சும்மா...இழுத்துக்கிட்டே இருக்காதீங்க.. வந்தா வரட்டும்!' - தே.மு.தி.க. பேரத்தால் கடுப்பான தி.மு.க.

`சும்மா...இழுத்துக்கிட்டே இருக்காதீங்க.. வந்தா வரட்டும்!' - தே.மு.தி.க. பேரத்தால் கடுப்பான தி.மு.க.

Advertisement 
தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு நாளை பிறந்தநாள். அண்ணா அறிவாலயத்தில் பிறந்தநாள் கொண்டாட்டங்களுக்குத் தயாராகி வருகிறார்கள் உடன்பிறப்புகள். `தி.மு.க அணிக்குள் தே.மு.தி.க வருவதற்கான வாய்ப்புகள் இல்லை. கூட்டணி தொடர்பான இறுதிப் பட்டியலை சனிக்கிழமைக்குள் ஸ்டாலின் வெளியிடுவார்' என்கின்றனர் தி.மு.க வட்டாரத்தில். 
நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க தலைமையிலான அணியில் காங்கிரஸ், ம.தி.மு.க, வி.சி.க, சி.பி.ஐ, சி.பி.எம், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி ஆகியவை இணைந்துள்ளன. அ.தி.மு.க தலைமையிலான அணியில் பா.ஜ.க, பா.ம.க உள்ளிட்ட கட்சிகள் சேர்ந்துவிட்டன. இதற்கான கூட்டணி ஒப்பந்தமும் கையொப்பமாகிவிட்டன. தி.மு.க அணியில் கொங்கு நாடு மக்கள் தேசியக் கட்சி மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகளுக்குத் தலா ஒரு தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இந்தநிலையில், `தே.மு.தி.க எந்தப் பக்கம்?' என்ற கேள்விக்கு இன்னமும் விடை தெரியவில்லை. கடந்த 19-ம் தேதி சென்னை கிரவுன் பிளாசா ஓட்டலில் அ.தி.மு.க, பா.ம.க, பா.ஜ.க கூட்டணி இறுதி செய்யப்பட்ட அன்று, தே.மு.தி.க வரவைப் பெரிதும் எதிர்பார்த்தார் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல். அவர்களிடமிருந்து உறுதியான சிக்னல் வராததால், விருகம்பாக்கத்தில் உள்ள விஜயகாந்தின் வீட்டுக்கே சென்றார் பியூஷ் கோயல். அங்கும் எந்த உடன்பாடும் எட்டப்படவில்லை. 
Advertisement
விஜயகாந்துடன் ரஜினி
இதன் தொடர்ச்சியாக தமிழக காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர், நடிகர் ரஜினிகாந்த் ஆகியோர் விஜயகாந்தை சந்தித்துப் பேசினர். இதைக் கவனித்த தி.மு.க சீனியர்கள், `அவர்களே சந்தித்துப் பேசும்போது, ஓர் எதிர்க்கட்சித் தலைவராக இருந்து கொண்டு நீங்கள் போகாமல் இருப்பது நல்லதல்ல' என வலியுறுத்தியதன் அடிப்படையில் விஜயகாந்தை சந்தித்துப் பேசினார் ஸ்டாலின். இந்தச் சந்திப்புக்குப் பிறகு மீடியாக்களிடம் பேசும்போது, `அவரது உடல்நலத்தை விசாரிக்கவே வந்தேன். அரசியல் பேசப்படவில்லை' எனத் தெளிவாகக் கூறிவிட்டார் ஸ்டாலின். ஆனால், இந்தச் சந்திப்புக்கு விளக்கம் கொடுத்த பிரேமலதா, `அரசியல் உட்பட அனைத்தும் பேசப்பட்டது' என்றார். அவரது இந்த விளக்கத்தை தி.மு.க தரப்பில் உன்னிப்பாகக் கவனித்தனர். 
பிரேமலதா, விஜயகாந்த்
தே.மு.தி.கவை தங்கள் பக்கம் கொண்டு வருவதற்கு தி.மு.க முயற்சி செய்வதை அறிந்த எடப்பாடி பழனிசாமி, `தே.மு.தி.க உட்பட சில கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டிருக்கிறோம்' என்றார். அதற்கு முன்னதாக, `தே.மு.தி.க வந்தால் மகிழ்ச்சி, வராவிட்டால் கவலையில்லை' எனக் கூறியிருந்தார் அமைச்சர் ஜெயக்குமார். அதேவேளையில், அமைச்சர் ராஜேந்திர பாலாஜியும் `வாக்குவங்கி இல்லாத கட்சி' என தே.மு.தி.க-வை விமர்சனம் செய்திருந்தார். அமைச்சர்களின் தன்னிச்சையான பேச்சுகளை எடப்பாடி பழனிசாமி ரசிக்கவில்லை. இதன்பிறகு பேட்டியளித்த அமைச்சர் ஜெயக்குமார், `தே.மு.தி.க-வுடன் சுமுகப் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது' என்றார். 
பா.ம.க-வைப் போலவே தே.மு.தி.க-வும் ஒரேநேரத்தில் அ.தி.மு.க-வோடும் தி.மு.க-வோடும் கூட்டணிப் பேச்சுவார்த்தையை நடத்திக் கொண்டிருக்கிறது. இதில், ``தி.மு.க-வுடன் நடந்த பேச்சுவார்த்தையில் சுமுக உடன்பாடு எட்டப்படவில்லை" என அழுத்தமாகச் சொல்கின்றனர் அண்ணா அறிவாலய நிர்வாகிகள். இதுதொடர்பாக நம்மிடம் சில விஷயங்களை விவரித்தனர். ``தேர்தல் களத்தில் தங்களுக்கு டிமாண்ட் இருப்பதைப் போன்ற தோற்றத்தை பிரேமலதாவும் சுதீஷும் ஏற்படுத்த முயல்கின்றனர். இருப்பினும், விஜயகாந்துக்காக தி.மு.க தலைவர் இறங்கி வந்தார். இதனையடுத்து, தி.மு.க சீனியர்கள் சிலர் சுதீஷுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில், `4 சீட்டுகளை ஒதுக்குகிறோம். ராஜ்யசபா சீட்டை உறுதியாக ஒதுக்க முடியாது' எனக் கூறியுள்ளனர். ஆனால், சுதீஷ் தரப்பிலோ, `4 சீட்டுகளோடு ராஜ்யசபா இடமும் வேண்டும்' என வலியுறுத்தினார். ஒருகட்டத்தில், தேர்தல் செலவு என்ற பெயரில் பெரிய அளவிலான நிதியையும் கேட்டனர். 
பியூஷ் கோயல், சுதீஷ்
இதை எதிர்பார்க்காத தி.மு.க சீனியர்கள், `அவ்வளவு எல்லாம் எங்களால் தர முடியாது. நிதி கொடுக்கும் முடிவிலும் நாங்கள் இல்லை. 4 சீட்டுகளை மட்டுமே ஒதுக்க முடியும்' எனத் தெரிவித்துள்ளனர். இதற்கு தே.மு.தி.க சம்மதிக்கவில்லை. இதுதொடர்பாக நடந்த பேச்சுவார்த்தைகளை ஸ்டாலின் கவனத்துக்குக் கொண்டு சென்றோம். அவர் ஒருகட்டத்தில் கடுப்பாகி, `சும்மா...இழுத்துகிட்டே இருக்காதீங்க. வந்தால் வரட்டும். இல்லாவிட்டால் வேறு வேலைகளைப் பாருங்கள்' என உறுதியாகக் கூறிவிட்டார். இப்போதைக்கு தி.மு.க தரப்பில் 90 சதவிகிதம் அளவுக்குத் தே.மு.தி.க-வுக்கான கதவுகள் அடைக்கப்பட்டுவிட்டன. மீதமுள்ள 10 சதவிகித முயற்சியை சீனியர்கள் செய்து வருகின்றனர். இது முடிவுக்கு வரும் என நாங்கள் நம்பவில்லை. அவர்கள் வைக்கும் டிமாண்டுகளை ஏற்றுக் கொள்ளும் முடிவில் ஸ்டாலின் இல்லை" என்கின்றனர் உறுதியாக. 
எடப்பாடி பழனிசாமி
அதேநேரம், ``தொடக்கத்தில் தே.மு.தி.க - வுக்கு 2 சீட்டுகளை ஒதுக்கலாம் என்ற முடிவில் இருந்த எடப்பாடி பழனிசாமி, இப்போது 4 சீட், 5 சீட் என்ற அளவுக்கு இறங்கி வந்திருக்கிறார். தே.மு.தி.க முன்வைக்கும் டிமாண்டுகளை ஏற்றுக் கொள்ளவும் அவர் தயாராக இருக்கிறார். எனவே, எங்கள் பக்கம் தே.மு.தி.க வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருக்கின்றன" என்கின்றனர் அ.தி.மு.க தலைமைக் கழக நிர்வாகிகள். 
பா.ம.க-வைப் போலவே கூட்டணி பேரத்தை அதிகப்படுத்தி, வேண்டிய தொகுதிகளைப் பெற்றுக்கொள்ளவும் தே.மு.தி.க கடுமையாக முயற்சி செய்து வருகிறது. `தி.மு.க கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகளுக்கான இடங்களை ஓரிரு நாள்களில் அறிவிக்க இருக்கிறார் ஸ்டாலின். தி.மு.க அணிக்குள் தே.மு.தி.க வருமா...அ.தி.மு.க அணிக்குச் செல்லுமா...தனித்துப் போட்டியிடுமா? என்பதும் அதற்குள் முடிவாகிவிடும்' என்கின்றனர் அரசியல் வல்லுநர்கள். 

Comments

Popular posts from this blog

பெண்ணுறுப்பு பகுதியில் தோல் உரிவது ஏன் தெரியுமா...?

சிறந்த உடலுறவுக்கான குறிப்புகள்!

ஆடை இல்லாமல் தூங்குவதால் ஏற்படும் மாற்றங்கள்!