நீங்கள் தூங்குவதற்கு முன்பு என்ன உணவுகள் சாப்பிடலாம், சாப்பிடக் கூடாது என்பதை இந்த கட்டுரையில் காண்போம் . மனிதன் ஆரோக்கியத்துடன் வாழ்வதற்கு உணவு, தண்ணீர் எவ்வளவு முக்கியமோ, அதே அளவுக்கு தூக்கமும் அவசியம். தினமும் போதிய நேரம் உறங்கினால் மட்டுமே உற்சாகமாகவும், சுறுசுறுப்பாகவும் நாள் முழுவதும் இயங்க முடியும். தூங்குவதற்கு முன்பு செல்போன், தொலைக்காட்சி போன்றவைகளை பார்ப்பதை தவிர்த்து விடுங்கள். நிம்மதியாக உறங்குவதற்கு நீங்கள் இவற்றை எல்லாம் கடைபிடித்தால் போதும். நீங்கள் சாப்பிடும் உணவும் தூக்கத்துடன் தொடர்புடையது. இரவில் தூங்குவதற்கு முன்பு என்ன சாப்பிடலாம், சாப்பிடக் கூடாது என்பதை இங்கே காண்போம். சாப்பிட வேண்டியவை: வாழைப்பழம்: உங்கள் ஆற்றலை அதிகரிக்கும் பழங்களில் ஒன்று வாழைப்பழம். மேலும் இதில் அதிக அளவிலான மெக்னீசியம் நிறைந்துள்ளது. மேலும் தூக்கத்தை ஊக்குவிக்கும் செரோடோனின் மற்றும் மெலடோனின் சத்துக்களும் இதில் உள்ளன. பாதாம் : இதில் ஆரோக்கிய கொழுப்பு சத்துக்கள் நிறைந்துள்ளன. தூங்குவதற்கு முன்பு இதனை சாப்பிடலாம். இதய செயல்பாடுக்களுக்கும் இது நல்ல பலனை தரும
Comments
Post a Comment