ஆழ்வார்க்கடியான் உற்று நோக்கியதை.. வந்தியத்தேவன் பார்த்தானா?

ஆழ்வார்க்கடியான் உற்று நோக்கியதை.. வந்தியத்தேவன் பார்த்தானா?

பார்க்கலாம் வாங்க..


எத்தனை நேரம் பார்த்தாலும் தலை அங்கேயே இருந்தது. அது வெறும் தலை மட்டுமல்ல, தலைக்குப் பின்னாலே உடம்பு இருக்கிறது என்பதையும் எளிதில் ஊகிக்கக் கூடியதாயிருந்தது. ஆழ்வார்க்கடியான் அங்கு என்ன செய்தான்?

ஏனெனில், ஆழ்வார்க்கடியானுடைய கைகள் அந்த மதில் ஓரத்தின் விளிம்பைப் பிடித்துக் கொண்டிருந்தன. அதோடு, அவன் வெகு கவனமாக மதிலுக்குக் கீழே உட்புறத்தை உற்று நோக்கிக் கொண்டிருந்தான்.

வந்தியத்தேவன், ஆழ்வார்க்கடியான் அவ்வளவு கவனமாக அங்கே எதைப் பார்க்கிறான்... இதில் ஏதோ வஞ்சகச் சூழ்ச்சி இருக்க வேண்டும்.

ஆழ்வார்க்கடியான் நல்ல நோக்கத்துடன் அங்கு வந்திருக்க முடியாது. ஏதோ தீய நோக்கத்துடன் தீய செயல் புரிவதற்கே வந்திருக்கிறான்.

அவன் அவ்விதம் தீயச்செயல் புரியாமல் தடுப்பது கந்தமாறனின் உயிர் நண்பனாகிய என் கடமையல்லவா?

தனக்கு அன்புடன் ஒரு வேளை சோறு போட்டவர்களின் வீட்டுக்கு நேரக்கூடிய தீங்கைத் தடுக்காமல் நான் சும்மா படுத்துக் கொண்டிருப்பதா? என்று வந்தியத்தேவன் துள்ளி எழுந்தான்.

பக்கத்தில் கழற்றி வைத்திருந்த உறையுடன் சேர்ந்த கத்தியை எடுத்து இடுப்பில் செருகிக் கொண்டான். ஆழ்வார்க்கடியானுடைய தலை காணப்பட்ட திசையை நோக்கி நடந்தான்.


அங்கிருந்து புறப்பட்டு மதில் சுவரை நோக்கி நடந்தபோது மேல்மாடத்தை அலங்கரித்த மண்டபச் சிகரங்கள், மேடைகள், தூண்கள் ஆகியவற்றைக் கடந்தும், தாண்டியும், சுற்றி வளைத்தும் நடக்க வேண்டியதா இருந்தது.


சற்று தூரம் அவ்விதம் நடந்த பிறகு, திடீரென்று எங்கிருந்தோ பேச்சுக்குரல் வந்ததைக் கேட்டு வந்தியத்தேவன் தயங்கி நின்றான்.

அங்கிருந்த ஒரு தூணைப் பிடித்துக்கொண்டு, தூணின் மறைவில் நின்றபடி எட்டிப் பார்த்தான். கீழே குறுகலான முற்றம் ஒன்றில், மூன்று பக்கமும் நெடுஞ்சுவர்கள் சூழ்ந்திருந்த இடத்தில் பத்துப் பன்னிரண்டு பேர் உட்கார்ந்திருந்தார்கள்.

பாதி மதியின் வெளிச்சத்தை நெடுஞ்சுவர்கள் மறைத்தன. ஆனால் ஒரு சுவரில் பதித்திருந்த இரும்பு அகல் விளக்கில் எரிந்த தீபம் கொஞ்சம் வெளிச்சம் தந்தது.

அவர்கள் யார்?.. என்பதை பற்றி அறிய தொடர்ந்து இணைந்திருங்கள்.. 

Comments

Popular posts from this blog

பெண்ணுறுப்பு பகுதியில் தோல் உரிவது ஏன் தெரியுமா...?

சிறந்த உடலுறவுக்கான குறிப்புகள்!

ஆடை இல்லாமல் தூங்குவதால் ஏற்படும் மாற்றங்கள்!