எலும்பும் தோலுமாய் மாறிய அஞ்சலி.. காஞ்ச எலி போல ஆயிட்டீங்க.. போட்டோவை பார்த்து உருகும் ரசிகாஸ்!


சென்னை: நடிகை அஞ்சலியின் நியூ லுக் போட்டோவை பார்த்த நெட்டிசன்கள் காஞ்ச எலி போல ஆகிவிட்டீர்களே என பங்கம் செய்துள்ளனர்.

நடிகை அஞ்சலி போட்டோ என்ற தெலுங்கு படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார். தொடர்ந்து கற்றது தமிழ் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார்.

தமிழில் முன்னணி நடிகர்களுடன் இணைந்து ஏராளமான படங்களில் நடித்துள்ள அஞ்சலி, தெலுங்கு கன்னடம் மற்றும் மலையாள படங்களிலும் நடித்து வருகிறார்.

தமிழ் தெலுங்கில் பிஸி

அடிக்கடி கிசுகிசுவிலும் சிக்கி வருகிறார் அஞ்சலி. குறிப்பாக நடிகர் ஜெய்யுடன் அஞ்சலியின் பெயர் அடிக்கடி அடிப்பட்டுள்ளது. நடிகை அஞ்சலி நிஷப்தம், ஆனந்த பைரவி, வக்கீல் சாப் ஆகிய தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார். தமிழில் ஓ, பாவ கதைகள் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.


ஹெல்த் கான்சியஸ்

கடந்த சில மாதங்களாக லாக்டவுன் காரணமாக வீட்டிற்குள்ளேயே முடங்கிக் கிடந்தார் அஞ்சலி. ஆனாலும் உடற்பயிற்சி, யோகா என ஹெல்த் கான்ஷியசுடனும் இருந்தார். தனது அப்டேட்டுகளை சமூக வலைதளங்களிலும் வெளியிட்டு வந்தார் நடிகை அஞ்சலி.


அஞ்சலியா இது ?

இந்நிலையில் சமீப காலமாக அவர் ஷேர் செய்த போட்டோக்களிலும் வீடியோக்களிலும் அவர் ரொம்பவே எடை குறைந்து போய் செம்ம ஸ்லிம்மாக உள்ளார். அதிலும் குறிப்பாக கடைசியாக அவர் வெளியிட்ட கறுப்பு நிற பேண்ட் ஷர்ட் போட்டோவில், அஞ்சலியா இது என கேட்கும் அளவுக்கு உள்ளார்.

காஞ்ச எலி போல

அந்த போட்டோவை பார்த்த நெட்டிசன்கள் அதிர்ச்சியாகியுள்ளனர். அஞ்சலியா இது.. என்ன காஞ்ச எலி மாதிரி ஆயிட்டீங்க என்று கேட்டுள்ளனர். இன்னும் சிலர் ஏதோ நோய் வந்தது போல் இருக்கிறீர்கள் என்றும் கேட்டுள்ளனர். சிலர் எடையை குறைத்ததால் அடையாளமே தெரியவில்லை என்றும் கூறியிருக்கின்றனர்.



Comments

Popular posts from this blog

பெண்ணுறுப்பு பகுதியில் தோல் உரிவது ஏன் தெரியுமா...?

சிறந்த உடலுறவுக்கான குறிப்புகள்!

ஆடை இல்லாமல் தூங்குவதால் ஏற்படும் மாற்றங்கள்!