பஞ்சமுக கணபதி..

இன்றைய தரிசனம்.. பஞ்சமுக கணபதி.. ஆடி மாதம் முழுவதும் ஊஞ்சல் உற்சவம்.. அக்னி திருமணம்..!!


அருள்மிகு கோனியம்மன் திருக்கோயில்...!!


🙏 தினம் ஒரு திருத்தலம் பகுதியில் இன்று அருள்மிகு கோனியம்மன் திருக்கோயிலை பற்றி பார்க்கலாம் வாங்க...

இந்த கோயில் எங்கு உள்ளது?

🙏 அருள்மிகு கோனியம்மன் திருக்கோயில் கோயம்புத்தூரின் மையப்பகுதியில் அமைந்துள்ளது.

இந்த கோயிலுக்கு எப்படி செல்வது?

🙏 இத்திருக்கோயில் கோவை மத்திய பேருந்து நிலையத்திலிருந்தும், கோவை ரயில் நிலையத்திலிருந்தும் நடந்து செல்லும் தொலைவில் அமைந்துள்ளது.

இந்த கோயிலின் சிறப்புகள் என்ன?


💫 அம்பிகை தனது எட்டு கரங்களில் சூலம், உடுக்கை, வாள், சங்கம், கபாலம், தீ, சக்கரம், மணி, இடது காதில் தோடு, வலது காதில் குண்டலம் அணிந்து உக்கிரமான பார்வையுடன் காட்சி தருகிறாள்.

💫 சிவனைப் போல, இடது காதில் தோடும், வலது காதில் குண்டலமும் அணிந்திருப்பது அபூர்வமான அமைப்பு. சிவமும், சக்தியும் வேறில்லை என்பதை இந்த வடிவம் உணர்த்துகிறது.

💫 தம்பதி சமேதராக நவகிரகங்கள் அருள்பாலிப்பது இத்தலத்தின் சிறப்பு. கோவை நகரில் இங்கு மட்டுமே தேர்த்திருவிழா நடத்தப்படுகிறது.

💫 வடக்கு வாசலில் சுமார் 1 ஏக்கர் பரப்பளவில் உள்ள தளத்தில் ராஜகோபுரம் அமைந்துள்ளது.

வேறென்ன சிறப்பு?

💫 அரச மரத்தின் கீழ் பஞ்சமுக கணபதி பத்து கைகளுடன் காட்சி தருகிறார்.

💫 அம்மனுக்கு வலப்புறத்தில் தம்பதி சமேதராக நவகிரகங்கள், பின் பகுதியில் ஆதி கோனியம்மன், பஞ்சமுக விநாயகர், வள்ளி, தெய்வானை உடன் சுப்பிரமணியர் ஆகியோர் அருள்பாலிக்கின்றனர்.

💫 இத்தலத்தில் வேப்பம், வில்வம், நாக லிங்கம், அரசமரம் ஆகிய தேவ மரங்கள் உள்ளன. இங்கு வேறு அம்மன் தலங்களில் இல்லாத சிறப்பாக ஆடியில் 30 நாளும் ஊஞ்சல் உற்சவம் நடக்கிறது.

💫 மாசித்திருவிழாவின் போது சிவன், அம்பிகையை திருமணம் செய்து கொள்வார். அப்போது, கோயில் எதிரே யாககுண்டம் வளர்த்து, அக்னியை சிவனாகப் பாவித்து பூஜை செய்வர். பூஜையில் பயன்பட்ட தீர்த்த கலசத்தின் மேலே வைத்திருந்த மாங்கல்யத்தை அம்பிகைக்கு அணிவிப்பர். அக்னி வடிவ சிவன், அம்பிகையை திருமணம் செய்து கொள்வதாக ஐதீகம். இதை அக்னி திருமணம் என்பர்.

என்னென்ன திருவிழாக்கள் கொண்டாடப்படுகிறது?

💫 மாசியில் 14 நாள் திருவிழா கொண்டாடப்படுகின்றது.

💫 அமாவாசை, பௌர்ணமி நாட்களில் விசேஷ பூஜை உண்டு.

💫 தமிழ் மாதப்பிறப்பு, ஆடி வெள்ளி, தை வெள்ளி, நவராத்திரி, திருக்கார்த்திகை, தனுர்மாத பூஜை, தைப்பொங்கல், தீபாவளி போன்ற நாட்களிலும் சிறப்பு பூஜைகள் செய்யப்படுகின்றது.

எதற்கெல்லாம் பிரார்த்தனைகள் செய்யப்படுகிறது?

💫 திருமணத்தடை நீங்கவும், குழந்தைப்பேறு கிட்டவும், தொழில் விருத்தி அடையவும், நோய்கள் நீங்கவும் இத்தல இறைவனை வேண்டிக் கொள்கின்றனர்.

💫 சனி, ராகு கேது மற்றும் குரு பெயர்ச்சியால் பரிகாரம் செய்ய வேண்டியவர்கள் தோஷ நிவர்த்திக்காகவும் இங்கு வேண்டிக்கொள்கின்றனர்.

இத்தலத்தில் என்னென்ன நேர்த்திக்கடன்கள் செலுத்தப்படுகிறது?

💫 சுவாமிக்கு வஸ்திரங்கள் சாற்றி, சிறப்பு அபிஷேகம், அன்னதானம் செய்யலாம்.

💫 துர்க்கைக்கு பொட்டுத்தாலி செலுத்தி எலுமிச்சை தீபம் ஏற்றலாம்.

💫 மாவிளக்கு, பொங்கல் நேர்ச்சை போன்ற நேர்த்திக்கடன்களும் செய்கின்றனர்.

Comments

Popular posts from this blog

பெண்ணுறுப்பு பகுதியில் தோல் உரிவது ஏன் தெரியுமா...?

சிறந்த உடலுறவுக்கான குறிப்புகள்!

ஆடை இல்லாமல் தூங்குவதால் ஏற்படும் மாற்றங்கள்!