பாலியல் ஆர்வத்தை கட்டுப்பாட்டிற்குள் வைக்க உதவும் எளிய வழிகள்!…

பாலியல் ஆர்வத்தை கட்டுப்பாட்டிற்குள் வைக்க உதவும் எளிய வழிகள்!…



கலவி கொள்ள விரும்புதல் என்பது ஆண், பெண் இருவருக்குமே இருக்கக்கூடிய ஒரு பொதுவான எண்ணமாகும். இது இயற்கையின் விதி மற்றும் நியதி ஆகும். இதில்தவறாக எடுத்துக்கொள்ளவோ அல்லது இது பாவம் என்று நினைக்கவோ எந்தவித அவசியமும் இல்லை. ஆனால் அளவிற்கு மீறினால் அமிர்தமும் நஞ்சுதானே, உங்களின் பாலியல் ஆர்வம் எப்பொழுதும் உங்களுக்கும், மற்றவர்களுக்கும் எந்தவித பிரச்சினையையும் ஏற்படுத்திவிடக்கூடாது.

சிலசமயம் உங்களின் அதீத பாலியல் ஆர்வம் மற்றவர்கள் முன் உங்களை சங்கடத்திற்கு ஆளாக்க நேரிடலாம். அதுபோன்ற சூழ்நிலைகள் ஏற்படாமல் தவிர்க்க உங்கள் பாலியல் ஆர்வத்தை உங்களின் கட்டுப்பாட்டிற்குள் வைக்க வேண்டியது அவசியம். அதற்காக நீங்கள் அதிக சிரமப்பட வேண்டுமென்ற அவசியமில்லை. உங்களின் பாலியல் ஆர்வத்தை கட்டுப்பாட்டிற்குள் வைக்க உதவும் எளிய வழிகள் என்னென்ன என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

ஏற்றுக்கொள்ளுதல்
உறவு கொள்வதில் உங்களுக்கு இருக்கும் பேராசையை கட்டுப்படுத்த முதல் வழி அவ்வாறு எண்ணுவதில் எந்த தவறும் இல்லை என்று நீங்கள் உணருவதில்தான் இருக்கிறது. நமது சமுதாய வழிமுறைகளும், கட்டுப்பாடுகளும் இது வாழ்க்கையின் அங்கம் என்று உணர்த்தாமல் இவ்வாறு நினைப்பதே பாவம் என்று நினைக்கும்படிதான் நமது மனோபாவத்தை உருவாக்கியுள்ளது. உடல்தேவைகளை உணர்த்தும் இந்த பாலியல் ஆசைகள் இயற்கைதான் என்று நாம் முதலில் நம்ப வேண்டும். உங்களின் இந்த புரிதலே உங்களின் ஆசையை உங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர அவசியமாகும்.

தூண்டுதல்கள்


உடலுறவு மீதிருக்கும் உங்களின் பேராசையை கட்டுப்படுத்த அடுத்த வழி உங்களின் ஆசையை தூண்டுவது எது என்பதை அறிய வேண்டும். பொதுவாகவே மனிதர்களை சுற்றியிருக்கும் பெரும்பாலான விஷயங்கள் அவர்களின் பாலியல் ஆசைகளை தூண்டக்கூடியதாகத்தான் இருக்கிறது. அவ்வாறு உங்களை தூண்டக்கூடிய அறிகுறிகள் என்னென்ன என்பதை கண்டறிந்து அதனை தவிர்ப்பது நல்லது.

மனோபலம்
மனோபலம் இருந்தால் மலையை கூட நகர்த்தலாம் என்று கூறுவார்கள், அப்படி இருக்கும்போது உங்களால் உங்களின் பாலியல் ஆசைகளை கட்டுப்படுத்து முடியாதா என்ன? பாலியல் ஆசைகளை முற்றிலும் தவிர்க்க முடியாது என்றாலும், அதன் தீவிரத்தை குறைக்கும் சில கவனச்சிதறல்கள் என்ன என்பதை கண்டறியுங்கள். உங்களின் மனது உங்களின் பாலியல் ஆசைகள் அதிகரிக்கும் போதெல்லாம் அதனை நினைவுபடுத்த வேண்டும்.

மாற்றம்
உங்களின் பாலியல் ஆசைகளை உபயோகமான வெளியீடுகளுக்கு மாற்றுவது உங்களின் பாலியல் ஆசைகளை குறைப்பதோடு மட்டுமில்லாமல் உங்களுக்கு பல வித்தியாசமான அனுபவங்களையும் தரும். நாளின் முடிவில் உங்களுக்கு அது வெறும் எண்ணம்தான் என்ற உணர்வு வரும். இதனால் ஒரு சமமாக ஈடுபடும் படைப்பு சிந்தனை கையாள எளிதானது. புத்தகம் படிப்பது, படம் வரைவது போன்றவை உங்களுக்கு அதே திருப்தியை வழங்கும்.

உடற்பயிற்சி
உங்களின் ஆற்றல் அனைத்தையும் மற்றொறு உபயோகமான செயலின் மீது செலுத்துவது உங்களின் பாலியல் ஆசைகளை குறைப்பதோடு உங்களுக்கு உடல்ரீதியான நன்மைகளை வழங்கக்கூடும். காலை நேரத்தில் எழுந்து உடற்பயிற்சி செய்யுங்கள், வாரம் 3 நாட்கள் நீச்சல் அடிப்பதை பழக்கமாக்கி கொள்ளுங்கள். முடிந்தால் ஜிம்மிற்கு செல்லுங்கள். உங்கள் உடலுக்கு போதுமான அளவு உடற்பயிற்சி கிடைக்கும்போது உங்களின் உணர்ச்சிகள் கட்டுப்பாட்டிற்குள் இருக்கும்.

உதவியை நாடுங்கள்
ஒருவேளை என்ன செய்தும் உங்களின் பாலியல் ஆசைகள் குறையவில்லை என்றால் அது சில மோசமான பிரச்சினைகளின் ஆரம்பமாக இருக்கலாம். ஒருவேளை நீங்கள் உறவில் இருந்தால்,உங்கள் துணையிடம் உங்கள் பிரச்சினையை பற்றி தெளிவாக பேசுங்கள். தொடர்ச்சியான உறவு உங்கள் ஆசைகளை குறைக்க வாய்ப்புள்ளது. அப்படியும் குறையவில்லை என்றால் ஒரு உளவியல் நிபுணரை ஆலோசிப்பது நல்லது, உங்களின் இந்த தாறுமாறு சிந்தனைகளை மருத்துவத்தின் மூலமும், கவுன்சிலிங் மூலமும் குணப்படுத்தலாம்.

Comments

Popular posts from this blog

பெண்ணுறுப்பு பகுதியில் தோல் உரிவது ஏன் தெரியுமா...?

சிறந்த உடலுறவுக்கான குறிப்புகள்!

ஆடை இல்லாமல் தூங்குவதால் ஏற்படும் மாற்றங்கள்!