8 வடிவில் நடப்பதில் இவ்வளவு பலன்களா? 21 நாள் மட்டும் நடந்து பாருங்க... வித்யாசத்தை உணருங்க..!
பைசா செலவில்லாமல் நம் உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள நடைபயிற்சி மிக சிறந்த ஒன்றாகும். ஆரோக்கியத்துக்கு, செலவு இல்லாமல் நடையே சிறதது. நீண்ட தூரத்துக்கு, அல்லது மைதானத்தில் நடக்க முடியாதவர்கள் 8 வடிவில் நடக்கலாம்.
இதை வெறும் 21 நாள்கள் தொடர்ந்தாலே நல்ல பலன்களை உணரலாம். இதை தினமும் காலை, மாலையில் ஒருமணிநேரம் செய்துவந்தால் உள்ளங்கை விரல்கள் இரத்த ஓட்டத்தால் சிவதிருப்பதையும் பார்க்கலாம். இதனால் முதுமை தள்ளிப்போடப்படும். நிறையப்பேருக்கு மார்பு சளி தொந்தரவு இருக்கும். 8 வடிவில் நடப்பதால் பிராண வாயு உள்ளே போய் சளித்தொல்லையை நீக்கும்.
தலைவலி, மலச்சிக்கலையும் எட்டுவடிவில் நடப்பது தீர்க்கும். சிலர் கண்பார்வைத்திறன் கொஞ்சம் குறைந்ததுமே கண்ணாடி போட்டிருப்பார்கல். இதை துவக்க நிலை கண் குறைபாடு எனலாம். அதுவும் இதில் போய்விடும். இதனால் ஹெர்னியா எனப்படும் குடலிறக்க நோயும் போகும். இதேபோல் மூட்டுவலி, பாதவெடிப்பு ஆகியவையும் போய்விடும்.
ஒபிசிட்டி, உடல் பருமன், இரத்த அழுத்தம், இதயநோய், ஆஸ்துமா, கண்நோய், சளித்தொல்லை, முதுகு மற்றும் மூட்டுவலி ஆகியவையும் போய்விடும். இதை குறைந்தது 21 நாள்கள் செய்தாலே இந்த மாற்றத்தை உணரலாம். இதுவரை எட்டுவடிவ நடைபயிற்சி செய்யாதவர்கள் இதை முயற்சித்துப் பாருங்களேன்..
Comments
Post a Comment