திண்டுக்கல் சீரக சம்பா மட்டன் பிரியாணி செய்வது எப்படி ....
திண்டுக்கல் சீரக சம்பா மட்டன் பிரியாணி செய்ய தேவையான பொருள்கள்: சீரக சம்பா அரிசி - ஒரு கிலோ தக்காளி - 2 இஞ்சி - 100 கிராம் பச்சை மிளகாய் - 4 பூண்டு - 100 கிராம் புதினா இலை - ஒரு கைப்பிடி பட்டை - 5 கிராம்பு - 5 ஏலக்காய் - 5 மல்லி இலை - ஒரு கைப்பிடி தேங்காய் பால் - ஒரு கப் ஆட்டுக்கறி - ஒரு கிலோ சின்ன வெங்காயம் - 100 கிராம் புளித்த தயிர் - 100 கிராம் உப்பு - தேவையான அளவு நல்லெண்ணெய் - 200 கிராம் பெரிய வெங்காயம் - 100 கிராம் செய்முறை முதலில் பிரியாணி அரிசியை தண்ணீரில் கழுவி வடிகட்டி வைக்கவும். தக்காளி மற்றும் பெரிய வெங்காயத்தை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். பூண்டு, இஞ்சி, பச்சை மிளகாய், சின்ன வெங்காயம், புதினா இலை, மல்லி இலை ஆகிய இவை அனைத்தையும் தனித்தனியாக சிறிது நீர் விட்டுக் கெட்டியாக மிக்சியில் மசாலா பதத்தில் அரைத்து வைத்துக் கொள்ளவும். பின்னர் கிராம்பு, பட்டை, ஏலக்காய் ஆகிய இவை அனைத்தையும் சேர்த்து தண்ணீர் விடாமல் மிக்சியில் பொடியாக அரைத்து வைத்துக் கொள்ளவும். இப்பொழுது குக்கரில் மட்டனை சிறிதளவு தண்ணீர் ஊற்றி மூன்று விசில் வரும் வரைய...