உங்களுக்கு ஏற்ற துணை இதுதான் என்பதை முடிவு செய்யும் ஐந்து நிலைகள்.. காதலர்களே கவனியுங்க..!


ஒவ்வொரு உறவுகளிலும் பலவிதமான நிலைகள் உள்ளன. அவற்றின் முக்கியமானது நம் துணை யார் என கண்டறிவது. ஒருவரை பார்த்து பழகி பிடித்து பிறகு தம் வாழ்க்கையை பகிர்வது என ஒவ்வொன்றும் ஒவ்வொரு நிலையாக பிரிக்கப்படுகின்றன. நம் துணையை கண்டறிவதற்கு பல நிலைகள் உள்ளன. இவற்றை புரிந்து கொள்வதன் மூலம் உங்களுக்கேற்ற துணையை சரியாக தேர்வு செய்யலாம். சில உறவுகள் சந்தோஷமாக வாழ்வதற்கும், சில உறவுகள் முறிந்து போவதற்கும் கூட இவை காரணமாக உள்ளன. இந்த உறவு நிலைகள் எப்படி இருக்க வேண்டும் என்பதை பார்க்கலாம்.


உறவுகளைப் பற்றியும் அவற்றை எவ்வாறு கையாள வேண்டும் என்பதை பற்றியும் தெரிந்து வைத்திருந்தால் எந்த உறவுகளிலும் விரிசல்களே ஏற்படாது. வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் உறவுகளை பெறும் போதெல்லாம் இதை நாம் கவனமாக கண்காணிக்க வேண்டும். ஒருவரின் அன்பை அடைவது அவ்வளவு எளிதான விஷயமல்ல. குறிப்பாக கணவன், மனைவி உறவு என்பது நீடித்து நிலைக்க கூடிய வலுவான ஒன்று. காதலிக்கும் போதோ அல்லது துணையை தேர்வு செய்யும் போதோ இந்த உறவுகளில் ஐந்து நிலைகள் சொல்லப்படுகின்றன. இது குறித்து ஆய்வுகளும் கூட உண்டு என்னும் நிலையில், அந்த ஐந்து நிலைகள் குறித்து தெரிந்து கொள்ளலாம்.

ஆரம்பத்தில் நண்பர்களாக இருக்கும் இருவர்கள் இருவர் பின்னர் காதலர்களாக மாற நினைக்கிறார்கள். இது உறவின் ஆரம்ப நிலை என கூறலாம். இந்த காலகட்டத்தில் ஒருவரின் மீது உள்ள ஈர்ப்பு அவர்களை அடுத்த நிலைக்கு கொண்டு செல்லும்.. இங்கு நிறை குறைகள் என்பது தெரியவே தெரியாது. நம் பார்ட்னரின் எல்லா விஷயங்களும் நமக்கு பிடிக்க தொடங்கும். அவர் இல்லாமல் நம்மால் இருக்க முடியாது, தினசரி அவரை பார்க்க வேண்டும் என்ற எண்ணங்கள் எல்லாம் இந்த ஆரம்ப நிலையில் தோன்றும்.

​துணையை புரிந்து கொள்வதில் உறவில் இரண்டாவது கட்டம்!​

​துணையை புரிந்து கொள்வதில் உறவில் இரண்டாவது கட்டம்!​

ஒருவரை ஒருவர் நன்றாக புரிந்து கொண்ட பிறகு உறவின் அடுத்த கட்டத்திற்கு நாம் நகர்கிறோம். இங்கு ஒருவரின் நிறை குறை அனைத்துமே தெரிய ஆரம்பிக்கிறது. இந்த நிலையில் நாம் ஒருவரை ஒருவர் எவ்வளவு நேசிக்கிறோம், எவ்வளவு புரிந்து வைத்துக் கொண்டிருக்கிறோம் என்பதை தெரிந்து கொள்ள ஒரு வாய்ப்பாகும். அவர்களது குணம் நமக்கு ஒத்துப் போகுமா? இல்லையா? என்பதை யோசிக்கும் நேரமாக கூட அமையலாம். ஒருவேளை உங்களுக்கு இந்த உறவில் திருப்தி இல்லை என்றால் நீங்கள் இந்த நிலையில் அவர்களை தவிர்த்து விடுவீர்கள். இந்த நிலை அடுத்த கட்டத்திற்கு போவதற்கு ஒருவரை ஒருவர் நன்கு புரிந்து கொள்ள வேண்டும்.


​துணையின் மீதான காதல் வலுப்படும் மூன்றாம் நிலை!​

​துணையின் மீதான காதல் வலுப்படும் மூன்றாம் நிலை!​


எந்த ஒரு நிறை குறையையும் பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் அவர்களின் குணம் உங்களுக்கு பிடித்த போனால் அந்த காதல் நீடித்து அடுத்த கட்டத்திற்கு நகர்கிறது. இந்த கட்டத்தில் நீங்கள் அடுத்ததாக என்ன செய்ய வேண்டும் என்று யோசிக்க தொடங்குவீர்கள். ஒருவர் இல்லாமல் மற்றொருவர் வாழ முடியாது என்ற நிலை உங்களுக்கு வரும். இந்த கட்டத்தில் நாம் ஒருவரை ஒருவர் எவ்வளவு நேசிக்கிறோம் என்பதை அறிந்து கொள்ள முடியும். எந்த ஒரு எதிர்மறையான எண்ணங்களுக்கும் இங்கு இடம் இருக்காது. முழுமையாக ஒருவரின் காதலை மற்றொருவர் ஏற்றுக்கொள்ளும் தருணம் ஆகும். இப்போது உங்கள் மனதில் இவரை தவிர வேறு யாரும் நமக்கு கணவராகவோ அல்லது மனைவியாகவோ வர முடியாது என்று ஆழமான எண்ணம் தோன்ற தொடங்கும்.


​துணையை சார்ந்து இருக்கும் நான்காம் நிலை​

​துணையை சார்ந்து இருக்கும் நான்காம் நிலை​

இந்த நான்காவது கட்டத்தில் ஒருவரை ஒருவர் சார்ந்திருக்க தொடங்குவீர்கள். எல்லா விஷயங்களையும் ஒருவருக்கு ஒருவர் பகிர்ந்து செய்ய தொடங்குவீர்கள். வாழ்வில் உள்ள அனைத்து சுக துக்கங்களையும் பகிர்ந்து கொள்ளும் ஒரு நபராக உங்களது பார்ட்னர் இருப்பார். மறைக்காமல் எல்லாவற்றையும் ஒருவரிடம் சொல்ல முடியும் என்றால் அது அவராக இருக்க வேண்டும். இது உங்களது காதலை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சொல்லக் கூடிய ஒரு நல்ல விஷயமாகும். உங்களுக்கு இந்த கட்டத்தில் எல்லாம் சரியான தோன்றினால் அடுத்தது திருமண கட்டத்தை நீங்கள் எட்டலாம்.


​துணையுடன் வாழ்வை பகிர திருமணம் என்னும் ஐந்தாம் நிலை​

​துணையுடன் வாழ்வை பகிர திருமணம் என்னும் ஐந்தாம் நிலை​

மேற்சொன்ன நான்கு நிலைகளையும் கடந்த பிறகு காதல் ஜோடி திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று நினைப்பார்கள். மேற்கூறிய எல்லா விஷயங்களிலும் அவர்களுக்கு ஒத்துப் போவதாலும் அல்லது ஒருவரை ஒருவர் புரிந்து, அனுசரித்து நடப்பதாலும் இந்த நிலைக்கு அவர்கள் வருகிறார்கள். இதே நிலையை திருமணத்திற்கு பிறகும் தொடரும்போது அவர்கள் வாழ்க்கையில் இல்லறம் சிறக்கிறது. எனவே ஒருவரை ஒருவர் நன்கு புரிந்து கொண்டு, இவர்தான் நம் வாழ்வில் நமக்கு வாழ்நாள் முழுவதும் சக மனிதராக வரக்கூடியவர் என்பதை அறிந்த பிறகு திருமண வாழ்க்கையில் இறங்குங்கள். வாழ்க்கை முழுவதும் வசந்தம் இருக்கும்.


Comments

Popular posts from this blog

இரவு நல்ல தூக்கம் வேண்டுமா? சாப்பிட வேண்டிய மற்றும் தவிர்க்க வேண்டிய உணவுகளை அறிந்துகொள்ளுங்கள்..!

பெண்ணுறுப்பு பகுதியில் தோல் உரிவது ஏன் தெரியுமா...?

சிறந்த உடலுறவுக்கான குறிப்புகள்!