முகத்தில் இருக்கும் பல பிரச்சனைகளை தீர்க்கும் பேஸ் பேக்குகள்....
- Get link
- X
- Other Apps
By
Tamil Infos
-
முகத்தில் உள்ள பல பிரச்சனைகளை போக்க இந்த பேஸ் பேக்குகள் பயன்படுகின்றன. இப்போது வீட்டிலேயே கிடைக்கும் பொருட்களை கொண்டு பேசியல் செய்து கொள்வது எப்படி என்று பார்க்கலாம்.
முகத்திற்கு தகுந்த பராமரிப்புகளை கொடுத்து வர வேண்டியது மிக மிக அவசியமான ஒன்றாகும். முகத்தில் உள்ள பல பிரச்சனைகளை போக்க இந்த பேஸ் பேக்குகள் பயன்படுகின்றன. நாம் இன்றைக்கு இருக்கும் மாசடைந்த சூழ்நிலையில், முகம் சீக்கிரமாக கருமையடைய ஆரம்பித்துவிடுகிறது. முகத்தில் இறந்த செல்கள் எளிதாக உருவாகிவிடுகின்றது. இதனால் முகம் அதன் இயற்கை அழகினை இழந்து கருமையாக தோற்றமளிக்கிறது. எனவே மாதம் ஒருமுறை கண்டிப்பாக பேசியல் செய்ய வேண்டியது அவசியமாகும்.
1.அதிமதுரம்
அதிமதுரம் உங்களது சருமத்திற்கு ஆரோக்கியத்தை தரக்கூடியது. சூரியனால் உண்டான கதிரால் உண்டான கருமையை போக்க உதவுகிறது. அதிமதுரம், முல்தானிமெட்டி மற்றும் ரோஸ் வாட்டரை ஒன்றாக கலந்து முகத்திற்கு பேஸ் பேக் போட்டால் முகம் பளிச்சென்று இருக்கும்.
2.உருளைக்கிழங்கு
# உருளைக்கிழங்கை நன்றாக வேக வைத்து, அதனை அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள் இதனுடன் சிறிதளவு கடலைமாவு மற்றும் தேன் கலந்து முகத்திற்கு மாஸ்க் போட்டு பாருங்கள். முகம் பேசியல் செய்தது போன்ற ஒரு அழகை பெறும்.
# உருளைக்கிழங்கை நன்றாக துருவிக் கொள்ளுங்கள். பின் இந்த துறுவலை பிழிந்து சாறு எடுத்துக் கொள்ளுங்கள். இதனுடன் பால் கலந்து முகத்திற்கு பேக் போடுங்கள். இதனால் முகம் பளிச்சிடும் வெண்மை பெறுவது உறுதி.
# உருளைக்கிழங்கை நன்றாக துருவிக் கொள்ளுங்கள். பின் இந்த துறுவலை பிழிந்து சாறு எடுத்துக் கொள்ளுங்கள். இதனுடன் பால் கலந்து முகத்திற்கு பேக் போடுங்கள். இதனால் முகம் பளிச்சிடும் வெண்மை பெறுவது உறுதி.
3.கோதுமை
பாலில் சிறிதளவு கோதுமை மாவை கலந்து முகத்திற்கு நன்றாக மசாஜ் செய்ய வேண்டும். இந்த மசாஜ்ஜை 10 நிமிடங்கள் வரை செய்ய வேண்டியது அவசியம். அழுத்தமாக மசாஜ் செய்ய கூடாது. இதனால் உங்களது சருமத்தில் உள்ள இறந்த செல்கள் நீங்கும்.
4.பீட் ஜூஸ்
# சிறிதளவு தயிரை எடுத்துக் கொள்ளுங்கள், அதனுடன் ஒரு ஸ்பூன் அளவுக்கு பீட்ரூட் ஜூஸை கலக்க வேண்டும். இந்த க்ரீமை நன்றாக முகத்திற்கு 10 நிமிடங்கள் வரை மசாஜ் செய்ய வேண்டும். இதனால் உங்களது முகம் மிருதுவாகி நல்ல நிறத்தை பெறும்.
# கடலை மாவு, கோதுமை மாவு, பீட்ரூட் ஜூஸ், சிறிதளவு மஞ்சள் ஆகியவற்றை ஒன்றாக கலந்து முகத்திற்கு பேஸ் பேக் போட வேண்டும். பின்னர் இதனை 20 நிமிடங்கள் உலர வைத்து கழுவி விட வேண்டும். இதனால் உங்களுக்கு பேஸியல் செய்தது போன்ற தோன்றம் கிடைக்கும்.

Comments
Post a Comment