அரசவை விகடகவி ஆகும் தெனாலிராமன்
தெனாலிராமன் கதைகள் - பகுதி 2
அரசவை விகடகவி ஆகும் தெனாலிராமன்
ஒருநாள் கிருஷ்ணதேவராயரின் அரண்மனை அமர்களப்பட்டுக் கொண்டிருந்தது. அறிஞர் பெருமக்களும் மற்றவர்களும் மண்டபத்தில் கூடியிருந்தனர். தெனாலிராமனும் ஓர் ஆசனத்தில் அமர்ந்தான்.
மன்னர் கிருஷ்ணதேவராயர் வந்தவுடன் சபை கூடியது. வேறூரிலிருந்து வந்த தத்துவஞானியைப் பார்த்து விழாவைத் தொடங்கி வைத்து, விவாத மன்றத்தை ஆரம்பிக்கச் சொன்னர்.
தத்துவஞானி இறுதியில் மாய தத்துவம் பற்றி பேசினார். அதாவது நாம் கண்ணால் காண்பதும் மாயை, உண்பதும் மாயை என்று சொன்னார். தெனாலிராமன் எழுந்து நின்று. ஐயா நாம் உண்பதற்கும், உண்பதாக நினைப்பதற்கும் வித்தியாசமே இல்லையா? என்றார்.
வித்தியாசம் இல்லை என்றார். அதை சோதிக்க தெனாலிராமன் அரசரிடம் விருந்துக்கு ஏற்பாடு செய்யச் சொன்னார். விருந்து ஏற்பாடு ஆயிற்று. அனைவரும் பந்தியில் அமர்ந்து சாப்பிடத் தொடங்கினார். தத்துவஞானிக்கு உணவு பரிமாறியும் சாப்பிடக்கூடாது எனக் கட்டளை இட்டனர்.
தத்துவஞானி தன் தவறை உணர்ந்தார். இதைப்பார்த்த அரசர் தெனாலிராமனின் திறமையைப் பாராட்டி, பரிசளித்து, அன்றிலிருந்து அவரை அரசவை விகடகவி ஆக்கினார்.
இதுபோன்ற மேலும் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி படிக்கும் கதைகளுடன் இன்னும் பல சிறப்பம்சங்களை கொண்ட நமது சேனலை subscribe செய்து கொள்ளுங்கள்
நன்றி...
Comments
Post a Comment