அதிர வைக்கும் நயனின் சம்பளம் ?


தமிழ்த் திரையுலகத்தில் மட்டுமல்லாது தென்னிந்தியத் திரையுலகத்திலும் அதிக சம்பளம் வாங்கும் நடிகை எனப் பெயர் எடுத்தவர் நயன்தாரா. அவருடைய சம்பளம் ஒரு படத்திற்கு மூன்று முதல் மூன்றரை கோடி என்கிறது திரையுலக வட்டாரங்கள்.

மலையாளத்தில் அவ்வளவு சம்பளம் கொடுத்து எந்த ஹீரோயினையும் நடிக்க வைக்க மாட்டார்கள். எனவே, நயன்தரா தமிழில் தான் அதிகப் படங்களில் நடிக்கிறார். ஏனோ, தெலுங்கிலும் நடிக்க அவர் அதிக ஆர்வம் காட்டுவதில்லை. அங்கு அவருக்கு அதிக சம்பளம் தரவும் தயாராக இருக்கிறார்கள். இருந்தாலும் சீனியர் ஹீரோக்களுடன் மீண்டும் ஜோடி சேருவதை நயன்தாரா விரும்பவில்லை என்கிறார்கள்.

தெலுங்கில் வெளிவந்த 'பீஷ்மா' வெற்றிப் படத்தைத் தொடர்ந்து, ஹிந்தியில் வெளிவந்த 'அந்தாதுன்' படத்தின் ரீமேக்கில் நடிக்க உள்ளார் நிதின். அப்படத்தில் தபு கதாபாத்திரத்தில் நடிக்க நயன்தாராவிடம் பேசியுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. அப்படத்திற்காக நயன்தாராவிடம் பேசிய போது நான்கு கோடிக்கும் மேல் சம்பளம் கேட்டாராம். நிதின் குடும்பத்தினரே இப்படத்தைத் தயாரிக்க உள்ளதால் அவ்வளவு சம்பளம் தரத் தயங்குவதாகக் தகவல்.

Comments

Popular posts from this blog

பெண்ணுறுப்பு பகுதியில் தோல் உரிவது ஏன் தெரியுமா...?

சிறந்த உடலுறவுக்கான குறிப்புகள்!

ஆடை இல்லாமல் தூங்குவதால் ஏற்படும் மாற்றங்கள்!