கேழ்வரகு இனிப்பு அடை
கேழ்வரகு இனிப்பு அடை என்பது தமிழ்நாட்டில் மிகவும் பிரபலமான ஒரு பாரம்பரிய இனிப்பு வகை. கேழ்வரகு மாவு, வெல்லம், தேங்காய் போன்ற பொருட்களைப் பயன்படுத்தி இதை தயாரிக்கலாம். இந்த இனிப்பு அடை மிகவும் சுவையானது மற்றும் ஊட்டசத்து மிகுந்தது.
கேழ்வரகு இனிப்பு அடை செய்ய தேவையானப் பொருட்கள் :
கேழ்வரகு மாவு - 2 கப்
வெல்லம் - 1 கப்
தேங்காய் துருவல் அரை கப்
ஏலக்காய்த்தூள் அரை டீஸ்பூன்
பொடித்த முந்திரி 2 டேபிள்ஸ்பூன் (நெய்யில் வறுத்தது)
நெய் தேவையான அளவு
தண்ணீர் தேவையான அளவு
செய்முறை :
முதலில் வெல்லத்துடன் சிறிதளவு நீர் சேர்த்து கொதிக்கவிட்டு, வடிகட்டி, மீண்டும் அடுப்பில் வைத்து சிறிது நேரம் கொதிக்கவிட வேண்டும்.
பின்னர் வெல்லக் கரைசல் சற்று கெட்டியானதும், அதனுடன் தேங்காய் துருவல் சேர்க்கவும்.
பிறகு கேழ்வரகு மாவு, ஏலக்காய்த்தூள், பொடித்த முந்திரி சேர்த்து நன்கு கிளறி இறக்க வேண்டும்.
கடைசியாக வாழை இலையில் நெய் தடவி, மாவை சற்று கனமான அடைகளாக தட்டி வைத்துக் கொள்ள வேண்டும்.
பிறகு தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் தட்டி வைத்த அடைகளைப் போட்டு, சுற்றிலும் சிறிது நெய் விட்டு வெந்ததும் திருப்பிப் போட்டு வேக வைத்து எடுத்தால், சத்து நிறைந்த கேழ்வரகு இனிப்பு அடை தயார்.
மேலும் இது போன்ற பயனுள்ள தகவல்களுக்கு, நமது சேனலை subscribe செய்து கொள்ளுங்கள்.
நன்றி
Comments
Post a Comment