வல்லவனுக்கு

வல்லவனுக்கு புல்லும்
வலுவான ஆயுதமே!
வீசிய வலையில் விழுந்த
மீனைக் கைபற்றிட புல்லையே
தூணாக்கி பற்றிக்கொண்டு
கால்களில் அலகாலே அம்மீனை
அசைப்போட அங்கலாய்த்திடும்
பறவையும் இப்பழமொழி அறிந்தே வினையாற்றியதோ...?
பறவைக்குப் புரிந்தது மனிதர்க்குப் புரிவதில்லை!
மனத்தால் ஆகாததும் முயன்றால்
ஆகாததும் புத்தியால் ஆகிடும்!

Comments

Popular posts from this blog

காதலுக்காக காத்திருப்பது சுகமே!

பருப்பு ரசம்

ரவா கேசரி