செட்டிநாடு சிக்கன் குழம்பு

வாணலியில் 3 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கிராம்பு, பட்டை, தனியா, சீரகம், சோம்பு, கசகசா ஆகியவற்றை சேர்த்து வதக்கவும்.

அதனுடன் காய்ந்த மிளகாய் சேர்த்து வதக்கி கடைசியாக தேங்காய் துருவல் சேர்த்து வதக்கி எடுத்துக் கொள்ளவும்.

அதன் பிறகு அதனுடன் இஞ்சி பூண்டு விழுதை சேர்த்து அனைத்தையும் நைசாக அரைத்துக் கொள்ளவும்.

மறுபடியும் வாணலியில் 4 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.

அதனுடன் தக்காளி சேர்த்து நன்கு வதக்கி மஞ்சள் தூள், மிளகாய் தூள் சேர்த்து வதக்கவும். நன்றாக வதங்கியதும் சிக்கன் துண்டுகளை சேர்த்து பிரட்டி மூடி வேக வைக்கவும்.

சிக்கன் வெந்ததும் அரைத்த மசாலா, உப்பு சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.

நன்றாக கொதித்து எண்ணெய் பிரிந்து வரும் போது கொத்தமல்லி தழையை தூவி இறக்கி விடவும். சுவையான செட்டிநாடு சிக்கன் குழம்பு ரெடி!

மேலும்
இது
போன்ற
தகவல்களுக்கு
நமது
சேனலை
Subscribe
செய்து கொள்ளவும்

நன்றி

Comments

Popular posts from this blog

ஆடை இல்லாமல் தூங்குவதால் ஏற்படும் மாற்றங்கள்!

சிறந்த உடலுறவுக்கான குறிப்புகள்!

இரு பொக்கிஷம்