10 நிமிஷத்தில் டேஸ்டியான கத்தரிக்காய் சட்னி..! செய்து அசத்துங்கள்..
இட்லி, தோசை, போன்ற டிபன் வகைகளுக்கு தொட்டு கொள்வதற்கு... பலரும், தேங்காய் சட்னி, தக்காளி சட்னி, போன்றவை தான் அடிக்கடி செய்வது வழக்கம். இதையே கொஞ்சம் மாற்றி... கத்தரிக்காய் சட்னி செய்து சாப்பிட்டு பாருங்கள் அசந்தே போய் விடுவீர்கள். மிக எளிமையான முறையில் கத்தரிக்காய் சட்னி செய்யும் முறையை பார்க்கலாம் வாங்க. தேவையான பொருட்கள்: கத்தரிக்காய் - 2 கடலை பருப்பு - இரண்டு ஸ்பூன் பச்சை மிளகாய் - 3 அல்லது நான்கு (காரத்திற்கு ஏற்ப) வெங்காயம் - 2 தக்காளி - 2 தேங்காய் - 2 துண்டுகள் கருவேப்பில்லை கொத்தமல்லி (தேவை என்றால் சேர்ந்து கொள்ளுங்கள்) செய்முறை : காடாயில் சிறிதளவு என்னை ஊற்றி, கடலை பருப்பு சிவந்து வந்ததும் அதில், நறுக்கப்பட்ட வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், கத்தரிக்காய் போன்றவற்றை போட்டு வதக்கி கொண்டு, கத்தரிக்காய் வேக வேண்டும் என்பதால் ஒரு பாத்திரத்தை வைத்து மூடி விடுங்கள். 3 நிமிடம் சென்று பார்த்தல், கத்தரிக்காய் நன்கு வெந்துவிடும். பின்னர் தேவையான அளவு உப்பு மட்டும் சேர்த்து கொண்டு, வதக்கிய கலவை ஆறியதும், அதனை மிக்சியில் போட்டு அரையுங்கள். அரைத்த