பெண்களே உஷார்... இடது மார்பகத்தில் குத்தல், வலி ஏற்படுகிறதா..? இது கூட காரணமாக இருக்கலாம்!


நெஞ்சு வலி போன்று அல்லாமல் பெண்களுக்கு இடது மார்பக பகுதியில் மட்டும் சுருக்கென்று குத்துவதை போல வலி ஏற்படும். அத்துடன் மார்பக பகுதி கனத்ததைப் போல தோன்றும். இப்படியொரு வலி எதனால் ஏற்படுகிறது? இதற்கும், இதய நலனுக்கும் ஏதேனும் தொடர்பு உண்டா என்று நீங்கள் குழப்பம் அடையக் கூடும்.

மார்பகங்கள் எப்போதும் போல இலகுவானதாக உள்ளதா அல்லது கட்டி ஏதேனும் உருவாகியுள்ளதா என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். இத்தகைய வலி ஏற்படும் சமயத்தில் மார்பகத்தில் இருந்து பால் அல்லது ரத்தக் கசிவு தென்படுகிறதா என்பதை கவனிக்க வேண்டும். மேலும் மேமோகிராஃபி அல்லது சோனோகிராஃபி போன்ற பரிசோதனைகளை செய்து கொள்ள வேண்டும்" என்று தெரிவித்தார்.

இதயநோய் சிகிச்சை நிபுணரின் கருத்து என்ன? 
இடதுபக்க மார்பகத்தில் வலி ஏற்பட்ட உடனே அது இதயநலன் தொடர்புடையதாக இருக்கலாம் என்று பலரும் கவலை அடைகின்றனர். ஆனால், எப்போதுமே இதுதான் காரணம் என்றில்லை. உண்மையை சொல்வதென்றால், இடது பக்க மார்பக வலிக்கும், இதய நலனுக்கும் தொடர்பு கிடையாது. சில சமயம் தசைப்பிடிப்பு அல்லது ஆசிட் ரிஃப்ளெக்ஸ் போன்றவை காரணமாக மார்பக வலி ஏற்படலாம்.

இது குறித்து இதய நோய் சிகிச்சை நிபுணர் ரவிகாந்த் கூறுகையில், “மார்பக பகுதியில் அல்லது மேல் முதுகு பகுதியில் தசைகள் அழுத்தப்படுவதன் காரணமாக ஏற்படுகின்ற வலி இடது பக்க மார்பகம் வரையிலும் பரவலாம். மார்பக எலும்புகளையும், விலா எலும்புகளையும் இணைக்கக் கூடிய குருத்தெலும்புகளில் ஏற்படக்கூடிய அழற்சியின் காரணமாகவும் குத்துதல் போன்ற வலி ஏற்படும்” என்று தெரிவித்துள்ளார்.

பிற காரணங்கள்: வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் காரணமாகவும் இடதுபக்க மார்பகத்தில் வலி ஏற்படக் கூடும். ஆசிட் ரிஃப்ளெக்ஸ் பிரச்சனை காரணமாக இடது மார்பக பகுதியில் எரிச்சல் உணர்வு ஏற்படலாம். சில சமயம் வாயு, வயிறு உப்புசம் போன்ற செரிமானக் கோளாறுகள் காரணமாகவும் இடது மார்பக பகுதியில் வலி ஏற்படுவது உண்டு.

நுரையீரலில் ரத்தம் கட்டுவது மற்றும் நிமோனியா போன்ற காரணங்களால் இடது பக்க மார்பகத்தில் அசௌகரியம் ஏற்படலாம். மார்பக பகுதியில் சுருக்கென்று வலி வந்தால் அது குறித்து மருத்துவரிடம் ஆலோசனை செய்து உரிய சிகிச்சையை எடுத்துக் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது.








Comments

Popular posts from this blog

இரவு நல்ல தூக்கம் வேண்டுமா? சாப்பிட வேண்டிய மற்றும் தவிர்க்க வேண்டிய உணவுகளை அறிந்துகொள்ளுங்கள்..!

பெண்ணுறுப்பு பகுதியில் தோல் உரிவது ஏன் தெரியுமா...?

சிறந்த உடலுறவுக்கான குறிப்புகள்!