திருமணம் ஆனவர்கள் முதல் ஒரு வருடம் வரை கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள்!
காதல் திருமணமோ அல்லது பெற்றோர்களால் நிச்சயிக்கப்படும் திருமணமோ எதுவாக இருந்தாலும் முதல் ஒரு வருடம் தம்பதியருக்கு மிகவும் கடினமானதாக இருக்கக்கூடும். காதலிக்கும் போது முழு நேரமும் நாம் காதலர்களோடு செலவிட்டிருக்க மாட்டோம். ஆனால் திருமணத்திற்கு பிறகு முழு நேரத்தையும் அவர்களோடு செலவிடும் போது அவர்களது நிறை குறைகள் தெரிய ஆரம்பிக்கும். இதனால் உணர்ச்சிவசப்பட்டு பிரச்சனையை உண்டு செய்யலாம். தம்பதியர் கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் என்ன என்பதை இப்போது பார்க்கலாம்.
திருமணமான மகிழ்ச்சியில் முதல் சில மாதங்கள் தம்பதிகளுக்கு மகிழ்ச்சிகரமாகவும், புது விதமாகவும் இருக்கலாம். ஆனால் தொடர்ந்து ஒன்றாக வாழ தொடங்கும் போது ஒருவரின் நிறை, குறைகள் தெரிய தொடங்கும். இரண்டு வெவ்வேறு குணங்களைக் கொண்ட நபர்கள் ஒன்றாக வாழ எத்தனிக்கும் போது தொடங்கும் சாதாரண பிரச்சனைகள் தான் இவை. திருமணத்திற்கு முன்பு அவர்களை குறித்து இருந்த கண்ணோட்டமும் திருமணத்திற்கு பிறகான கண்ணோட்டமும் மாறுபடும் போது பிரச்சனை தொடங்குகிறது.

எதனால் முதல் வருடம் கவனமாக இருக்க வேண்டும்!
திருமணமான மகிழ்ச்சியில் முதல் சில மாதங்கள் தம்பதிகளுக்கு மகிழ்ச்சிகரமாகவும், புது விதமாகவும் இருக்கலாம். ஆனால் தொடர்ந்து ஒன்றாக வாழ தொடங்கும் போது ஒருவரின் நிறை, குறைகள் தெரிய தொடங்கும். இரண்டு வெவ்வேறு குணங்களைக் கொண்ட நபர்கள் ஒன்றாக வாழ எத்தனிக்கும் போது தொடங்கும் சாதாரண பிரச்சனைகள் தான் இவை. திருமணத்திற்கு முன்பு அவர்களை குறித்து இருந்த கண்ணோட்டமும் திருமணத்திற்கு பிறகான கண்ணோட்டமும் மாறுபடும் போது பிரச்சனை தொடங்குகிறது.
கலாச்சாரங்களைப் பற்றி பேசுவது!
திருமணமான புதிதில் இருவரும் ஒருவருக்கு ஒருவர் வேறுபட்டவர்கள் இல்லை என்று பேசிக்கொண்டு, சில நாட்கள் சென்றதும் ஒவ்வொருவரின் கலாச்சாரத்தை குறித்தும் தவறாக பேசுவது பிரச்சனையை தூண்டலாம். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான பழக்கவழக்கங்கள், கலாச்சாரங்கள் இருக்கலாம். இரண்டையும் ஒருவருக்கொருவர் மதித்து நடப்பதன் மூலம் மட்டுமே இந்த பிரச்சனைகளில் இருந்து தீர்வு பெற முடியும். இதனை குறித்து விவாதிக்க ஆரம்பித்தால் அது பிரிவில் கொண்டு விடும் வாய்ப்புகள் அதிகம்.
பணத்தை நிர்வகிப்பதில் பிரச்சனை!
திருமணத்திற்கு பிறகு வாழ்க்கை மிகவும் புதியதாக தோன்றலாம். எல்லா செலவுகளையும் நீங்களே நிர்வகிக்க வேண்டி வரலாம். பண பிரச்சினைகள் பெரும்பாலான வீடுகளில் பிரிவுக்கு காரணமாக இருக்கிறது. இருவரின் எதிர்பார்ப்புகள் நிவர்த்தி அடையாமல் போகும் போது அவை விரக்தியை ஏற்படுத்துகின்றன. அதிக கடன் பிரச்சனைகள் பிரிவுக்கு முக்கிய காரணமாக உள்ளது. முதல் வருடத்தில் இந்த கடன் அல்லது நிதி பிரச்சனைகளை ஓரளவுக்கு சமாளித்துவிட்டால், தொடர்ந்து ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு நிதி நிலைமையை நிர்வகித்தால் தம்பதிகள் ஒற்றுமையாக வாழ முடியும்.
தாம்பத்தியத்தில் திருப்தி இல்லாமை!
தாம்பத்திய வாழ்க்கையில் உணர்ச்சிகள் மற்றும் உடல் தேவைகளுக்கும் இடம் உண்டு. இவற்றை பூர்த்தி செய்யாத போது தாம்பத்திய வாழ்க்கையில் விரிசல் ஏற்படுகிறது. முதல் சில மாதங்கள் ஒருவரை ஒருவர் நன்றாக புரிந்து கொள்வதன் மூலம் மட்டுமே சந்தோஷமான இல்லற வாழ்க்கையில் ஈடுபட முடியும். எந்த ஒரு தம்பதிக்கும் தொடங்கியவுடன் மகிழ்ச்சிகரமான தாம்பத்தியம் அமைவதில்லை. இருவரின் ஒத்துழைப்பும், புரிதலும் தான் ஆரோக்கியமான தாம்பத்திய உறவுக்கு வழிவகுக்கிறது.
திருமண வாழ்க்கையின் எதிர்பார்ப்புகள்!
கணவன் மனைவி இடையே எதிர்பார்ப்புகள் அதிகமாகும் போது வருத்தங்களும் அதிகமாகும் வாய்ப்புகள் உள்ளது. எதிர்பார்த்தது நடக்காத போது அதனை மனது ஏற்றுக்கொள்ள மறுக்கிறது. இதனால் ஏற்படும் பிரச்சனைகளால் முதல் ஒரு வருடத்தில் விரிசல்கள் ஏற்படலாம். எதிர்பார்ப்பற்ற வாழ்க்கை நீண்ட நாட்களுக்கு மகிழ்ச்சியாக பயணிக்க உதவும் என்பதை தம்பதிகள் புரிந்து கொள்ள வேண்டும். எதிர்பார்ப்பும் சரியான அளவில் இருந்தால் அந்த குடும்பத்தில் எந்தவித பிரச்சனைகளும் வராது.
Comments
Post a Comment