மருத்துவ குணங்கள் நிறைத்துள்ள சங்கு பூ!….

மருத்துவ குணங்கள் நிறைத்துள்ள சங்கு பூ!….


நம் பூமியில் பல வகையான பூக்கள் இருக்கத்தான் செய்கிறது. பெரும்பாலான பூக்களில் எண்ணற்ற அதிசய குணங்கள் ஒளிந்து கொண்டிருக்கின்றன. சில பூக்களை இன்னும் நாம் அறிந்திருக்க கூட இருக்காது. ஒரு சில பூக்களே அதி பயங்கர தன்மைகளை கொண்டிருக்கும். அவற்றில் முதன்மையானது சங்கு பூ என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

*வண்ணமயமான நிறங்களை கொண்டது இந்த சங்கு பூ. வெள்ளை மற்றும் ஊதா நிறத்தில் இவை பொதுவாக காணப்படுகிறது. சங்கு போன்ற தோற்றத்தை கொண்டதால் இவை சங்கு பூ என்று மக்களால் அழைக்கப்படுகிறது. இவற்றில் எண்ணற்ற மருத்துவ குணங்கள் நிறைத்துள்ளதாக பண்டைய கால சித்த மருத்துவம் மற்றும் ஆயுர்வேதத்தில் கூறி இருக்கின்றனர்.

பல வகையான மருந்துகள் சர்க்கரை நோயிற்கு இருந்தாலும், இயற்கை ரீதியான மருந்துகளே அதிக பலனை தர கூடியது. அந்த வகையில் இயற்கையின் வர பிரசாதமான சங்கு பூ, சர்க்கரையின் அளவை உடலில் கட்டுப்படுத்துமாம். ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை சீராக்கி நீரிழிவு நோயாளிகளுக்கு பெரிதும் உதவும் என “காம்பிளிமெண்டரி மற்றும் ஆல்டர்னேட்டிவ் மெடிசின்’ என்ற ஆய்வு இதழில் கட்டுரை வெளியிடப்பட்டுள்ளது

*இதயத்தை மேம்படுத்தும் சங்கு..! இன்று பெரும்பாலான மக்கள் அவதிப்படும் உடல் சார்ந்த பிரச்சினைகளில் இதய நோயும் முதன்மையான இடத்தில உள்ளது. இவற்றை குணப்படுத்த சங்கு பூ உதவுகிறது. சங்கு பூவின் விதைகள் மற்றும் வேர்களை பயன்படுத்தி, கஷாயம் தயாரித்து குடித்து வந்தால் இதய கோளாறுகள் நீங்கும்.

*புற்றுநோய் செல்களை அழிக்கும் பூ..! உடலில் பல நாட்களாக இருந்து கொண்டே நமக்கே அறியாமல் பல வித செயல்களை செய்யும் ஒரு கொடிய நோய்தான் புற்றுநோய். சங்கு பூவில் உள்ள ஃப்ளேவனாய்ட்ஸ் புற்றுநோய் செல்களை உடலில் உருவாகாமல் தடுக்கிறதாம். மேலும், உடலின் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து உடல் நலனை மேம்படுத்துமாம்.

Comments

Popular posts from this blog

இரவு நல்ல தூக்கம் வேண்டுமா? சாப்பிட வேண்டிய மற்றும் தவிர்க்க வேண்டிய உணவுகளை அறிந்துகொள்ளுங்கள்..!

பெண்ணுறுப்பு பகுதியில் தோல் உரிவது ஏன் தெரியுமா...?

சிறந்த உடலுறவுக்கான குறிப்புகள்!