அதிகப்படியான பாலியல் ஆசை ஆரோக்கியமா? ஆபத்தா? உண்மை என்ன?


இதில் அதிக நாட்டமும் ஒரு பிரச்சினை தான். கட்டுப்பாடற்ற முறையில் உடலுறவு கொள்ள ஆசை ஏற்படுவதை தான் ஹைபர்செக்ஸுவலிட்டி என்று அழைக்கிறார்கள். இந்த பிரச்சினை ஒருவரின் வேலை, திருமண உறவு மற்றும் வாழ்க்கையின் பிற அம்சங்கள் என பலவற்றையும் பாதிக்கிறது.


இதனால் பாதிக்கப்பட்ட ஒருவர் சுயஇன்பம், போன் செக்ஸ், பல பெண்களை நாடுவது, ஆபாச படம் பார்ப்பது இன்னும் மோசமாக விபச்சாரத்தை நாடி செல்லுவது என மோசமான காரியங்களை செய்கிறார்கள்.

ஒருவருக்கு தொடர்ச்சியான பாலியல் கற்பனைகள் தோன்றுவது, பாலியல் உறவில் ஈடுபட தோன்றும் ஒரு கட்டுப்பாடற்ற உணர்வு, உடலுறவுக்கு பின் பதற்றத்தில் இருந்து விடுபட்ட உணர்வு ஆனால் ஒரு வித குற்ற உணர்ச்சி போன்றவைகள் இருந்தால் அவர் இந்த பாலியல் ஆசைகள் பிரச்சனையில் அணி க்கியிருக்க வாய்ப்புகள் அதிகம். அவருக்கு கண்டிப்பாக உதவி தேவை.

இந்த பிரச்சனைக்கான சரியான காரணங்கள் இன்னும் அறியப்படவில்லை என்றாலும், அதிக அளவு ஹார்மோன்கள், மூளை பாதையில் சிலமாற்றங்கள் போன்றவை இதற்கு காரணமாக இருக்கலாம் என்று மருத்துவர்கள் நம்புகிறார்கள். இந்த பாலியல் பல தையால் பல்வேறு சிக்கல்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளன. அவற்றைப் பற்றி தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.

1. சுயமரியாதையை இழந்த உணர்வு மற்றும் குற்ற உணர்ச்சி ஆகியவை ஹைபர்செக்ஸுவலிட்டி உள்ளவர்களுக்கு பொதுவாகவே இருக்கும்.

2. பாலியல் உறவில் ஈடுபடுவதற்கு ஒரு துணை கிடைக்கவில்லை என்றால், இந்த நபர்கள் மனச்சோர்வு அடைந்து சில சமயங்களில் தற்கொலைக்கு கூட முயற்சிக்கிறார்கள்.

3.ஹைபர்செக்ஸுவலிட்டி பிரச்சனையால் பாதிக்கப்பட்டவர்கள் தங்களது ஆசைகளை தீர்க்க வாழ்க்கை துணையை ஏமாற்றுகிறார்கள்.

4.இந்த அதிக ஆசைகள் மற்றும் பாலியல் கற்பனைகளிலிருந்து தப்பிக்க சிலர் போதை மருந்துகள் அல்லது குடிப்பழக்கத்தைத் நாடி செல்கிறார்கள். இந்த ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை அவர்களுக்கு பல உடல்நிலை ஆபத்தை ஏற்படுத்தும்.

Comments

Popular posts from this blog

பெண்ணுறுப்பு பகுதியில் தோல் உரிவது ஏன் தெரியுமா...?

சிறந்த உடலுறவுக்கான குறிப்புகள்!

ஆடை இல்லாமல் தூங்குவதால் ஏற்படும் மாற்றங்கள்!