க.பெ. ரணசிங்கம் திரை விமர்சனம்...
கொரொனா அச்சத்தால் திரையரங்குகள் இதுவரை தமிழ்நாட்டில் திறக்கவில்லை.
அதன் காரணமாகவே பல பெரிய படங்களே OTT தளத்தில் வெளிவருகிறது. அதில் தற்போது விருமாண்டி என்பவரின் இயக்கத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் விஜய் சேதுபதி நடித்துள்ள க.பெ. ரணசிங்கம் படமும் OTTயில் வெளிவந்துள்ளது.
ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் விஜய் சேதுபதி ஆகியோர் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். நான்காவது முறையாக ரம்மி, தர்மதுரை, மற்றும் பண்ணையாரும் பத்மினியும் போன்ற படங்களுக்கு பிறகு அவர்கள் இப்படத்தில் இனைந்து நடித்துள்ளார்கள். விருமாண்டி இயக்கத்தில், கிப்ரான் இசையில், க.பெ. ரணசிங்கம் படத்தை கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் தயாரித்துள்ளது.
பெரும் எதிர்பார்ப்பில் OTTயில் வெளியான க.பெ. ரணசிங்கம் ரசிகர்களை திருப்திபடுத்தியதா? வாருங்கள் பார்ப்போம்
கதைக்களம் :
தமிழ்நாட்டில் உள்ள ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள தனது கிராமத்திற்கு எந்த ஒரு பிரச்சனை என்றாலும் தானாக முன் வந்து நின்று நீதிக்கு குரல் கொடுக்கிறார் விஜய் சேதுபதி.
விறுவிறுப்பான கதைக்களமும் ஐஸ்வர்யா ராஜேஷுடன் விஜய் சேதுபதிக்கு ஏற்படும் காதலும் மிகவும் எதார்த்தமாக எந்த ஒரு கமெர்ஷியல் விஷயங்களும் சேர்க்காத ஒன்றாக இருக்கிறது. மேலும் தமிழ் நாட்டில் இருந்து துபாய்க்கு வேலைக்காக செல்லும் இளைஞர்கள் அங்கு என்னென்ன பிரச்சனைகளை சந்திக்கிறார்கள் என்பதை மையக்கருவாக கொண்டிருக்கிறது க.பெ.ரணசிங்கம்.
விஜய் சேதுபதி துபாய்க்கு சென்று பல விதமான பிரச்சனைகளை சந்திக்கிறார். துபாயில் பிரச்சனையில் மாட்டிக்கொள்ளும் தனது கணவனுக்காக போராடும் மனைவியின் கதை தான் க.பெ. ரணசிங்கம்.
படத்தை பற்றிய அலசல் :
OTTயில் வெளிவந்தாலும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதுள்ளது. மேலும் விஜய் சேதுபதி நடிப்பு படத்தின் வெற்றிக்கு மிக முக்கிய காரணம்.
தனது கணவருக்காக, பிரச்சனைகளுக்கு குரல் கொடுக்கும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷின் துணிச்சல் பாராட்டக்குறியது. அதே போல் ஒவ்வொரு அரசு அலுவலகங்களிலும் ஐஸ்வர்யா ராஜேஷ் படும் அவதி, தமிழக மக்களின் வாழ்வாதார பிரதிபலிபாக தெரிகிறது.
ஐஸ்வர்யா ராஜேஷுக்கு இப்படத்தில் உதவும் கதாபாத்திரங்களாக ஜி.வி. பவானி, ரங்கராஜ் பாண்டே, அருண்ராஜா காமராஜ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ஒரு சோலோ கதாநாயகியாக இப்படத்தை தாங்கி, வெற்றிக்கு எடுத்து சென்றுள்ளார் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்.
OTTயில் வெளிவரும் படங்களில் க.பெ. ரணசிங்கம் பெரும் வெற்றியை கண்டுள்ளது.
க்ளாப்ஸ் :
ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த வலுவான பெண் கதாபாத்திரம் படத்தின் பிளஸ் பாயிண்ட்.
ஜிப்ரானின் பாடல்கள் படத்திற்கு கூடுதல் பலம் சேர்த்துள்ளது.
இயக்குனரின் சமூக அக்கறை மற்றும் தரமான திரைக்கதை.
இ.கே. ஏகாம்பரத்தின ஒளிப்பதிவு நம்மை படத்தோடு ஒன்றிணைக்கிறது.
பல்ப்ஸ் :
படத்தின் ரன்னிங் டைம் குறைத்திருக்கலாம்.
மொத்தத்தில் இந்த ஆண்டின் மிக சிறந்த படங்களில் ஒன்றாகும் கணவர் பெயர் ரணசிங்கம்.
Comments
Post a Comment