்காதீங்க.. வந்தா வரட்டும்!' - தே.மு.தி.க. பேரத்தால் கடுப்பான தி.மு.க. ஆ.விஜயானந்த் | 1 Hours ago Advertisement தி. மு.க தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு நாளை பிறந்தநாள். அண்ணா அறிவாலயத்தில் பிறந்தநாள் கொண்டாட்டங்களுக்குத் தயாராகி வருகிறார்கள் உடன்பிறப்புகள். `தி.மு.க அணிக்குள் தே.மு.தி.க வருவதற்கான வாய்ப்புகள் இல்லை. கூட்டணி தொடர்பான இறுதிப் பட்டியலை சனிக்கிழமைக்குள் ஸ்டாலின் வெளியிடுவார்' என்கின்றனர் தி.மு.க வட்டாரத்தில். நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க தலைமையிலான அணியில் காங்கிரஸ், ம.தி.மு.க, வி.சி.க, சி.பி.ஐ, சி.பி.எம், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி ஆகியவை இணைந்துள்ளன. அ.தி.மு.க தலைமையிலான அணியில் பா.ஜ.க, பா.ம.க உள்ளிட்ட கட்சிகள் சேர்ந்துவிட்டன. இதற்கான கூட்டணி ஒப்பந்தமும் கையொப்பமாகிவிட்டன. தி.மு.க அணியில் கொங்கு நாடு மக்கள் தேசியக் கட்சி மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகளுக்குத் தலா ஒரு தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இந்தநிலையில், `தே.மு.தி.க எந்தப் பக்கம்?' என்ற கேள்விக்கு ...