அருள்மிகு புத்திரகாமேட்டீஸ்வரர் திருக்கோயில்!

அருள்மிகு புத்திரகாமேட்டீஸ்வரர் திருக்கோயில்!

தினம் ஒரு திருத்தலம் பகுதியில் இன்று அருள்மிகு புத்திரகாமேட்டீஸ்வரர் திருக்கோயிலை பற்றி பார்க்கலாம் வாங்க...

இந்த கோயில் எங்கு உள்ளது?

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள புதுக்காமூர் என்னும் ஊரில் அருள்மிகு புத்திரகாமேட்டீஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ளது.

இந்த கோயிலுக்கு எப்படி செல்வது?

புதுக்காமூர் என்னும் ஊரில் இருந்து நடந்து செல்லும் தொலைவில் அருள்மிகு புத்திரகாமேட்டீஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ளது.

இந்த கோயிலின் சிறப்புகள் என்ன?

இத்தலம் குழந்தை பாக்கியம் அருளும் பிரதான வழிபாட்டு தலமாக உள்ளது.

கோயிலுக்கு வெளியில் தசரதருக்கு தனி சன்னதி உள்ளது. இவர் மன்னர் போல் இல்லாமல், யாகம் நடத்திய நிலையில் இருக்கும் முனிவர் போல காட்சியளிக்கிறார். 

இவர் கைகளில் ருத்ராட்ச மாலையும், கமண்டலமும் வைத்திருக்கிறார்.

கருவறையில் குடை வடிவில் உள்ள 9 தலை நாகத்தின் கீழ் சிவபெருமான், லிங்க வடிவில் காட்சியளிக்கிறார்.

அம்பாள் பெரியநாயகிக்கு, தனிக் கொடிமரத்துடன் கூடிய சன்னதி உள்ளது. 

இத்தலத்தில் பவள மல்லி தலவிருட்சமாக உள்ளது.

வேறென்ன சிறப்பு?

இக்கோயிலின் எதிரே வடக்கில் இருந்து கிழக்காக கமண்டல நதி பாய்கிறது. இந்த நதிக்கரையில் வடக்கு நோக்கி விநாயகரும், அவருக்கு எதிரே ஆஞ்சநேயரும் உள்ளனர்.

ஆஞ்சநேயர் கையில் சங்கு, சக்கரம் உள்ளது மற்றொரு சிறப்பு. இவ்வாறு, எதிரெதிரே விநாயகர், ஆஞ்சநேயரைக் காண்பது மிகவும் சிறப்பாகும்.

என்னென்ன திருவிழாக்கள் கொண்டாடப்படுகிறது?

சிவனுக்கு பெளர்ணமி தோறும் விசேஷ பூஜை நடைபெறுகிறது.

ஒவ்வொரு வருடமும் ஆனி மாதம் பெளர்ணமியன்று யாகம் செய்யப்படுகிறது. 

ஆடி சுவாதியில் லட்ச தீபம், நவராத்திரி, சிவராத்திரி, பிரதோஷ வழிபாடு, ஆனி திருமஞ்சனம், ஐப்பசி அன்னாபிஷேகம், கார்த்திகை சோமவாரம் போன்றவை சிறப்பாக நடைபெறுகின்றன.

எதற்கெல்லாம் பிரார்த்தனைகள் செய்யப்படுகிறது?

குழந்தை வேண்டி ஆறு திங்கட்கிழமைகள் தொடர்ந்து விரதமிருந்து, ஏழாவது திங்கட்கிழமையன்று சிவனுக்கு செவ்வரளி பூ மற்றும் பவள மல்லி மாலை அணிவித்து, மிளகு சேர்ந்த வெண்பொங்கல் நைவேத்தியமாக படைத்து பிரார்த்தனை செய்கின்றனர். 

புத்திர தோஷம், நாக தோஷம் நீங்க கோயில் வளாகத்திலுள்ள வேம்பு, ஆலமரத்தடியில் உள்ள நாகருக்கு தங்கள் நட்சத்திர நாளில் நாக பிரதிஷ்டை செய்தும், புத்திரகாமேஷ்டி யாகம் நடத்தியும் வேண்டிக்கொள்கிறார்கள்.

அனைத்து தோஷங்களும் விலகி நினைத்த காரியம் நிறைவேற இந்த மரத்தை சுற்றி 108 முறை வலம் வந்து வழிபடுகின்றனர். 

இத்தலத்தில் என்னென்ன நேர்த்திக்கடன்கள் செலுத்தப்படுகிறது?

தங்களது வேண்டுதல் நிறைவேறியவுடன் பக்தர்கள் சுவாமிக்கு அபிஷேகம் செய்தும், வஸ்திரம் அணிவித்தும் நேர்த்திக்கடன்களை செலுத்துகின்றனர்.

Comments

Popular posts from this blog

இரவு நல்ல தூக்கம் வேண்டுமா? சாப்பிட வேண்டிய மற்றும் தவிர்க்க வேண்டிய உணவுகளை அறிந்துகொள்ளுங்கள்..!

பெண்ணுறுப்பு பகுதியில் தோல் உரிவது ஏன் தெரியுமா...?

சிறந்த உடலுறவுக்கான குறிப்புகள்!