அழகு குறிப்புகள் மூக்கு

வெண்புள்ளி மறைய

2 டீஸ்பூன் எலுமிச்சைச்சாறுடன் 1 டீஸ்பூன் தேன் சேர்த்து நன்றாக கலக்கவும். பிறகு 1 டீஸ்பூன் சர்க்கரை சேர்த்து நன்றாகக் கலந்து மூக்கின் நுனியின் மீது தேய்த்து வந்தால் கரும்புள்ளிகள், வெண்புள்ளிகள் மறையும்.

தும்மல் பிரச்சனை நீங்க

சோம்பில் உள்ள ஆன்டி-பயாடிக் பண்புகள், தும்மல் பிரச்சனையில் இருந்து விடுவிக்கும். அதற்கு 2 டீஸ்பூன் சோம்பை ஒரு கப் சுடுநீரில் போட்டு நன்கு 15 நிமிடம் கொதிக்க வைத்து இறக்கி வடிகட்டி, தினமும் 2-3 முறை குடித்து வந்தால், தொடர்ச்சியாக வரும் தும்மல் பிரச்சனையில் இருந்து விடுபடலாம்.

மூக்கு அடைப்பு சரிசெய்ய

வெந்நீரில் இஞ்சி துருவலை போட்டு ஆவி பிடிப்பது நல்ல தீர்வாகும். இஞ்சியின் காரம் மூக்கின் வழியாக சென்று அடைப்பை நீக்கும்.

மூக்கு வறட்சி நீங்க

உலர்ந்த மூக்கிலிருந்து விடுபட எளிதான வழி சரியான இடைவெளியில் நீராவியை சுவாசிப்பதுதான். இது உலர்ந்த மூக்கில் உலர்வான சளியை மென்மையாக்குகிறது. பெரிய கிண்ணத்தில் வெந்நீர் விட்டு அந்த நீரிலிருந்து வரும் நீராவியை சுமார் 10 நிமிடங்கள் உள்ளே இழுக்கவும். பிறகு மூக்கை மெதுவாக ஊதுங்கள். நாள் ஒன்றுக்கு 2 முதல் 4 முறை வரை இதை செய்து வரலாம். இது மூக்கு வறட்சியை குறைத்து ஈரப்பதமாக வைத்திருக்க செய்யும்.

Comments

Popular posts from this blog

பெண்ணுறுப்பு பகுதியில் தோல் உரிவது ஏன் தெரியுமா...?

சிறந்த உடலுறவுக்கான குறிப்புகள்!

ஆடை இல்லாமல் தூங்குவதால் ஏற்படும் மாற்றங்கள்!