எலுமிச்சை, உப்பு, மிளகு மூன்றும் சேர்ந்தால் நம் உடலில் என்ன மாயங்கள் நடக்கும் தெரியுமா? தெரிஞ்சிக்கங்க!
எலுமிச்சை, மிளகு மற்றும் உப்பின் கலவை
எலுமிச்சை சாறு பாரம்பரிய மருத்துவத்தில் பெருமளவில் பயன்படுத்தப்படுகிறது. இது வியர்வையாக்கி மற்றும் சிறுநீர் பிரிப்பு மருந்து , லோஷன், டானிக் என்று பல்வேறு வடிவங்களில் பயன்படுத்தப்படுகிறது. தண்ணீர் மற்றும் ஆக்சிஜன் போல் உப்பு உடலின் தவிர்க்கமுடியாத ஒன்று. உடல் வழக்கமாக செயல்பட உப்பு தேவை. இருப்பினும் அதிகமான உப்பு இதயத்திற்கு அழுத்தத்தை உண்டாக்கும்.
வழக்கமான டேபிள் உப்பிற்கு மாற்றாக இமாலயன் உப்பு பயன்படுத்துவது நல்லது. கருமிளகு நீண்ட காலமாக பாரம்பரிய மருத்துவத்தில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆகவே இந்த இரண்டு பொருட்களின் கலவை பல அற்புதங்களை செய்வதில் எந்த ஒரு ஆச்சர்யமும் இல்லை.
தொண்டை வறட்சி
ஒரு டேபிள் ஸ்பூன் பிரெஷ் எலுமிச்சை சாறு , அரை டீஸ்பூன் கருமிளகு தூள் , ஒரு டீஸ்பூன் உப்பு ஆகியவற்றை ஒரு க்ளாஸ் வெதுவெதுப்பான நீரில் சேர்த்து கலக்கவும். இந்த நீரை வாயில் சிறிது சிறிதாக ஊற்றி தொண்டையில் படும்படி நன்றாக கொப்பளிக்கவும். தொண்டை வலி, தொண்டை வறட்சி ஆகியவற்றுக்கு உடனடி தீர்வு கிடைக்கும்.
பித்த கற்களை அகற்றுகிறது :
உங்கள் பித்தப்பையில் இருக்கும் செரிமான சாறுகளின் கழிவுகள் பித்தைப்பை கற்கள் என்று அறியப்படுகின்றன. இவை வலி மிகுந்ததாக உள்ளன. மேலும் செரிமானத்தில் இடையூறு உண்டாக்குகின்றன. மூன்று பங்கு ஆலிவ் எண்ணெய், ஒரு பங்கு எலுமிச்சை சாறு, ஒரு பங்கு மிளகு ஆகியவற்றை ஒரு கலவையாக தயாரிக்கவும். இந்த கலவையை பருகுவதால் பித்தப்பை கற்களை முற்றிலும் அழித்துவிடலாம்.
வாய்ப்புண்
உங்கள் வாயில் புண் இருப்பதால் உங்கள் உடலில் ஒரு வித அசௌகரியம் உண்டாகிறது. இதனைப் போக்க , ஒரு க்ளாஸ் வெதுவெதுப்பான நீரில் ஒரு டேபிள்ஸ்பூன் இமாலயன் உப்பு சேர்த்து கலக்கவும். இந்த நீர் கொண்டு உங்கள் வாயை ஒரு நாளில் மூன்று முறை கொப்பளிக்கவும். இதனால் வாயில் உண்டான புண் விரைவில் மறையும்.
எடை இழப்பு
விரைவில் எடை இழக்க விரும்புகிறீர்களா? இந்த நீரை பருகுவதால் உங்கள் உடல் எடை மிக விரைவில் குறையும். ¼ டீஸ்பூன் கருமிளகு தூள் , 2 டேபிள்ஸ்பூன் எலுமிச்சை சாறு , ஒரு டேபிள்ஸ்பூன் தேன் ஆகியவற்றை ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான நீரில் சேர்த்து கலக்கவும். காலையில் வெறும் வயிற்றில் இந்த நீரைப் பருகவும். இதனால் விரைவாக உங்கள் உடல் எடை குறையும்.
குமட்டல்
குமட்டல் , வாந்தி போன்றவற்றின் காரணமாக வயிற்றில் ஒருவித வலி ஏற்படலாம். ஆகவே வயிற்றுக்கு இதமளிக்க மிளகு பயன்படுத்தலாம். குமட்டல் போன்றவற்றை கட்டுப்படுத்த எலுமிச்சை உதவும். ஆகவே ஒரு டேபிள்ஸ்பூன் எலுமிச்சை சாறு , ஒரு டீஸ்பூன் மிளகு தூள் ஆகியவற்றை ஒரு க்ளாஸ் வெதுவெதுப்பான நீரில் சேர்த்து கலக்கவும். இந்த நீரை மெதுமெதுவாக வாயில் வைத்து உறிஞ்சி குடிக்கவும்.
காய்ச்சல் மற்றும் சளி
சளி மற்றும் காய்ச்சல் போன்ற பாதிப்புகளுக்கு எலுமிச்சை சிறந்த தீர்வைத் தரும். பாதி எலுமிச்சை பழத்தின் சாற்றை பிழிந்து எடுத்துக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் நீர் ஊற்றி, எலுமிச்சை சாற்றை சேர்த்து, எலுமிச்சை தோலையும் சேர்த்து அந்த நீரில் கொதிக்க விடவும். கொதித்த பின்னர் 10 நிமிடம் கழித்து அந்த தோலை நீரிலிருந்து எடுத்துவிடவும். அந்த நீரை தினமும் பருகுவதால் விரைவில் உடல் குணமடையும். காய்ச்சல் மற்றும் சளியின் தீவிரம் குறையும்.
Comments
Post a Comment