தலையில் பேன், ஈறு தொல்லை நீங்க சில எளிய டிப்ஸ்!
வீட்டு வைத்தியங்கள்:
வேப்பிலை ஒரு இயற்கையான பூச்சிக்கொல்லியாகும். வேப்பிலை இலைகளை அரைத்து தலையில் பூசினால் பேன் மற்றும் ஈறுகள் அழியும்.
வினிகரின் அமிலத்தன்மை பேன்களின் உயிர் வாழும் திறனை குறைக்கிறது. எனவே, வினிகரை தண்ணீரில் கலந்து தலையில் பூசினால், பேன் ஈறுகளை எளிதாக அகற்றலாம்.
உப்பு பேன்களின் உடலை உலர்த்தி கொல்லும் தன்மை கொண்டது. குப்பை தண்ணீரில் கலந்து தலையில் பூசி,சிறிது நேரம் வைத்திருந்த பின்னர் தலைக்கு குளித்தால், பேன்கள் அனைத்தும் மடிந்துவிடும்.
பூண்டின் வாசனை பேன்களை விரட்டும் தன்மை கொண்டது. பூண்டை அரைத்து தலையில் பூசினால் பேன் தொல்லையிலிருந்து விடுபடலாம்.
ஆலிவ் எண்ணெய் பேன்களுக்கு மூச்சுத் திணறலை ஏற்படுத்தி கொல்லும். ஆலிவ் எண்ணெயை தலையில் பூசி,சிறிது நேரம் ஊற வைத்த பின்னர் தலைக்கு குளிக்கவும்.
சீயக்காய் தலைமுடியை பலப்படுத்தி பேன்கள் மற்றும் ஈறுகளை எதிர்த்து போராட உதவும். எனவே, தலைக்கு குளிக்கும்போது சீயக்காய் தூலை தண்ணீரில் கலந்து, சிறிது நேரம் கழித்து தலைக்கு குளிக்கவும்.
Comments
Post a Comment