ரஜினியின் அண்ணாத படத்தின் கதை லீக் ஆனதா ??

ரஜினியின் அண்ணாத்த படத்தின் கதை லீக் ஆனதா?

சூப்பர் ஸ்டார் ரஜினி நடிக்க உள்ள அண்ணாத்த படம் கைவிடப்பட்டதாக 2 நாட்களுக்கு முன்பு வெளியான செய்தி வதந்தி என்று முடிவான நிலையில், இப்போது அண்ணாத்த படத்தின் கதை லீக் ஆனதாக ஒரு தகவல் சமூக ஊடகங்களில் உலா வருகிறது.

சூப்பர் ஸ்டார் ரஜினி நடிக்க உள்ள அண்ணாத்த படம் கைவிடப்பட்டதாக 2 நாட்களுக்கு முன்பு வெளியான செய்தி வதந்தி என்று முடிவான நிலையில், இப்போது அண்ணாத்த படத்தின் கதை லீக் ஆனதாக தகவல் சமூக ஊடகங்களில் உலா வருகிறது.

கொரோனா வைரஸ் பரவல் அச்சுறுத்தலால் கடந்த மார்ச் 25 முதல் பொதுமுடக்கம் நடைமுறையில் இருந்து வருகிறது. இதனால், தமிழ் சினிமா துறையில் அனைத்து திரைப்படங்களின் படப்பிடிப்பு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

பொது முடக்கத்துக்கு முன்னர், இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி அண்ணாத்த என்ற படத்தில் நடிக்கிறார் என்று அறிவிக்கப்பட்டது. இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்தில் ரஜினியுடன் நடிகர்கள் சூரி, சதீஷ் ஆகியோர் நடிக்கின்றனர். பிரகாஷ்ராஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இசையமைப்பாளர் டி.இமான் இசையமைக்கிறார். அண்ணாத்த படம் தீபாவளிக்கு வெளியிட வேண்டும் என திட்டமிடப்பட்டு படப்பிடிப்பு தொடங்கியது. ஆனால், கொரோனாவால் இந்த படத்தின் தயாரிப்பு பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. இதனால், படத்தின் தயாரிப்பு பணி பாதிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், கடந்த 2 நாட்களுக்கு முன்பு ரஜினியின் அண்ணாத்த படம் கைவிடப்பட்டதாகவும் ரஜினி இந்த படத்தில் நடிப்பதற்காக வாங்கிய சம்பளத்தையும் திரும்பக் கொடுத்துவிட்டதாக ஒரு தகவல் வெளியானது. இதனால், கோலிவுட் பரபரப்பானது. விரைவிலேயே இந்து வதந்தி என்று தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து, அண்ணாத்த படத்தில் நடிகை குஷ்பு, மீனா, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ் ஆகியோர் நடிக்க உள்ளதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது. அதோடு, அண்ணாத்த படத்தின் கதை வெளியானதாக ஒரு தகவல் சமூக ஊடகங்களில் உலா வருகிறது.

அண்ணாத்த படத்தின் கதை லீக் ஆனதாக கூறப்படும் கதையில், ரஜினியின் முறைப்பெண்களான குஷ்புவும் மீனாவும் ரஜினியை திருமணம் செய்துகொள்ள போட்டிபோடுகின்றனர். அவர்கள் 2 பேரையும் ஏமாற்ற விரும்பாத அவர் மற்றொரு பெண்ணை திருமணம் செய்துகொள்கிறார். இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ் ரஜினிக்கு மகளாக நடிக்கிறார். இந்த படத்தில் மீனாவும் குஷ்புவும் இறுதியில் கீர்த்தி சுரேஷை மருமகளாக அடைவதாக ஒரு தகவல் வெளியானது.

ரஜினியின் அண்ணாத்த படத்தின் கதை இதுதான் என்று வெளியான கதை இறுதியில் அதுவும் ஒரு வதந்தி என்று தெரியவந்துள்ளது.

Comments

Popular posts from this blog

பெண்ணுறுப்பு பகுதியில் தோல் உரிவது ஏன் தெரியுமா...?

சிறந்த உடலுறவுக்கான குறிப்புகள்!

ஆடை இல்லாமல் தூங்குவதால் ஏற்படும் மாற்றங்கள்!