Posts

Showing posts from April, 2016

பணத்தின் மதிப்பை போலே

Image
பணத்தின் மதிப்பை போலே 200 பேர்கள் கூடியிருந்த அரங்கத்தில் ஒரு பேச்சாளார் ஒரு 500 ரூபாய் நோட்டைக் காட்டி ” யாருக்கு இது பிடிக்கும்?” எனக் கேட்டார். கூடியிருந்த அனவரும் தனக்கு பிடிக்குமென கையை தூக்கினர். பேச்சாளார் “உங்களில் ஒருவருக்கு இந்த 500 ரூபாயைத் தருகிறேன் ஆனால் அதற்கு முன்” என சொல்லி அந்த 500 ரூபாயைக் கசக்கி சுருட்டினார். பிறகு அதை சரி செய்து “இப்போதும் இதன் மீது உங்களுக்கு இன்னும் விருப்பம் இருக்கிறதா?” என்றார்கள். அனைவரும் கையைத் தூக்கினர். அவர் அந்த ரூபாய் நோட்டை தரையில் போட்டு காலால் நசுக்கி அந்த அழுக்கான நோட்டை காட்டி “இன்னும் இதன் மேல் உங்களுக்கு விருப்பம் இருக்கிறதா? என்றார் அனைவரும் இப்போதும் கைகளை தூக்கினர். அவர் தொடர்ந்தார் “கேவலம் ஒரு 500 ரூபாய்தாள் பல முறை கசங்கியும் மிதிப்பட்டும் அழுக்கடைந்தும் அதன் மதிப்பை இழக்கவில்லை. ஆனால் மனிதர்களாகிய நாம் அவமானப் படும் போதும் , தோல்விகளை சந்திக்கும் போதும் மனமுடைந்து போய் நம்மை நாமே தாழ்த்தி கொள்கிறோம் . நம்முடைய மதிப்பு என்றைக்கும் குறைவதில்லை. நீங்கள் தனித்துவமானவர். இவ்வுலகில் உள்ள ஒவ்வொருவருக்கும் ஒவ்

சிறுநீரகக் கற்கள் வராமல் தடுக்கும் பார்லி நீர் !

Image
சிறுநீரகக் கற்கள் வராமல் தடுக்கும் பார்லி நீர் ! பார்லியை அரைத்து மாவாக்கி, 2 தேக்கரண்டி அளவு எடுத்து 3 டம்ளர் நீர்விட்டு குக்கரில் 3-4 விசில் வரும் வரை விட்டு ஆறியபின் வடிகட்டி தேவையான அளவு சர்க்கரை, தேவை எனில் எலுமிச்சைப் பழச்சாறு கலந்து குடிக்கலாம். இது உடல் சூட்டைக் குறைக்கும். சிறுநீர் எரிச்சலைத் தணிக்கும். சிறுநீரகக் கற்கள் வராமல் தடுக்க உதவும். கர்ப்பிணிகளுக்கு வரும் கால் வீக்கத்தைக் குறைக்க உதவும்.

கருவளையம் நீங்க விளக்கெண்ணெய் – பால்

Image
விளக்கெண்ணெய் – பால் ஒரு டீஸ்பூன் விளக்கெண்ணெய் உடன், ஒரு டீஸ்பூன் பால் சேர்த்து நன்கு கலந்து, கண்களைச் சுற்றிலும் தடவி, 10 நிமிடங்கள் கழித்துக் கழுவிவந்தால், கண்கள் குளிர்ச்சி பெறும். கருவளையம் நீங்கும்.

உறுதி எடுப்போம்

Image
உறுதி எடுப்போம் ஒரு மனிதன் ஒரு நாளைக்கு மூன்று சிலிண்டர்கள் அளவு ஆக்ஸிஜனை சுவாசிக்கிறான்., ஒரு ஆக்ஸிஜன் சிலிண்டரின் விலை 700 ரூபாய்., மூன்று சிலிண்டரின் விலை 2100 ரூபாய்., ஒரு வருடத்திற்கு 7,66,000 ரூபாய்க்கு மேல் போகிறது., ஒரு மனிதனின் சராசரி ஆயுள் காலம் 65 வருடம் என்றால் 5 கோடி ரூபாய்க்கு மேல் எட்டுகிறது., இவ்வளவு விலையுயர்ந்த, மதிப்பு மிகுந்த சுவாசக்காற்றை நமக்காக இலவசமாக மரங்கள் தருகிறது........, அப்படி என்றால் நாம் மரங்களுக்கு எந்த அளவிற்கு மரியாதை கொடுக்க வேண்டும்., மரங்கள், இயற்கை மனிதனுக்கு தந்த பொக்கிஷம்...., இனியேனும் மரங்கள் என்னும் அட்சயபத்திரத்தை அழிக்கவிடாமல் தடுத்து காக்க உறுதி எடுப்போம்.

அம்மாவின் ஞாயிற்றுக்கிழமை

Image
அம்மாவின் ஞாயிற்றுக்கிழமை சனிக்கிழமை மாலையே துவங்கிவிடுகிறது ஞாயிற்றுக்கிழமை விடுமுறையின் குதூகலம் பள்ளி செல்கிற குழந்தைகளுக்கு ஞாயிறு காலை செய்தித்தாள் இணைப்புகளுடன் ஒன்றிவிடுகின்றார் ஓய்வு பெற்ற தாத்தா தொலைக்காட்சியின் ஆட்டம் பாட்டங்களில் ஆரவாரிக்கின்றனர் அக்காவும் தங்கையும் சூரியன் சுட்டெரிக்கத் துவங்கும் வரை தூக்கத்தில் கிடக்கின்றனர் அண்ணன்கள் அசைவ உணவுத் தயாரிப்புக்காக மார்க்கெட்டில் இருந்து திரும்புகின்றனர் அப்பாவும் சித்தப்பாக்களும் மெலிதான டாஸ்மாக் வாசனையுடன் அவரவர் ஞாயிற்றுக்கிழமை அவரவர் விருப்பம்போல ஆனால் அன்றாடம்போலவே அடுப்படியில் தொடங்கி அங்கேயே முடிகிறது அம்மாவின் ஞாயிற்றுக்கிழமை!

ஆன்லைனில் வாக்காளர் அடையாள அட்டை பெறுவது எப்படி.??

Image
ஆன்லைனில் வாக்காளர் அடையாள அட்டை பெறுவது எப்படி.?? Link : http://www.elections.tn.gov.in செய்தியை அதிகமாக ஷேர் (SHARE) செய்து விழிப்புணர்வை ஏற்படுத்துவோம்,

பழங்களை எப்படிச் சாப்பிட வேண்டும்?

Image
பழங்களை எப்படிச் சாப்பிட வேண்டும்? பழங்களைக் கடித்துச் சாப்பிடுவதே சிறந்தது. முன் பற்களில் மட்டும் கடித்து உடனே விழுங்கிவிடக் கூடாது. அனைத்துப் பற்களிலும் பழங்கள் படுமாறு நன்றாக வாயில் அரைத்து விழுங்க வேண்டும்.பழங்களை ஜூஸாக அருந்துவதை கூடுமானவரை தவிர்க்க வேண்டும். உடல் நலம் குன்றியவர்கள், பழங்களைச் சாப்பிட மறுக்கும் குழந்தைகள், மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக்கொள்பவர்கள், முதியவர்கள் ஜூஸாகச் சாப்பிடலாம்.

விலை உயர்ந்த பொருளை சமாதியில் புதைக்கலாமா?

Image
விலை உயர்ந்த பொருளை சமாதியில் புதைக்கலாமா? பிரேசிலின் மிகப்பெரும் கோடீஸ்வரர் தனக்கு சொந்தமான பத்து லட்சம் அமெரிக்க டாலர் மதிப்புள்ள பெண்ட்லே சொகுசு காரை புதைக்க விரும்புவதாக விளாம்பரப்படுத்தினார் , அதற்கு அவர் சொன்ன காரணம் இறப்புக்கு பின்னர் இந்த கார் பயன்படும் என்று . இதைகேட்ட பத்திரிக்கைகள் விமர்சனம் செய்தன , பைத்தியக்காரன் பத்துலட்சம் டாலரை வீணடிக்கிறானே முட்டாள் என்றெல்லாம் திட்டி எழுதினார்கள் . பொதுமக்கள் திட்டி தீர்த்தார்கள் . புதைப்பதாக சொன்ன தேதியும் வந்தது எல்லோரும் ஆவலாக என்னதான் நடக்குது என்று பார்க்க கூடினர் . பெண்ட்லே காரை புதைக்கும் அளவுக்கு பெரிய பள்ளம் வெட்டப்பட்டு புத்தம் புதிய அந்த காரும் நிறுத்தப்பட்டிருந்தது. எல்லோரும் பொறாமையாக பார்த்துகொண்டிருந்தனர். பணக்காரர் வந்தார் காரை புதைக்கும் ஏற்பாடுகள் துவங்கியது.சிலர் நேரிலேயே அவரின் பைத்தியக்காரத்தனத்தை திட்டிதீர்த்தனர். விலை உயர்ந்த பொருளை இப்படி வீணடிக்கிறீர்களே இது எப்படி உங்கள் மரணத்திற்கு பிறகு பயன்படும் அதற்கு பதில் யாருக்காவது தானமாக கொடுத்தால் அவர்களுக்காவது பயன்படுமே என்று கோபத்துடன் கேட்டனர். அப்போது

முடி வெடிப்பு ஏற்படுவதைத் தடுக்க

Image
முடி வெடிப்பு ஏற்படுவதைத் தடுக்க வைட்டமின் சி நிறைந்த உணவுப் பொருட்களை அதிகம் உட்கொண்டால், முடி வெடிப்பு ஏற்படுவதைத் தடுக்கலாம். அதற்கு வைட்டமின் சி உணவுப் பொருட்களான ஆரஞ்சு, எலுமிச்சை, பெர்ரிப் பழங்கள், தர்பூசணி மற்றும் தக்காளியை உணவில் அதிகம் சேர்த்து வாருங்கள்.

முகம் பளபளப்பாகவும், இளமையுடனும் இருக்க…!

Image
முகம் பளபளப்பாகவும், இளமையுடனும் இருக்க…! ஆரஞ்சு பழத்தை இரண்டாக வெட்டி முகத்தில் தேய்த்து, பத்து நிமிடம் கழித்து சோப்பு போட்டு கழுவ வேண்டும். தினம் இவ்வாறு செய்து வந்தால் முகம் பளபளப்பாகவும், இளமையுடனும் இருக்கும்.

முகக் கருமை நீங்க தயிர் – மஞ்சள் பேக்

Image
முகக் கருமை நீங்க தயிர் – மஞ்சள் பேக் ஒரு கப் தயிரில், ஒரு சிட்டிகை மஞ்சள்தூளை நன்கு கலக்க வேண்டும். அதை முகம், கை, காலில் பூசி, 20 நிமிடங்கள் கழித்துக் குளிக்கலாம். காலை குளிப்பதற்கு 20 நிமிடங்களுக்கு முன்னர் செய்துவிட்டுக் குளிக்க வேண்டும். தினமும் செய்துவந்தால், இரண்டு வாரங்களில் நல்ல பலன் கிடைக்கும்.

மாரடைப்பு (Heart Attack) குறித்த விழிப்புணர்வு

Image
மாரடைப்பு (Heart Attack) குறித்த விழிப்புணர்வு S T R  என்ற இந்த மூன்றெழுத்துக்களை மறக்கக் கூடாது. S = SMILE T = TALK R = RAISE BOTH ARMS ஒரு திருமண நிகழ்வில், பொது இடங்களில் அல்லது வீட்டில் இருக்கும் போது, ஒரு ஆணோ அல்லது பெண்ணோ தடுமாறுவதை, அல்லது கீழே விழுவதைக் கண்டால், உடனே நாம் அவர் மேல் கவனம் செலுத்த வேண்டும். ஆனால், அவர் நம்மிடம் ஒன்றும் இல்லை, நான் நன்றாகத்தான் இருக்கிறேன் என்றெல்லாம் சொல்லுவார். நாமும், ஏதாவது பித்த மயக்கமாக இருக்கும் என்று லேசாக விட்டு விடுவோம். ஆனால் உண்மையில் அது ஒரு மாரடைப்புக்கான அறிகுறியாக இருக்கும் என்று மருத்துவர்கள் சொல்கிறார்கள். மாரடைப்பை முன்கூட்டியே உணரக் கூடிய ஒரு உறுப்பு நமது தலைமைச் செயலகமான மூளையாகும். மூளை அறிவிக்கும் முன்னெச்சரிக்கையே அந்த தடுமாற்றமாக இருக்கலாம். அதனை S T R  அதாவது, SMILE (சிரிக்க சொல்வது), TALK (பேச சொல்வது), RAISE BOTH ARMS (இரண்டு கைகளையும் மேலே தூக்க சொல்வது) போன்ற செயல்களை செய்யச் சொல்வது மூலம், அவர்களுக்கு ஏற்படப் போகும், மாரடைப்பை (ஹார்ட் அட்டாக்) முன்கூட்டியே

கொளுத்தும் கோடை காலம்

கொளுத்தும் கோடை காலம் எந்த வருஷமும் இந்த மாதிரி வெயில் இல்லப்பா நான் சின்ன பிள்ளையா இருக்குறப்ப பெரியவங்க சொல்லி கேட்டிருக்கேன் இப்ப வரைக்கும் இந்த வசனத்த எல்லாரும் சொல்லிட்டுதான் இருக்கோம் காலத்தை நாமே சுழல செய்கிறோம் இறைவனின் வாக்குக்கு ஏற்ப கோடை,காற்று,மழை, பனி என காலங்கள் மாறி மாறி வரத்தான் செய்யும் இந்த கால மாற்றங்களின் பிண்ணனியில் ஒவ்வொரு மாறுதல்களுக்கு பின்னும் மாபெரும் காரணம் உண்டு அதில் நாம் அறிந்தது சில அறியாதது பல இந்த கால மாற்றங்கள் நன்மையை கொண்டு வருவது போலவே துணையாக சின்ன சின்ன சங்கடங்களையும் சேர்த்தே கொண்டு வரும் அந்த சங்கடங்களையும் சரி செய்யும் வசதியையும் கருணையாளன் அல்லாஹ் சேர்த்தே நமக்கு அளித்திருக்கிறான் எல்லா சீசனும் மாம்பழ சீசன் என்பது முதாளித்துவத்தின் கோணல் புத்தி எந்த எந்த காலத்தில் மனிதனுக்கு என்ன என்ன தேவையோ அதை அளிப்பது இறைவனின் கருணை அந்த வகையில் குழந்தைகள் மேல் பழியை போட்டு அப்படியே கொஞ்சம் நாமலும் சாப்பிட்டுக்கலாம் என துரித உணவுகள், செயற்கை உணவுகள், செயற்கை பானங்கள் (soft drink,) போன்றவற்றை சாப்பிட்டு உடல் உபாதைகளை வெற்றிலை பாக்கு வைத்

தீக்காயங்களுக்கு மருதாணி இலைகள்

Image
தீக்காயங்களுக்கு மருதாணி இலைகள் தீக்காயங்களுக்கு மருதாணி இலைகள் பெரிதும் உதவி புரியும். மருதாணியில் குளிர்ச்சி ஏற்படுத்தும் தன்மை உள்ளது. அதனால் மருதாணி இலைகளை தீக்காயம் ஏற்பட்டுள்ள இடத்தில் தடவினால் வலி வெகுவாக குறையும். அதனால் தீக்காயங்களுக்கு மருதாணி இலைகளை மருந்தாக பயன்படுத்தலாம்.

செல்போன் மூலம் தடுப்பூசி தகவல்கள்!

Image
📱செல்போன் 📱 👉மூலம் 👈 💉 “தடுப்பூசி” 💉 தகவல்கள்! 👉 இதை முடிந்த வரை Share செய்க.... 💑 பெற்றோர்கள் தங்கள் 📲 செல்போனில் 👭 குழந்தையின் 📝 பெயர் மற்றும் 📆 பிறந்த தேதியை 📥 எஸ்.எம்.எஸ். செய்தால் போதும். 👸 குழந்தைக்கு 📅 எந்தத் தேதியில் 💉எந்தத் தடுப்பூசி போடப்பட வேண்டும் என்ற 📩 தகவல் உடனடியாக வந்துவிடும். " National Vaccine Remainder " என்று இதற்குப் பெயர். 👉 இது ஓர் இலவச சேவை. 🇮🇳 இந்தியாவில் உள்ள அனைவரும் இதைப் பயன்படுத்திப் பலன் பெறலாம். ✅ இதற்கு என்ன செய்ய வேண்டும்? 👇👇👇 <Immunize>space<குழந்தையின் பெயர்>space<பிறந்த தேதி> என்று டைப் செய்து, 566778 எண்ணுக்குத் 📤 தகவல் அனுப்ப வேண்டும். ☝உதாரணத்துக்கு, Immunize Rekha 04-07-2014 என்று டைப் செய்து அனுப்புங்கள். 👉 உடனே ‘உங்கள் பெயர் பதிவு செய்யப்பட்டு விட்டது’ என்று 📩 முதல் கட்டத் தகவல் வரும். 👉அடுத்து, உங்கள் 👸 குழந்தைக்கு எந்தத் 💉 தடுப்பூசி, 📆 எந்தத் தேதியில் போடப்பட வேண்டும் என்று தகவல் வரும். 👉 குழந்தைக்கு 12 வயது ஆகும் வரை இந்தத் தகவல்கள் 📩 📩 📩 வ

நல்ல மனநிலையை ஏற்படுத்த சிவப்பு மிளகாய்

Image
நல்ல மனநிலையை ஏற்படுத்த சிவப்பு மிளகாய் வைட்டமின் ஏ, சி இதில் அதிகம். அடர் சிவப்பு நிறம் என்றாலே, அதில் பீட்டாகரோட்டீன் இருக்கும். சுவாசக் குழாய்கள், நுரையீரல், குடல், சிறுநீரகக் குழாய் போன்றவற்றுக்கு நல்லது. அளவாகச் சாப்பிடலாம். செரிமானத்துக்கு உதவுகிறது. ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்துகிறது. மிளகாயில் உள்ள காப்சைசின் (Capsai cin) என்ற ரசாயனம், நரம்பு மண்டலத்துக்குச் சென்று நல்ல மனநிலையை ஏற்படுத்தும்.   

இதய நோய்கள் வராமல் தடுக்க ஆப்பிள்

Image
இதய நோய்கள் வராமல் தடுக்க ஆப்பிள் ஆன்டிஆக்ஸிடன்ட் நிறைந்த பழங்களில் உயர்ந்த இடத்தில் இருப்பது ஆப்பிள். நார்ச்சத்துக்கள், வைட்டமின் சி மற்றும் குறைந்த கலோரிகள் கொண்டது. கொழுப்பு இல்லாதது. இதில் உள்ள பாலிபீனால்ஸ் (Polyphenols), ஆன்டிஆக்ஸிடன்டாகச் செயல்படுகிறது. தொடர்ந்து ஆப்பிள் சாப்பிடுகையில், இதய நோய்கள் வராமல் தடுக்கப்படும். நல்ல கொழுப்பை (HDL) ஆப்பிள் உயர்த்தும் என்கின்றன சில ஆய்வுகள். ஆப்பிளை கடித்துச் சாப்பிடும்போது, உமிழ்நீரைச் சுரக்கச்செய்து, கிருமிகளிடமிருந்தும், பற் சிதைவுகளிடமிருந்தும் பற்களைப் பாதுகாக்கும். ரெட் ஆப்பிளில் உள்ள குவர்செட்டின் (Quercetin) என்ற ஆன்டிஆக்ஸிடன்ட் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துகிறது.

மருந்தாக செயல்படும் இசை

Image
மருந்தாக செயல்படும் இசை மனதுக்கும், மூளைக்கும் இதமான வகையில் மெல்லிய இசைக்கருவிகளால் வாசிக்கப்பட்ட வருடும் இசை. பாடல் வரிகள் இல்லாத இசை கருவிகளால் மட்டுமே வாசிக்கபட்டு தற்போது சிடிகளாக கடைகளில் விற்கப்படுகிறது. இதை நாள்தோறும் சில நிமிடங்களுக்கு கேட்கலாம்.

தினம் ஒரு ஜூஸ் : மிக்ஸ்டு வெஜிடபிள் ஜூஸ்!

Image
தினம் ஒரு ஜூஸ் : மிக்ஸ்டு வெஜிடபிள் ஜூஸ்! தேவையானவை:  கேரட், தக்காளி - தலா 3, பீட்ரூட் - 1, பாகற்காய் - சிறியது 1, சுரைக்காய் - சிறியது 1, முட்டைக்கோஸ் - 25 கிராம், இஞ்சி - மிகச் சிறிய துண்டு, ஓமம் - அரை டீ ஸ்பூன், எலுமிச்சைச் சாறு - ஒரு டீஸ்பூன், மிளகுத் தூள் - அரை டீஸ்பூன், உப்பு, ஐஸ் கட்டிகள் - தேவையான அளவு.   செய்முறை:  ஒரு சிறிய பாத்திரத்தில் சிறிதளவு தண்ணீர்விட்டு, ஓமத்தை ஊறவைக்க வேண்டும். கேரட், தக்காளி, பீட்ரூட், பாகற்காய், சுரைக்காய், முட்டைகோஸ், இஞ்சி ஆகியவற்றைச் சிறிய துண்டுகளாக வெட்டி, மிக்ஸியில் அரைக்க வேண்டும். இதனுடன், ஓமத் தண்ணீர், எலுமிச்சைச் சாறு, மிளகுத் தூள், உப்பு சேர்த்து, மீண்டும் அரைக்க வேண்டும். தேவைப்பட்டால், ஐஸ் துண்டுகள் சேர்க்கலாம்.   பலன்கள்   * இதய நோயாளிகளுக்கு ஏற்ற ஜூஸ். சுரைக்காய் இருப்பதால், உடல்பருமன் இருப்பவர்கள், இந்த ஜூஸைக் குடிக்கலாம். * புற்றுநோய் வராமல் தடுக்க, இதை அருந்தலாம். * மலச்சிக்கல், ஜீரணக்கோளாறு உள்ளவர்கள், சளியால் அவதிப்படுபவர்கள் (ஐஸ் இல்லாமல்) இந்த ஜூஸைப் பருகலாம். * எதிர்ப்புச் சக்தி அதிகரிக்க, இந்த ஜூஸ் ஏற்றது.

உடல் ஸ்லிம் ஆக வேண்டுமா?

Image
உடல் ஸ்லிம் ஆக வேண்டுமா.. அதிகாலையில் விழித்தெழுங்கள் அதிகாலையில் விழித்து விடுபவர்கள் ஸ்லிம் ஆவதுடன் மகிழ்ச்சியாகவும், நல்ல உடல்நலத்துடன் இருப்பார்கள். அதிகாலையில் விழித்து விடுபவர்கள் பெரும்பாலும் ஸ்லிம் ஆக உள்ளனர். அவர்களிடம் காலையில் வேலையை துவங்கும் போது காணப்படும் உற்சாகம் வெகு நேரம் நீடிக்கிறது.

வெயில் கால குழந்தை பராமரிப்பு

Image
வெயில் கால குழந்தை பராமரிப்பு ஒரே இடத்தில் படுத்து‌க்கொண்டிருப்பதால், குழந்தை உடலின் பின்பகுதி சீக்கிரம் உஷ்ணமாகிவிடும் என்பதால், குறைந்தது இரண்டு மணி நேரத்திற்கு ஒருதடவை, குழந்தையை இட‌ம் மாற்றி படுக்க வைக்க வேண்டும். அவ்வாறு தரையில் படுக்க வைக்கும்போது குழந்தைக்கு அருகில் ஒன்றின் மேல் ஒன்று அடுக்கப்பட்ட கனமான பொருட்கள் எதுவும் இருக்ககூடாது.

கருகருவென முடி வளர

Image
கருகருவென முடி வளர வாரம் ஒரு முறை முடக்கத்தான் கீரையை அரைத்து தலையில் தேய்த்து 5 நிமிடம் ஊறியதும் குளிக்கவும். இதுபோல் தொடர்ந்து மூன்று மாத காலம் குளித்துப் பார்க்கவும். முடி கொட்டுவது நின்று விடும் அதுமட்டும் அல்ல இந்த கீரை நரை விழுவதைத் தடுக்கும். கருகருவென முடி வளரத்தொடங்கும்

உதடு கருப்பா இருக்கா?

Image
  உதடு கருப்பா இருக்கா? எலுமிச்சை சாற்றினால் செய்யப்பட்ட லிப் பாம்களை உதடுகளுக்குப் பயன்படுத்தி வந்தால், அவை கருமையைப் போக்கி, உதடுகளை நாளடைவில் பிங்க் நிறத்தில் மாற்றும். எனவே எலுமிச்சை நிறைந்த லிப் பாம்களை வாங்கி பயன்படுத்துங்கள்.  

தோற்று நோய்களை குணமாக்கும் குங்குமப்பூ

Image
குங்குமப்பூவுடன் தேன் கலந்து, முகத்தில் தடவிவர, இழந்த பொலிவை மீண்டும் பெறலாம். பிறப்புஉறுப்பு, அக்குள் போன்ற இடங்களில் பூஞ்சைத் தொற்று இருந்தால், குங்குமப்பூவில் தேன் சேர்த்துத் தடவலாம். பாலில் அரை மணி நேரம் குங்குமப்பூவை ஊறவைத்து முகம், கழுத்தில் தடவி, 20 நிமிடங்களுக்குப் பிறகு கழுவலாம். பொலிவு இழந்த சருமத்துக்கும், பருக்கள் நிறைந்த சருமத்துக்கும் துளசி, குங்குமப்பூ கலந்த விழுதைப் பூசிவர, நல்ல பலன் கிடைக்கும்.

கோடை காலத்தில் நம்மை பாதுகாக்கும் முறைகள்

Image
நேரடியான சூரிய ஒளியில் நீண்ட நேரம் இருந்தால் தோலில் நீர் வற்றும். சுருக்கங்கள் தோன்றும். வெளியே செல்லும்போது முழுக்கைச் சட்டை, தொப்பி அணிந்து செல்லுங்கள். நண்பகலில் வெளியே சுற்றுவதைத் தவிருங்கள். அப்படியே வெளியே செல்லவேண்டி இருந்தால், அரை மணி நேரத்துக்கு முன்பு சன்ஸ்க்ரீன் க்ரீம் போட்டுக்கொள்ளுங்கள். இந்த க்ரீம்களின் எஸ்.பி.எஃப். அளவு 30-க்கு மேல் இருக்க வேண்டும். 4 மணி நேரத்துக்கு ஒருமுறை தொடர்ந்து இந்த க்ரீம் போட்டுக்கொண்டால் சூரியக் கதிர்வீச்சின் பாதிப்பில் இருந்து சருமத்தைப் பாதுகாக்கலாம்

முதுகு வலியை போக்கும் பயிற்சி

Image
முதலில் விரிப்பில் நேராக கால்களை நீட்டி மல்லாந்து படுத்துக் கொள்ளவும். கைகளை தோள்பட்டைக்கு இணையாக நீட்டவும். இப்போது கால்களை முட்டி வரை மடக்கவும். பின்னர் கால்களை மட்டும் வலது பக்கமாக தரையில் படும்படி சாய்க்கவும் (படத்தில் உள்ளபடி). இந்த நிலையில் கைகளையோ, உடலையோ திருப்பக்கூடாது. இந்த நிலையில் சில விநாடிகள் இருந்த பின்னர் கால்களை மாற்றி இடது பக்கமாக செய்யவும்.  ஆரம்பத்தில் கால்கள் தரையை தொடுவது கஷ்டமாக இருக்கும். நன்கு பழகிய பின்னர் படத்தில் உள்ளது போல் செய்ய வரும். இவ்வாறு ஆரம்பத்தில் 15 முறை செய்ய வேண்டும். பின்னர் படிப்படியாக எண்ணிக்கையின் அளவை அதிகரித்து 25 முறை செய்யலாம். இந்த பயிற்சியை காலையில் செய்தால் நல்ல பலன் கிடைக்கும்

இந்தியா மற்றும் இந்தியர்களை பற்றி உங்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லாத பல விசயங்கள்..!!!

1. அமெரிக்காவில் உள்ள மருத்துவர்களில் 33% பேர் இந்தியர்கள். 2. அமெரிக்காவில் உள்ள விஞ்ஞானிகளில் 12% பேர் இந்தியர்கள். 3. உலகில் உள்ள ஐ.பி.எம் (IBM) நிறுவனத்தில் பணிபுரிபவர்களில் 23% பேர் இந்தியர்கள். 4. அமெரிக்க விண்வெளித்துறை நாசா"வில் (NASA) பணிபுரிபவர்களில் 36% பேர் இந்தியர்கள். 5. உலகில் உள்ள இன்டெல் (INTEL) நிறுவனத்தில் பணிபுரிபவர்களில் 17% பேர் இந்தியர்கள். 6. உலகில் உள்ள மைக்ரோசாப்ட் (MICRO SOFT) நிறுவனத்தில் பணிபுரிபவர்களில் 34% பேர் இந்தியர்கள். 7. உலகின் அனைத்து மொழிகளுக்கும் வேராக முதல் தோன்றிய மொழி என்று எடுத்துக்கொள்ளப்படும் தமிழ் ஒரு இந்திய மொழி.. 8. சமஸ்கிருதம் (SANSKRIT) தான் அனைத்து ஐரோப்பிய மொழிகளுக்கும் வேர் மொழி. 9. ஹாட் மெய்ல்"ஐ (HOT MAIL) உருவாக்கியவரும் ஸ்தாபித்தவருமான சபீர் பாட்டியா (SABEER BHATIA) ஒரு இந்தியர். 10. பூஜ்ஜியத்தை கண்டுபிடித்தவரான ஆர்யபட்டா (ARYABHATTA) ஒரு இந்தியர். 11. எண்ணியல் முறையை உருவாக்கியவர்கள் இந்தியர்கள். 12. அல்ஜீப்ரா"வை (ALGEBRA) உருவாக்கியவர்கள் இந்தியர்கள். 13. சதுரங்க (CHESS) விளையாட்டை உருவாக்கியது இந்தி

இது எப்படி இருக்கு.???

Image
ஒரு நிறுவனம் ... வேலைக்கு ஆட்கள் தேவை என்று அறிவித்தது, அதன்படி நிறைய நபர்கள் நேர்கானலுக்கு வந்திருந்தார்கள். அனைவரையும் ஒரு அரங்கத்தில் உட்கார வைத்தார்கள்...அனைவரிடமும் வினாத் தாள்களும், விடைத்தாளும் வழங்கப்பட்டது. இப்பொழுது அந்த நிறுவன மேலாளர் பேசினார், இந்த வினாத்தாளில் பத்து கேள்விகள் உள்ளது. "உங்களுக்கு ஐந்து நிமிடம் நேரம் ஒதுக்கப்படும். அதற்குள் இந்த வினாக்களுக்கு நீங்கள் பதிலளிக்க வேண்டும். தகுதியுடைய நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு வேலை வழங்கப்படும்" என்றார், ஐந்து நிமிட நேரம் ஆரம்பமானது.. நேரம் குறைவாக உள்ளது என்று அனைவரும் வேகமாக பதில் எழுதினர். நேரம் முடிந்த பின்... அனைவரிடமும் விடைத்தாளை வாங்கினார் மேலாளர், விடைத்தாளை வாங்கும் போது ஒவ்வொருவரும், "நேரம் குறைவாக கொடுத்து விட்டீர்கள், எங்களால் ஐந்து கேள்விகளுக்கும், ஏழு கேள்விகளுக்கும் பதில் எழுத முடிந்ததே தவிர, அனைத்து வினாக்களுக்கும் பதில் எழுத முடியவில்லை" என்றனர். அதில் இருவர் மட்டும் எந்த பதிலும் எழுதவில்லை என்று வெற்றுத்தாளை மேலாளரிடம் கொடுத்தனர். அதன்பின், அந்த நிறுவன மேலாளர்

நட்பு

காதல் என்பது வானவில் போன்றது... எந்த நேரத்திலும் மறைந்து போகும். ஆனால் நம் நட்பு வனம் போன்றது... எந்த நேரத்திலும் மறையாது . 🌹☕☕☕☕☕🌹

நண்பனே.....

Image
என் சோகங்கள் கூட சுகமாய் தான் தெரிகிறது ஆருதலாய் நீ இருப்பதால்.. என் வலிகள் கூட வரமாய்த் தான் தெரிகிறது பக்கத்தில் நீ இருப்பதால்... என் கண்ணீர் கூட கனிவாய்த் தான் தெரிகிறது உன் கரங்கள் துடைப்பதால்....

தமிழ் மாதங்கள்

தை பிறந்தால் வழி பிறக்கும் தமிழர் வாழ்வில் வளம் கொழிக்கும்.... மாசியில் மங்களம் சூடிடும் புது வரவுகள் பொங்கிடும்.... பங்குனியில் ஊரெங்கும் திருவிழா தெருவெங்கும் தேரோட்டம்.... சித்திரை வெயிலை இளநீர் பதநீர் தணிக்க சித்திரை விழாக்கள் கோலாகலமாகும்.... வைகாசியில் வைபோகம் கன்னியரும் காளையரும் மணமாலைகள் சூடிட மங்களமாகிடும்.... ஆனியில் உச்சிவெயில் தணியும் ஊரெல்லாம் மெல்லிய தென்றல் வீசும்... ஆடியில் ஆறுகளில் புதுப்புனல் பொங்கிடும் உழவு ஆடிப்பட்டம் தேடி விதைக்கும்... ஆவணி வந்ததும் நல்வரவும் வந்திடும் தடைகள் நீங்கி சுபகாரியங்கள் நிகழ்ந்திடும்.... புரட்டாசி விரதம் மாந்தரின் மனதை பக்குவப்படுத்த உதவிடும்.... ஐப்பசி மழை அடை மழை ஊரெல்லாம் தீவுபோல் காட்சியளிக்கும்...  கார்த்திகையில் இல்லம்தோரும் அகல்விளக்கு ஒளிர்ந்திட நன்மைகள் குடி புகுந்திடும்.... மார்கழி குளிரில் வாசல்களில் கோலங்களும் வயல்களில் வசந்தங்களும் பூத்திருக்கும்....

திறமைக்கு முதல் மரியாதை.!

Image
“கடுமையாக உழைப்பதை விட திறமையாக உழைக்கக் கற்றுக்கொள்ளுங்கள்”. ஒரு நாள், நாய் ஒன்று காட்டில் வழி தவறிவிட்டது. அப்பொழுது அங்கு சிங்கம் ஒன்று பசியோடு அலைவதைப் பார்த்த நாய் ஒரு நிமிடம் பதறி இன்றோடு நம் கதை முடிந்தது என்று எண்ணியது. அப்பொழுது அங்கு கிடந்த எலும்பு துண்டுகளைப் பார்த்ததும் அருமையான திட்டம் ஒன்றை தீட்டியது. சிங்கம் வரும் வழியில் திரும்பி உக்கார்ந்து கொண்டு எலும்பு துண்டுகளை சுவைக்க தொடங்கியது. சுவைத்து கொண்டே சத்தமாக, “சிங்கத்தை கொன்று தின்பது எவ்வளவு சுவையாக உள்ளது, ஆனால் வயிறு நிறையவில்லை. இன்னொரு சிங்கம் கிடைத்தால், ஆஹா! வயறு நிறைந்து விடும்” என்று கூறியது. இதைக் கேட்ட சிங்கம் “அய்யோ..! இந்த நாய் சிங்கத்தை அல்லவா கொன்று தின்கிறது” என்று நினைத்து பயந்து அங்கிருந்து ஓடி போனது. இதையெல்லாம் மரத்தின் மேல் இருந்து குரங்கு ஒன்று பார்த்து கொண்டிருந்தது. சிங்கத்தை ஏமாற்றிய இந்த நாயை சிங்கத்திடம் போட்டுக் கொடுத்தால், சிங்கத்தின் நடப்பை பெற்று வாழ் நாளெல்லாம் பயம் இல்லாமல் வாழலாம் என்று நினைத்தது. உடனே சிங்கத்திடம் சென்று, நாய் செய்த தந்திரத்தைப் பற்றி சொன்னது. அதை கவனித்த

உழைப்பின் மகத்துவம்

Image
கையளவு துணி இருந்தாலும் கால்மேல் கால்போட்டு கம்பீரமாய் பொதுஇடத்தில் உட்காரமுடிகிறது என்றால் அது உடை தரும் கம்பீரமல்ல, உழைப்பு தருகின்ற கம்பீரம்! கார், பணம், பதவி பார்த்து வருகின்ற மரியாதைகள் அவை போனதும் அவைகளோடே போய்விடும், உழைப்பின் மூலம் வருகின்ற மரியாதைகள் உயிர்போனாலும் போவதில்லை! கோவணத்தோடு நின்றாலும் குன்றின் மீது ஏறி கர்வமாய் நிற்கக்கூடிய தைரியம் கடவுளுக்கு பின் விவசாயிக்கு மட்டுமே இருக்கிறது! படைப்பது மட்டுமல்ல பயிரிடுவதும் கூட கடவுள் தொழில் தான்!!!!!!!!!!

இன்றைய தத்துவம்....

கோயிலை இடித்துவிட்டு பள்ளிக்கூடம் அமைப்போம் என்றார்கள்... ஆனால் உண்டியலை அகற்ற மறந்துவிட்டார்கள்...!!! ****************************************** ஓடும் ஓட்டமெல்லாம் மரணத்துக்காத்தான் எனும் போது, கொஞ்சம் நிதானமாகவும் நடக்கலாம்...!!! ****************************************** நான் உங்களை பற்றி நினைப்பதை எல்லாம் சொல்லி விட வேண்டுமானால், நீங்கள் என் எதிரியாக இருக்க வேண்டும்...!!! ***************************************** ஏசி என்பது நாம் இருக்கும் சின்ன அறையை குளிராகவும் இந்த பெரிய பூமியை சூடாகவும் மாற்றுகிறது...!!! ****************************************** முடி வளர்க்கிறதுக்கு எடுக்குற முயற்சி, செடி வளர்ப்பதற்கு யாரும் எடுக்கிறதில்லை...!!! ****************************************** அனைவரும் ஆவேசத்துடன், முன்னேறிச் சென்று கொண்டு இருக்கிறார்கள். கொஞ்சம் அசந்தால், நம்மையும் மிதித்துத் தாண்டிச் சென்று விடுவார்கள்...!!! ****************************************** தன்னைப் புலி என்று நினைக்கும் எல்லா ஆண்களும் தம் மனைவியிடம்"மியாவ்" என்றே கர்ஜிக்கிறார்கள்...

நிழல் தேடும் பெண்மை....

காலை கதிர்வேண்டாம்... பொன்மாலையும் வேண்டாம்.... தாகம் தணிக்கும் தண்ணீர் வேண்டாம்... ௨றக்கம் கூடு வேண்டாம்... அழகிய நிலவும் வேண்டாம்... அன்றில் பறவைகள் வேண்டாம்.... குயிலின்ஓசை வேண்டாம்.... மழலை பாஷை வேண்டாம்.... அன்பே ௨ன் நிழல் போதும் ௭னக்கு !

ஊனம்

பிரம்மனின் கையெழுத்தில் பிழை...!

பட்டுப்பூச்சி போல்....

தேனுக்கான சொந்தமே பட்டுப்பூச்சிக்கு மலருடன் சில நிமிடங்களில் முடிந்துவிடும்... சில மனிதர்களும் இதுபோலத்தான் தேவைகளுக்காகவே தேவைப்படுகிறது சொந்தங்கள்!

வல்லவனுக்கு

வல்லவனுக்கு புல்லும் வலுவான ஆயுதமே! வீசிய வலையில் விழுந்த மீனைக் கைபற்றிட புல்லையே தூணாக்கி பற்றிக்கொண்டு கால்களில் அலகாலே அம்மீனை அசைப்போட அங்கலாய்த்திடும் பறவையும் இப்பழமொழி அறிந்தே வினையாற்றியதோ...? பறவைக்குப் புரிந்தது மனிதர்க்குப் புரிவதில்லை! மனத்தால் ஆகாததும் முயன்றால் ஆகாததும் புத்தியால் ஆகிடும்!

மது கொடியது

மது கொடியது .... மாதுவும் கொடியது .... காதல் எல்லாவற்றையும்.... விட கொடியது ....!!! உயிரே ... எண்ணத்தால் கவிதை ... எழுதி - கண்ணீரால் ... அழிக்கிறேன் ....!!! தோல்வி ஒன்று ... இல்லாவிட்டால் .... காதல் என்ற ஒன்றுக்கு .... மதிப்பு பூச்சியம் .....!!!

நுங்கு சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்

Image
💥கடுங் கோடைக் காலத்தில் நம்மைப் பாதுகாக்கும் தோழன்தான் நுங்கு. தவிருங்கள் artificial cool drinks, 🍦🍨🍧 ice cream ஐட்டங்களை! 🌸பனைவெல்லம், பனங்கற்கண்டு, பனங்கிழங்கு, மட்டை, ஓலை என பனையில் இருந்து கிடைக்கும் அனைத்துப் பொருட்களுமே மருத்துவ குணம் வாய்ந்தவை. 🌸நுங்கில் வைட்டமின் பி,சி இரும்புச்சத்து, கால்சியம், துத்தநாகம், சோடியம், மக்னீசியம், பொட்டாசியம், தயாமின், அஸ்கார்பிக் அமிலம் மற்றும் புரதம் போன்ற சத்துகள் அதிகம் காணப்படுகின்றன. 🌸நுங்குக்குக் கொழுப்பைக் கட்டுப்படுத்தி, உடல் எடையைக் குறைக்கும் தன்மை அதிகம். 🌸நுங்கு நீர் வயிற்றை நிரப்பி பசியையும் தூண்டும். இதனால் சாப்பிட பிடிக்காமல் இருப்பவர்களுக்கு நல்ல பசி ஏற்படும். 🌸மலச்சிக்கல் மற்றும் வயிற்றுப் போக்கு இரண்டுக்குமே நுங்கு ஒரு சிறந்து மருந்து. 🌸சிலருக்கு உடல் உஷ்ணம் காரணமாக எவ்வளவுதான் தண்ணீர் குடித்தாலும் தாகம் அடங்காது. அவர்கள் நுங்கைச் சாப்பிட்டால் தாகம் அடங்கிவிடும். 🌸ரத்தசோகை உள்ளவர்கள் நுங்கைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் விரைந்து குணமாகி உடல் சுறுசுறுப்பாகும். 🌸நுங்கில் அந்த்யூசைன்