கணவன், மனைவி உறவை பலப்படுத்த...

புரிதல்!

ஆணின் மனநிலை மற்றும் உடல்நிலை எப்படி இருக்கும் என்பதை பெண்ணும், பெண்ணின் மனநிலை மற்றும் உடல்நிலை எப்படி இருக்கும் என்பதை ஆணும் புரிந்துகொள்ள வேண்டும்.

சம உரிமை!

கணவன், மனைவி இருவரும் சமம் என்பதை புரிந்துகொள்ள வேண்டும். அழகு, பணம், மற்ற திறமைகளை ஒப்பிட்டுப் பார்த்து ஒருவரையொருவர் தாழ்வாக நினைக்கும் மனப்பான்மையை விட்டொழிக்க வேண்டும்.

தாக்கி பேசுவது கூடாது!

அடிக்கடி பெண்கள் வீட்டுப் பிரச்னைகளையோ அல்லது கணவரை தாக்கி பேசுவது, அவரை தனக்கு கீழாக இருப்பது போல ட்ரீட் செய்வது போன்ற தேவையில்லாத பிரச்னைக்கு வழிவகுக்கும்.

தாம்பத்யம்!

ஆண், பெண் இணைந்து வாழும் வாழ்வில், தாம்பத்யம் என்பது அவசியமான ஒன்று. அதைப் பற்றிய சரியான புரிதல் ஆண், பெண் இருவருக்குமே அவசியம். தாம்பத்யத்தில் பிரச்னை என்றால், சிகிச்சை அல்லது கவுன்சிலிங் செல்வதற்கு இருவருமே தயங்கக் கூடாது.

இயல்பான உறவு!

தான் விரும்பும் நேரத்தில் தன் மனைவியோ, கணவனோ தாம்பத்யத்துக்கு வர வேண்டும் என்று நினைக்காதீர்கள். அது இயல்பாக நடக்க வேண்டிய ஒன்று.

Comments

Popular posts from this blog

இரவு நல்ல தூக்கம் வேண்டுமா? சாப்பிட வேண்டிய மற்றும் தவிர்க்க வேண்டிய உணவுகளை அறிந்துகொள்ளுங்கள்..!

பெண்ணுறுப்பு பகுதியில் தோல் உரிவது ஏன் தெரியுமா...?

சிறந்த உடலுறவுக்கான குறிப்புகள்!