துணையுடன் வழக்கம்போல் உடலுறவில் ஈடுபட முடியவில்லையா?

துணையுடன் வழக்கம்போல் உடலுறவில் ஈடுபட முடியவில்லையா? இந்த பிரச்னை காரணமாக இருக்கலாம்!

இல்லற வாழ்க்கை இனிமையாக இருக்க செக்ஸ் மிகவும் முக்கியமானது. இது தம்பதியரை உணர்ச்சி மற்றும் உடல் ரீதியாகவும் நெருக்கமாக்குகிறது.

இது தம்பதியரை உணர்ச்சி மற்றும் உடல் ரீதியாகவும் நெருக்கமாக்குகிறது. சிலர் துணையிடம் அன்பாக இருந்தாலும் உடலுறவு என்று வரும் போது ஆர்வம் காட்டாமல் இருப்பார்கள். இதனை மதிப்பீடு செய்து சரி செய்து கொள்வதே இல்லற வாழ்க்கை என்றும் இனிக்கும். 

ஒருசிலர் துணையுடன் உடலுறவைத் தவிர்ப்பதற்கான சில பொதுவான காரணங்கள் பற்றி பார்க்கலாம்.

மன அழுத்தம், பதற்றம், சுயமரியாதை பிரச்சனை

பொதுவாக திருமண வாழ்வில் ஏற்படும் நிதி சிக்கல்கள் மற்றும் பாதுகாப்பின்மை உள்ளிட்டவற்றால் ஏற்படும் மனஅழுத்தம் சிலரை மகிழ்ச்சியாக இருப்பதை பற்றி சிந்திக்க விடாது. 

ஆண்கள் மற்றும் பெண்களில் பாலியல் ஆசை இழக்கப்படுவதற்கு இது ஒரு முக்கிய காரணியாக இருக்கிறது. 

வேலையில் மன அழுத்தம், அன்றாட வாழ்க்கை முறை மற்றும் சுயமரியாதை பிரச்சனைகள் போன்றவை முழுமையாக மனதை ஆக்கிரமிப்பதால் ஒருசிலரால் செக்ஸ் வாழ்க்கை பற்றிய சிந்தனை இல்லாமல் போகிறது.

முந்தைய தீர்க்கப்படாத சண்டைகள்:  

முந்தைய காலங்களில் தம்பதியரிடையே ஏற்பட்ட மோதல்கள் மற்றும் சண்டைகளை முறையாக சரி செய்து பிரச்சனைக்கு தீர்வு காணாமல் இருப்பது செக்ஸ் வாழ்க்கையில் விரிசலை உணர வைக்கிறது. 

தீர்க்கப்படாத சண்டை சிக்கல்கள் தம்பதியரிடையே நீடிப்பது பாலியல் போன்ற நெருக்கமான செயலில் ஈடுபட தடையாக இருக்கிறது.

லிபிடோ இழப்பு: 

லிபிடோ என்பது பாலியல் ஆசை அல்லது பாலியல் தொடர்பான உணர்ச்சி மற்றும் மன ஆற்றலைக் குறிக்கிறது. தம்பதியரில் ஒருவர் லிபிடோ இழப்பு எனப்படும் பாலியல் ஆசை பற்றாக்குறையை எதிர்கொண்டால், அது துணைக்கு எரிச்சலை ஏற்படுத்தும். 

பல காரணங்களால் ஏற்படும் இதில் தவறு யார் பக்கமும் இல்லை என்றாலும், தம்பதியரில் ஒருவருக்கு உறவில் நெருக்கம் காட்ட விருப்பம் இல்லாத நிலை, சந்தேகத்திற்கிடமின்றி, உறவில் மேலும் விரிசலை ஏற்படுத்தும்.

முக்கிய உறவு சிக்கல்கள்: 

தம்பதியரில் ஒருவர் தன் துணையிடம் பொய் சொல்லி இருந்தால், வார்த்தைகளால் காயப்படுத்தி இருந்தால் அல்லது துரோகம் இழைத்திருந்தால், உடல் ரீதியாக காயப்படுத்தி இருந்தால் நிச்சயமாக செக்ஸ் உறவு சிக்கலான ஒன்றாகவே இருக்கும். 

உறவில் நம்பிக்கை இல்லாதது செக்ஸ் அற்ற ஒரு உறவு பாதைக்கு இட்டு செல்கிறது. இது போன்ற நிகழ்வுகளில், எந்தவொரு உடல் உறவையும் விட, உணர்ச்சி ஏற்றத்தாழ்வைத் தீர்ப்பது முன்னுரிமையாகிறது.

துஷ்பிரயோகம் அல்லது போதை: 

ஆல்கஹால் மற்றும் போதைப் பொருட்களை உள்ளடக்கிய எந்தவொரு துஷ்பிரயோகமும் தம்பதியரிடையேயான பாலியல் வாழ்க்கைக்கு பெரும் அச்சுறுத்தலாகும். 

ஆபாச படம் பார்த்து அதற்கு அடிமையாகி அதில் வருவது போன்றே துணையின் விருப்பமின்றி நடந்து கொள்வது அல்லது துணை தன்னிடம் அவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்று கட்டாயப்படுத்துவது தாம்பத்திய உறவை சீர்குலைக்கும். மேலும் இது போன்ற செயல்கள் ஒருவரின் பாலியல் செயல்திறனை பெரிதும் பாதிக்கும்.

Comments

Popular posts from this blog

பெண்ணுறுப்பு பகுதியில் தோல் உரிவது ஏன் தெரியுமா...?

சிறந்த உடலுறவுக்கான குறிப்புகள்!

ஆடை இல்லாமல் தூங்குவதால் ஏற்படும் மாற்றங்கள்!