முக்கியமான 15 தளர்வுகள்..! அதிகாரப்பூர்வமாக வெளியிட்ட தமிழக அரசு..!
ஊரடங்கு தளர்வுகளை நேற்று மத்திய அரசு வெளியிட்ட நிலையில், தற்போது தமிழக அரசு 30-ஆம் தேதி வரை அமலில் இருக்கக்கூடிய ஊரடங்கு தளர்வுகளை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ள முக்கியமான 15 தளர்வுகளை தற்போது பார்ப்போம்.. 1. மாவட்டங்களுக்கு இடையே உள்ள இ-பாஸ் நடைமுறை ரத்து. ஆனால், வெளிநாடு மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வருபவர்களுக்கு மட்டும் இ-பாஸ் கட்டாயம். 2. மாவட்டத்திற்குள்ளான பொது மற்றும் தனியார் பேருந்துகள் இயங்க அனுமதி. 3. அனைத்து வழிபாட்டு தளங்களும் இயங்க நிபந்தனைகளுடன் கூடிய அனுமதி. இரவு 8 மணி வரை வழிபாட்டு தளங்களில் பக்தர்கள் தரிசனம் செய்யலாம். 4. காலை 6 மணி முதல் மாலை 8 மணி வரை அனைத்து விதமான கடைகளையும் இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 5. சென்னையில் மெட்ரோ ரயில்கள் இயங்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. 6. வணிக வளாகங்கள், அனைத்து விதமான ஷோரூம்கள், பெரிய கடைகள் 100 சதவீத பணியாளர்களுடன் இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 7. தமிழ்நாடு முழுவதும் தேநீர் கடைகளை காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 8. உணவகங்களில் காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை அமர்ந்து சாப்பிட அன...