சமையல் தவிர உப்பின் பிற பயன்பாடுகள்: விவரங்கள் இதோ..!
வீட்டை சுத்தமாக வைத்திருப்பதற்கு உப்பு பல வழிகளில் பயன்படுகிறது.
சமையலுக்கு தேவையான முக்கிய பொருட்களில் ஒன்று உப்பு. சாப்பாட்டுக்கு தேவையான சுவை கொடுப்பதில் அதன் பங்கு முக்கியமானது. உணவு மட்டுமல்லாமல் வேறு சில வேலைகளுக்கும் உப்பு உங்களுக்கும் உதவும். வீட்டை அழகாக, சுத்தமாக வைத்துக் கொள்ள நினைப்பவர்களுக்கு உப்பு பெரிய வரப்பிரசாதம் என்றே சொல்லலாம். வீட்டில் உள்ள கறைகளை அகற்ற நீங்கள் விதவிதமான பொருட்கள் வாங்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. உப்பு மட்டும் போதும். இது பல மேஜிக் செய்யக் கூடியது.
வீட்டை சுத்தமாக வைத்திருக்க உப்பை எவ்வாறு பயன்படுத்தலாம் என்பதை பார்ப்போம்.
×× உங்கள் வீட்டில் அதிக எறும்புகள் இருந்தால், நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம் அவற்றின் பாதையில் உப்பை வைப்பதுதான். இல்லையென்றால் எறும்புகள் அதிகம் இருக்கும் இடங்களில் உப்பு வைத்து விடுங்கள். சில நிமிடங்களில் எறும்புகள் தொல்லைகளில் இருந்து விடுபடலாம்.
×× கதவுகள் மற்றும் ஜன்னல்கள் பளபளக்க உப்பு பயன்படுத்துங்கள். இவற்றின் மீது சிறிது வினிகர் தெளித்து சில நிமிடங்களுக்கு அப்படியே உலர விடுங்கள். இதனையடுத்து பேக்கிங் சோடா மற்றும் உப்பு வைத்து பேஸ்ட் போன்று தயாரித்துக் கொள்ளுங்கள். இந்த கலவையை வினிகர் தெளித்த இடத்தில் தேய்க்கவும். பின்னர் வெதுவெதுப்பான நீர் வைத்து கழுவினால் கதவுகள் பளபளப்பாக இருக்கும்.
அனைத்து வகையான கறைகளையும் அகற்றுவதற்கு உப்பு பயன்படுகிறது.
×× சமையலறை அடுப்பு அல்லது அலமாரியில் உள்ள கறையை அகற்ற முடியவில்லை என்றால் இந்த முறையை முயற்சித்து பாருங்கள். உப்பு மற்றும் வெதுவெதுப்பான தண்ணீர் கலந்து பேஸ்ட் போல் தயாரித்துக் கொள்ளுங்கள். இதனை கறை படிந்த இடத்தில் தடவி சிறிது நேரத்திற்கு பிறகு துடைக்கவும். கறை முழுவதுமாக மறைந்து விடும். பிளாஸ்டிக் பொருட்களை சுத்தம் செய்வதற்கும் இந்த முறையை நீங்கள் பின்பற்றலாம்.
×× பாத்ரூம் அல்லது பாத்திரம் கழுவும் இடங்களில் அடைப்பு ஏதாவது இருந்து கொண்டு தண்ணீர் உள்ளே போகாமல் இருந்தால் உப்பு பயன்படுத்தலாம். இதற்கு நீங்கள் செய்ய வேண்டியது என்னவென்றால், ஒரு கப் உப்பு மற்றும் சமையல் சோடா சிறிதளவு எடுத்துக் கொள்ளுங்கள். இதில் வினிகர் சேர்த்து தண்ணீர் தேங்கியுள்ள இடத்தில் ஊற்றவும். 15 நிமிடங்களில் இந்த பிரச்சனை சரியாகிவிடும்.
×× வீடு துடைக்கும் மாப் அல்லது துணி பழையதாக மாறிவிட்டால் அதனை கீழே போட தேவையில்லை. சிறிது சூடான நீரில் உப்பு கலந்து அதில் இந்த துணியை ஊற வைக்கவும். இரவு முழுவதும் இதனை அப்படியே வைத்து விடுங்கள். மறுநாள் காலை அது புதியது போல் தோற்றமளிக்கும். வீணாக அதனை கீழே போடாமல், இதுபோல் புதுப்பித்து மீண்டும் பயன்படுத்தி பயன்பெறுங்கள்.
Comments
Post a Comment