தினம் ஒரு ஜூஸ் : மிக்ஸ்டு வெஜிடபிள் ஜூஸ்!

தினம் ஒரு ஜூஸ் : மிக்ஸ்டு வெஜிடபிள் ஜூஸ்!




mixed vegetable juice
தேவையானவை: கேரட், தக்காளி - தலா 3, பீட்ரூட் - 1, பாகற்காய் - சிறியது 1, சுரைக்காய் - சிறியது 1, முட்டைக்கோஸ் - 25 கிராம், இஞ்சி - மிகச் சிறிய துண்டு, ஓமம் - அரை டீ ஸ்பூன், எலுமிச்சைச் சாறு - ஒரு டீஸ்பூன், மிளகுத் தூள் - அரை டீஸ்பூன், உப்பு, ஐஸ் கட்டிகள் - தேவையான அளவு.  செய்முறை: ஒரு சிறிய பாத்திரத்தில் சிறிதளவு தண்ணீர்விட்டு, ஓமத்தை ஊறவைக்க வேண்டும். கேரட், தக்காளி, பீட்ரூட், பாகற்காய், சுரைக்காய், முட்டைகோஸ், இஞ்சி ஆகியவற்றைச் சிறிய துண்டுகளாக வெட்டி, மிக்ஸியில் அரைக்க வேண்டும். இதனுடன், ஓமத் தண்ணீர், எலுமிச்சைச் சாறு, மிளகுத் தூள், உப்பு சேர்த்து, மீண்டும் அரைக்க வேண்டும். தேவைப்பட்டால், ஐஸ் துண்டுகள் சேர்க்கலாம்.  
பலன்கள்  * இதய நோயாளிகளுக்கு ஏற்ற ஜூஸ். சுரைக்காய் இருப்பதால், உடல்பருமன் இருப்பவர்கள், இந்த ஜூஸைக் குடிக்கலாம். * புற்றுநோய் வராமல் தடுக்க, இதை அருந்தலாம். * மலச்சிக்கல், ஜீரணக்கோளாறு உள்ளவர்கள், சளியால் அவதிப்படுபவர்கள் (ஐஸ் இல்லாமல்) இந்த ஜூஸைப் பருகலாம். * எதிர்ப்புச் சக்தி அதிகரிக்க, இந்த ஜூஸ் ஏற்றது.

Comments

Popular posts from this blog

இரவு நல்ல தூக்கம் வேண்டுமா? சாப்பிட வேண்டிய மற்றும் தவிர்க்க வேண்டிய உணவுகளை அறிந்துகொள்ளுங்கள்..!

பெண்ணுறுப்பு பகுதியில் தோல் உரிவது ஏன் தெரியுமா...?

சிறந்த உடலுறவுக்கான குறிப்புகள்!