முக்கியமான 15 தளர்வுகள்..! அதிகாரப்பூர்வமாக வெளியிட்ட தமிழக அரசு..!

ஊரடங்கு தளர்வுகளை நேற்று மத்திய அரசு வெளியிட்ட நிலையில், தற்போது தமிழக அரசு 30-ஆம் தேதி வரை அமலில் இருக்கக்கூடிய ஊரடங்கு தளர்வுகளை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ள முக்கியமான 15 தளர்வுகளை தற்போது பார்ப்போம்..

1. மாவட்டங்களுக்கு இடையே உள்ள இ-பாஸ் நடைமுறை ரத்து. ஆனால், வெளிநாடு மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வருபவர்களுக்கு மட்டும் இ-பாஸ் கட்டாயம்.

2. மாவட்டத்திற்குள்ளான பொது மற்றும் தனியார் பேருந்துகள் இயங்க அனுமதி.

3. அனைத்து வழிபாட்டு தளங்களும் இயங்க நிபந்தனைகளுடன் கூடிய அனுமதி. இரவு 8 மணி வரை வழிபாட்டு தளங்களில் பக்தர்கள் தரிசனம் செய்யலாம்.

4. காலை 6 மணி முதல் மாலை 8 மணி வரை அனைத்து விதமான கடைகளையும் இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

5. சென்னையில் மெட்ரோ ரயில்கள் இயங்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.

6. வணிக வளாகங்கள், அனைத்து விதமான ஷோரூம்கள், பெரிய கடைகள் 100 சதவீத பணியாளர்களுடன் இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

7. தமிழ்நாடு முழுவதும் தேநீர் கடைகளை காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

8. உணவகங்களில் காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை அமர்ந்து சாப்பிட அனுமதி. 9 மணி வரை பார்சல் வாங்கிக்கொள்ளலாம்.

9. தங்கும் வசதியுடன் கூடிய ஹோட்டல்கள், ரிசர்ட்டுகள், கேளிக்கை விடுதிகள் உள்ளிட்டவை இயங்கவும் அனுமதி.

10. 1-ஆம் தேதி முதல், 100 சதவீத ஊழியர்களுடன் அரசு அலுவலகங்கள் இயங்கும்.

11. மறு உத்தரவு வரும் வரை, பள்ளிகள், கல்லூரிகள் ஆகிய கல்வி நிலையங்கள் மூடப்பட்டிருக்கும்.

12. தமிழ்நாட்டில் தியேட்டர்கள், கேளிக்கை பூங்காக்கள், நீச்சல் குளங்களுக்கான தடை தொடரும்.

13. சினிமா படப்பிடிப்பிற்கு நிபந்தனைகளுடன் தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. 75 நபர்களுக்கு மிகாமல் படப்பிடிப்பு நடத்த வேண்டும்.

14. ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டு வந்த நிலையில், அது தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளது.

15. கொடைக்கானல் மற்றும் ஊட்டி போன்ற மலைப்பிரதேசங்களுக்கு இ-பாஸ் பெற்று பயணம் செய்யலாம்.

Comments

Popular posts from this blog

இரவு நல்ல தூக்கம் வேண்டுமா? சாப்பிட வேண்டிய மற்றும் தவிர்க்க வேண்டிய உணவுகளை அறிந்துகொள்ளுங்கள்..!

பெண்ணுறுப்பு பகுதியில் தோல் உரிவது ஏன் தெரியுமா...?

சிறந்த உடலுறவுக்கான குறிப்புகள்!