கடைசி நேரத்தில் செய்தாலும் டேஸ்ட் அப்படியே இருக்கும்! லெமன் ரைஸ்..


இதுப்போன்ற வழியை ஃபோலோ செய்யுங்கள். எப்படி செஞ்சாலும் டேஸ்ட் தூளா இருக்கும்

lemon rice in tamil lemon rice tamil lemon rice video


Lemon rice in tamil , lemon rice tamil lemon rice video
 : காலையில் அவசர அவசரமாக லண்ட்ச் பாக்ஸ் கட்ட வேண்டும் என்ற எண்ணத்தில் ஏதோ ஒரு சாதத்தை கிளரி கட்டாமல் இதுப்போன்ற வழியை ஃபோலோ செய்யுங்கள். எப்படி செஞ்சாலும் டேஸ்ட் தூளா இருக்கும். சாதாரணம் லெமன் ரைஸ் தானே என்று எண்ணாதீர்கள். அதிலும் சில பல விஷயம் இருக்கும்.

Lemon rice in tamil :

தேவையான பொருட்கள்

எண்ணெய் – 1 தேக்கரண்டி
கடுகு – 1 தேக்கரண்டி
கடலைப்பருப்பு – 1 தேக்கரண்டி
உளுந்தம்பருப்பு – 1 தேக்கரண்டி
சீரகம் – 1/2 தேக்கரண்டி
மிளகாய்வற்றல் – 3
பச்சைமிளகாய் – 3
துருவின இஞ்சி – 1 தேக்கரண்டி
பெருங்காயத்தூள் – சிறிதளவு
மஞ்சள் தூள் – சிறிதளவு
உப்பு – சிறிதளவு
கறிவேப்பிலை – 1 இணுக்கு
கொத்தமல்லி – அலங்கரிக்க
நிலக்கடலை அல்லது உடைத்த முந்திரிப்பருப்பு – ஒரு கைப்பிடி

செய்முறை

* சாதத்தை விறைப்பாக வடித்துக் கொள்ளவும் (குழைய விடக் கூடாது, தண்ணீரின் அளவைக் குறைத்தாலும் நல்லெண்ணெய் விட்டாலும் ஒட்டாமல் பொல பொலவென உதிராக வரும்) வாயகன்ற பாத்திரத்தில் சாதத்தை ஆற விடவும்.

* கொத்தமல்லி, இஞ்சி, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* எலுமிச்சை பழத்தை சாறு பிழிந்து வைக்கவும்.

* கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுந்தம் பருப்பு, காய்ந்த மிளகாய் போட்டு வெடித்தவுடன் துருவிய இஞ்சி, பச்சைமிளகாய், கறிவேப்பிலை, பெருங்காயத்தூள், மஞ்சள் தூள் போட்டு வதக்கவும்.

* மற்றொரு கடாயில் நிலக்கடலை அல்லது முந்திரியை வறுத்து இதனுடன் சேர்க்கவும்.

* தாளித்த பொருட்களுடன் எலுமிச்சை சாறு சேர்க்கவும்.

* அடுத்து ஆறின சாதத்துடன் தாளிசக்கலவையைக் கொட்டிக் கிளறவும்.

* சாதத்தை நன்றாக கலந்து பின் கொத்தமல்லி தூவிப் பரிமாறவும்.

* சூப்பரான எலுமிச்சை சாதம் ரெடி.

புளிப்புச் சுவை அதிகம் வேண்டுமானால் மற்றொரு எலுமிச்சம் பழத்தைப் பிழிந்து சாறுசேர்த்துக் கொள்ளவும்.

Comments

Popular posts from this blog

இரவு நல்ல தூக்கம் வேண்டுமா? சாப்பிட வேண்டிய மற்றும் தவிர்க்க வேண்டிய உணவுகளை அறிந்துகொள்ளுங்கள்..!

பெண்ணுறுப்பு பகுதியில் தோல் உரிவது ஏன் தெரியுமா...?

சிறந்த உடலுறவுக்கான குறிப்புகள்!