அருள்மிகு மகுடேஸ்வரர் திருக்கோயில்!

தினம் ஒரு திருத்தலம்.. அறியலாம் வாங்க!


தினம் ஒரு திருத்தலம் பகுதியில் இன்று அருள்மிகு மகுடேஸ்வரர் திருக்கோயிலை பற்றி பார்க்கலாம் வாங்க...

இந்த கோயில் எங்கு உள்ளது?

ஈரோடு மாவட்டத்தில் உள்ள கொடுமுடி என்னும் ஊரில் அருள்மிகு மகுடேஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ளது.

இந்த கோயிலுக்கு எப்படி செல்வது?

கொடுமுடி என்னும் ஊரில் இருந்து நடந்து செல்லும் தொலைவில் அருள்மிகு மகுடேஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ளது.

இந்த கோயிலின் சிறப்புகள் என்ன?

இத்தலத்தில் இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.

இங்கே மூன்று முகம் கொண்ட பிரம்மனை தரிசிக்கலாம். வன்னி மரத்தடியில் இவர் அருள்பாலிக்கிறார்.

ஆஞ்சநேயர் கோரமான பல்லுடன் இங்கே காட்சி தருகிறார்.

சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 210 வது தேவாரத்தலம் ஆகும்.

தேவாரப்பாடல் பெற்ற கொங்கு நாட்டுத்தலங்களில் இது 6வது தலம்.

வேறென்ன சிறப்பு?

இத்தலத்தில் உள்ள வன்னிமரத்தின் வயதை கணக்கிட முடியவில்லை.

மிகவும் பழமையான இந்த மரத்தில் பூ பூக்கும். ஆனால் காய் காய்க்காது. ஒரு பக்கம் முள் இருக்கும். மற்றொரு பக்கம் முள் இல்லை.

இந்த மரத்தின் இலையை தண்ணீரில் போட்டால் எவ்வளவு நாளானாலும் தண்ணீர் கெடுவதில்லை. 

பழநி பங்குனி உத்திர விழாவிற்கு தீர்த்தக்காவடி கொண்டு செல்லும் போது, காவிரி தீர்த்தத்தில் இந்த இலைகளை போட்டு தான் பக்தர்கள் பாதயாத்திரையாக கொண்டு செல்கிறார்கள்.

காவிரி ஆற்றின் கரைக்கருகில் இக்கோயில் உள்ளது. வடக்கிலிருந்து தெற்கு நோக்கி ஓடிவரும் காவிரி ஆறானது இவ்விடத்தில் கிழக்கு நோக்கி திசைமாறிச் செல்கிறது.

என்னென்ன திருவிழாக்கள் கொண்டாடப்படுகிறது?

சித்திரை திருவிழா 11 நாள் கொண்டாடப்படுகிறது.

ஆடிப்பெருக்கன்று ஆயிரக்கணக்கான மக்கள் கூடுவார்கள்.

பௌர்ணமி, அமாவாசை, பிரதோஷ நாட்களிலும் விசேஷ பூஜை உண்டு.

எதற்கெல்லாம் பிரார்த்தனைகள் செய்யப்படுகிறது?

ராகு கேது தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள் இத்தலத்தில் பரிகாரம் செய்து திருமணத்தடை நீங்குதல், குழந்தைப்பேறு ஆகியவை அடையப்பெறுகிறார்கள்.

ஒருவருக்கு எத்தனை வயதோ, அத்தனை குடம் தண்ணீர் எடுத்து விநாயகருக்கு ஊற்ற வேண்டும்.

நாகதோஷம் நீங்க வன்னி மரத்தடியில் கல்லில் செய்த நாகரை பிரதிஷ்டை செய்ய வேண்டும்.

நவக்கிரக பூஜை செய்து, வாழை மரத்திற்கு தாலி கட்டும் பழக்கமும் இங்கு உள்ளது.

அறுபதாம் கல்யாணம், ஆயுள் ஹோமம் ஆகியவை நடத்த இத்தலம் விசேஷமானது.

ஆதிசேஷனால் உருவான கோயில் என்பதால், இங்கு நாகர் வழிபாடு விசேஷம். 

அமாவாசை தினங்களில் பிதுர் தர்ப்பணம் செய்யப்படுகிறது. 

இத்தலத்தில் என்னென்ன நேர்த்திக்கடன்கள் செலுத்தப்படுகிறது?
 
தங்களது வேண்டுதல் நிறைவேறியவுடன் பக்தர்கள் சுவாமிக்கு அபிஷேகம் செய்தும், வஸ்திரம் அணிவித்தும் நேர்த்திக்கடன்களை செலுத்துகின்றனர்.
 

Comments

Popular posts from this blog

இரவு நல்ல தூக்கம் வேண்டுமா? சாப்பிட வேண்டிய மற்றும் தவிர்க்க வேண்டிய உணவுகளை அறிந்துகொள்ளுங்கள்..!

பெண்ணுறுப்பு பகுதியில் தோல் உரிவது ஏன் தெரியுமா...?

சிறந்த உடலுறவுக்கான குறிப்புகள்!