Posts

Showing posts from August, 2024

விஜய்க்கு அறிவுரை வழங்கிய பிரேமலதா

Image
தவெக கொடியை வெளியிட்ட விஜய்க்கு, பிரேமலதா விஜயகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார். இனி ஒவ்வொரு அடியையும் விஜய் யோசித்து வைக்க வேண்டும் என்று அறிவுறுத்திய அவர், பல சர்ச்சைகள், சவால்களை சந்திக்க வேண்டியது தான் அரசியல் என்றும் கூறினார். மேலும், தங்கள் வீட்டுக்கு விஜய் வருவது புதிதல்ல என்று கூறிய அவர், மகன் விஜய பிரபாகரனுக்கு அவர் நல்ல நண்பர் எனவும் நட்பு பாராட்டினார்.

விஜய் வருகை யாருக்கு ஆபத்து?

Image
ஜெயலலிதாவின் மறைவுக்கு பின் ADMK-வின் வாக்குவங்கி கரைந்து வருகிறது. அந்த DMK எதிர்ப்பு வாக்குகளைத் தான் BJP, NTK, AMMK கட்சிகள் பெற்று வருகின்றன. இந்த சூழலில் விஜய்யின் வரவு, ADMK வாக்குகளை மற்ற கட்சிகளுக்கு செல்லவிடாமல் தடுக்கும் என அரசியல் நிபுணர்கள் கருதுகின்றனர். திருவள்ளுவர். பெரியார், அம்பேத்கர் என தமிழகத்தின் களமறிந்து விஜய் அரசியல் பேசுவதும் அவருக்கு சாதகமாக அமையும் என கருதப்படுகிறது.

மத்திய அரசு திட்டத்திற்கு நிதிஷ் திடீர் எதிர்ப்பு

சிராக் பஸ்வான், சந்திரபாபு நாயுடுவை தொடர்ந்து, வக்பு வாரிய சட்டதிருத்த மசோதாவுக்கு பிஹார் முதல்வர் நிதிஷ்குமாரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். முதலில் இம்மசோதாவுக்கு ஆதரவு தெரிவித்த அவர், தற்போது முஸ்லிம்கள் இதற்கு அச்சம் தெரிவிப்பதாக கூறி, நிலைப்பாட்டை மாற்றியுள்ளார். பிஹாரில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடக்க உள்ளதும், அம்மாநில மக்கள் தொகையில் 18% பேர் முஸ்லிம் என்பதும் குறிப்பிடத்தக்கது.