ஐயப்பன் வரலாறு - பாகம் 01

ஐயப்பன் வரலாறு!
முன்னொரு காலத்தில் வரமுனி என்ற முனிவர் வாழ்ந்து வந்தார். அவர் பல காலங்களாக தவமிருந்து இறை எண்ணங்களுடன் சிறந்து இருந்தமையால், அனைத்து முனிவர்களும் இவரின் மீது மிகுந்த மரியாதையையும், மதிப்பையும் வைத்திருந்தனர். ஆனால், வரமுனி முனிவரோ தனது தவ வலிமையினால் தானே உயர்ந்தவன் என்ற தலைக்கணம் கொண்டிருந்தார்.

செருக்கால் சாபம் பெறுதல் :

வரமுனிவரின் தவ வலிமையை கேள்விப்பட்ட அகத்திய முனிவர் அவரை காண அவர் இருந்த இடத்திற்கு சென்றார். ஆனால், வரமுனியோ தன்னை காண வந்திருந்த முனிவர்களான அகத்தியரையும், அவருடன் வந்திருந்த மற்ற முனிவர்களையும் காணாது அலட்சியம் செய்தார். இதனால் மிகுந்த சினம் கொண்ட அகத்திய முனிவர், தவத்தினால் தாங்கள் எவ்வளவு உயரிய நிலையை அடைந்தாலும், மற்றவர்களை மதிக்கத் தெரியாத நீர் எருமையாக பிறப்பீர் என சபித்தார்.

தவறை உணர்தல் :

அகத்திய முனிவர் இட்ட சாபத்தின் அருமை தெரிந்தவுடன் தான் செய்த தவறை எண்ணி தன்னை மன்னிக்குமாறு அகத்திய முனிவரிடம் சாப விமோசனம் அளிக்க வேண்டி அவரை சரணடைந்தார். வரமுனிவர் தான் செய்த தவறை உணர்ந்துவிட்டார் என்பதை அறிந்த அகத்திய முனிவர் கோபம் முழுவதும் நீங்கி அவர் அளித்த சாபத்திற்கான விமோசனத்தை கூறினார்.

சாப விமோசனம் பெறுதல் :

வரமுனிவரே! நான் இட்ட சாபம் சாபமே.... ஆகும். அதை என்னால் திரும்ப பெற இயலாது. ஆகவே, நீர் எடுக்கும் அடுத்த பிறவியில் மகிஷாவாக (எருது) பிறந்து அன்புள்ளம் கொண்ட லோக மாதவான பார்வதியால் ஆட்கொள்ளப்பட்டு சாபத்தில் இருந்து விமோசனம் அடைவாய் என்று கூறினார். 

மகிஷாசுரன் பிறத்தல் :

அசுர குலத்தில் ரம்பன் என்னும் அசுரனுக்கும், ஒரு பெண் எருமைக்கும் மகிஷாசுரன் என்ற அரக்கனும், மகிஷி என்ற அரக்கியும் பிறந்தார்கள்.

வரம் பெறுதல் :

மகிஷாசுரன் அசுர குலத்தில் பிறந்து வளர்ந்து வரும் சூழலில் தேவர்களால் அசுரர்களுக்கு ஏற்படும் பல இன்னல்களை கண்டதும், மகிஷாசுரன் தேவர்களை வெற்றி கொள்ளும் வகையில் பிரம்ம தேவரை நோக்கி கடும் தவம் புரிந்தார்.

மகிஷாசுரனின் கடும் தவத்தால் மனம் மகிழ்ந்த பிரம்ம தேவர் அவன் முன் தோன்றினார். பிரம்ம தேவர் மகிஷாசுரனிடம் உன்னுடைய தவத்தால் யாம் மனம் மகிழ்ந்தோம் என்றும், வேண்டும் வரத்தைக் கேட்பாயாக... என்றும் கூறினார்.

பிரம்ம தேவரை வணங்கிய மகிஷாசுரன் தனக்கு எந்நிலையிலும் எக்காலத்திலும் மரணம் என்பது ஏற்படாமல் இருக்க வேண்டும் என்று வரம் கேட்டான்.

அதற்கு பிரம்ம தேவர், பிறந்த அனைத்து உயிர்களுக்கும் இறப்பு என்பது இன்றியமையாத ஒன்றாகும். அதை எவராலும் எந்த சக்தியாலும் தடுக்க இயலாது என்று கூறி வேறு வரத்தைக் கேட்பாயாக... என்று கூறினார்.

பின் சற்று யோசித்த கர்வம் கொண்ட மகிஷாசுரன் ஆடவர்கள் பலர் பலமும், சக்தியும் கொண்டு இருக்கின்றார்கள். ஆனால் பெண்கள் என்பவர்கள் பலவீனமானவர்கள் என்பதை மனதில் கொண்டு தனக்கு மரணம் என்பது ஒரு பெண்ணின் மூலமாக மட்டுமே நடைபெற வேண்டுமென்று வரம் வேண்டி நின்றார்.

மகிஷாசுரன் வேண்டிய வரத்தினை பிரம்ம தேவரும் அருளி அவ்விடம் விட்டு மறைந்து சென்றார். தன்னுடைய அழிவு என்பது ஒரு பெண்ணால் மட்டுமே என்பதை அறிந்த மகிஷாசுரனின் செயல்பாடுகள் அதிகார மமதையால் எல்லைகள் மீறி நடக்கத் தொடங்கின. தேவர்களை துன்புறுத்துவதும் அவர்கள் அடையும் துன்பத்திலிருந்து இவர்கள் இன்பம் காண்பதும் என அவர்களின் செயல்கள் தொடங்கின.

பின்பு தேவர்கள் பிரம்ம தேவரிடம் சென்று முறையிட பிரம்ம தேவர் காலம் வரும் வரை பொறுமை காக்க வேண்டும் என்று கூறினார். பின்பே, பார்வதிதேவி மும்மூர்த்திகளின் சக்திகளை கொண்டு துர்க்கா அவதாரம் எடுத்து மகிஷாசுரனை வதம் செய்தாள். மகிஷாசுரனை வதம் புரிந்த துர்க்கா தேவி மகிஷாசுர மர்த்தினி என்று அழைக்கப்படுகின்றார்.

பிரம்ம தேவரை நோக்கி தவமிருந்த மகிஷி :

மகிஷாசுரனின் தங்கையான மகிஷி தனது சகோதரனின் இழப்பிற்காக அவரின் மரணத்திற்கு காரணமானவர்களை பழிவாங்க கடும் கோபத்துடன் பிரம்ம தேவரை நோக்கி பல காலங்களாக தவமிருக்கத் தொடங்கினாள். 

மகிஷி பல காலங்களாக இருந்து வந்த தவத்தின் பயனாக பிரம்ம தேவரும் அவளின் முன் தோன்றினார். 

பின்பு மகிஷியை நோக்கி பிரம்ம தேவர் பல காலங்களாக நீர் மேற்கொண்ட தவத்தால் யாம் மனம் மகிழ்ந்தோம்..!! என்று கூறி, வேண்டும் வரத்தினை பெறுவாயாக... என்று கூறினார்.

வரம் பெறுதல் :

எப்பொழுதும் போலவே அசுரர்களை போன்று அரக்கியான மகிஷியும் தன்னுடைய சகோதரரை கொன்றவனை அழிக்கும் சக்தியை அளிக்க வேண்டும் என்றும், தன்னை எவராலும் அழிக்க இயலாதது போன்று இருக்கும் படியும் தனக்கு வரம் அளிக்க வேண்டும் என்று கூறி வேண்டி நின்றாள். 

ஆனால், பிரம்ம தேவரோ இயற்கையை எவராலும் வெல்லவோ.. ஆட்கொள்ளவோ... இயலாது என்றும், இதனை விடுத்து வேறு வரத்தினைக் கேட்பாயாக என்றும் கூறினார். 

தான் வேண்டிய வரம் கிடைக்காத பட்சத்தில் தனக்கு அழிவு நேராத வகையில், ஆனால் தனது சக்தியை அதிகரிக்கும் பொருட்டு, தனது சகோதரனை வஞ்சகம் செய்து அவன் அழிவிற்கு காரணமாயிருந்த தேவர்களை துன்புறுத்தும் பொருட்டும் சற்று நிதானமாக சிந்தித்து தனக்கான வரத்தினை கேட்கத் தொடங்கினாள். 

அதாவது தனது அழிவு என்பது இரு ஆண்களுக்கு இடையே பிறந்த குழந்தையின் மூலமாகவே இருக்க வேண்டும் என்ற வரத்தினை பிரம்ம தேவரிடம் வேண்டி நின்றாள். 

பிரம்ம தேவர் காலம் அறிந்தவராயிற்றே!! மகிஷி கேட்ட வரத்தினால் நிகழும் நன்மை கருத்தில் கொண்டே அவள் கேட்ட வரத்தை அவ்விதமே அளித்து அவ்விடம் விட்டு மறைந்து சென்றார். 

பிரம்ம தேவர் அவ்விடம் விட்டு மறைந்ததும் தனது மனதில் பெருமகிழ்ச்சியுடன் அவள் இருந்த இடமே அதிரும்படி வஞ்சனையும், இருமாப்பும் கலந்த சிரிப்புடன் காணப்பட்டாள் மகிஷி. இரு ஆண்களுக்கிடையே குழந்தை பிறப்பது என்பது சாத்தியமற்றது. எனக்கு அழிவு என்பதே கிடையாது, என்னை எவராலும் அழிக்க இயலாது என்பதை எண்ணி... எண்ணி... மனம் மகிழ்ந்தாள்.

எப்பொழுதும் போலவே தான் பெற்ற வரத்தினால் தன் சகோதரன் மறைவுக்கு காரணமான தேவர்களை அழிக்கும் பொருட்டு அவர்களுக்கு இன்னல்களை தோற்றுவிக்க தொடங்கினாள்.



Comments

Popular posts from this blog

பெண்ணுறுப்பு பகுதியில் தோல் உரிவது ஏன் தெரியுமா...?

சிறந்த உடலுறவுக்கான குறிப்புகள்!

ஆடை இல்லாமல் தூங்குவதால் ஏற்படும் மாற்றங்கள்!